Monday, 30 September 2013

இன்றைய வேத வசனம்

கர்த்தராகிய நான் நியாயத்தை விரும்பி, கொள்ளைப்பொருளினால் இடப்பட்ட தகனபலியை வெறுக்கிறேன்; நான் அவர்கள் கிரியையை உண்மையாக்கி, அவர்களோடே நித்திய உடன்படிக்கை பண்ணுவேன். (ஏசாயா 61:8)

Sunday, 29 September 2013

இன்றைய வேத வசனம்

"உலகத்தோற்ற முதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள் வருமளவும் பரலோகம் அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும்" ( அப்போஸ்தலர் 3.21)

Friday, 27 September 2013

இன்றைய வேத வசனம்

“ இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக.” ( 1 தெசலொனிக்கேயர் 3.13)

“ So that your hearts may be strong and free from all sin before our God and Father, at the coming of our Lord Jesus with all his saints.(  1 Thessalonians 3.13)

Wednesday, 25 September 2013

இன்றைய வேத வசனம்

"எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, நீ செய்த உன் எல்லாக் கிரியைகளினிமித்தமும் அந்நாளிலே வெட்கப்படாதிருப்பாய்; அப்பொழுது நான் உன் பெருமையைக்குறித்துக் களிகூர்ந்தவர்களை உன் நடுவிலிருந்து விலக்கிவிடுவேன்; நீ இனி என் பரிசுத்தபர்வதத்தில் அகங்காரங்கொள்ளமாட்டாய்." ( செப்பனியா 3.11)

"In that day you will have no shame on account of all the things in which you did evil against me: for then I will take away from among you those who were lifted up in pride, and you will no longer be lifted up with pride in my holy mountain." (Zephaniah 3:11)

Monday, 23 September 2013

இன்றைய வேத வசனம்


அழைக்கப்பட்டவராக இல்லாமல், நீங்கள் தெரிந்து கொள்ளப்பட......!

வேதப் புத்தகத்தில் மத்தேயு 20:16   இல்... “ இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராயும், முந்தினோர் பிந்தினோராயும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்”

அன்பான சகோதர, சகோதரிகளே!

அழைக்கப்பட்டவர்கள் அநேகம் பேராக இருந்தாலும் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் சில பேர்தான்.

உதாணரமாக ஒரு அரசாங்க வேலைக்காக தேர்வு எழுதுகின்றோம். அந்த தேர்விலிருந்து சில பேர் தெரிவு செய்யப்பட்டு, நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவார்கள். அந்த நேர்முகப் பரீட்சையிலும் சில பேரை தெரிவு செய்து வேலைக்கு எடுப்பார்கள்.

அதுபோல தான் பரலோகத்திற்கு தெரிந்து கொள்ளப்படுவதென்பது இலகுவான காரியமல்ல. இறுக்கமான வாசல் வழியாக உட்பிரவேசிக்க வேண்டும்.
ஆனால் பாதாளத்திற்குப் போகிற வாசல் பெரிய வாசலாக இருக்கின்றது. அங்கு நிறைய வாசல்கள் இருக்கின்றன.

ஆனால் பரலோகத்திற்கு ஒரேயோரு வாசல்தான். ஜீவனுக்குப் போகிற வழியே மகிமையானது.  சத்தியமானது. நித்தியத்திற்கு கொண்டு செல்லக் கூடியது..
அதற்காக தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் பாதாளத்திற்கு தப்புகிறார்கள். அதற்காக தெரிந்து கொள்ளப்டடவர்கள் பாக்கியவான்கள். பாக்கியவதிகள்.


இந்த உலகத்திற்கு ஒரு ஆரம்பம் இருக்கிறது. அது போல ஒரு முடிவும் இருக்கின்றது. நாம் அழைக்கப்பட்டால் மட்டும் போதாது. தெரிந்து கொள்ளப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

பரலோக பவனி வரும் போது வெண்மையான குதிரையில் செல்லும் இயேசுவோடு சேர்ந்து போகும் அந்தக் கூட்டத்தில் காணப்படுகிறவனாக நாம் காணப்பட வேண்டும்.

தேவனுடைய பிள்ளைகளே இந்த பூமியிலே வாழ்வதற்கு நமக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கின்றது. அந்த வாய்ப்பை நாம் பாவத்திற்குள்ளாக்காமல், நித்திய ஜீவனுக்குள் போகிறவர்களாக இருக்க வேண்டும்.

சோர்ந்து போய் இருக்கும் தேவ பிள்ளைகளே, பல சஞ்சலங்களாலும் கவலைகளாலும் ஜெபிக்க முடியாமல் இருப்பவர்களே...

இந்த உலகத்திலும் நீ போக வேண்டிய தூரம் வெகு தூரமாகவுள்ளது.

கர்த்தர் எலியாவை எழுப்பின போது.. எலியா தன்னை இடைவெட்டிக் கொண்டு 40 நாட்கள் இரவும் பகலும் ஓடி தேவ பர்வதத்திற்கு வந்து சேர்ந்தார். சோர்ந்து போன அவனை 40 மைல் தூரம் தேவ பர்வதம் வரும் வரும் மட்டும் ஓட வைத்தார்.

நமக்கு ஆகாரமாக ஆவிக்குரிய மன்னாவைத் தருகிற ஆண்டவர்.. நாம் சோர்ந்து பொகாமல் ஓட வேண்டுமென்று ஆண்டவர் எதிர்பார்க்கிறார்..

அது தான் ஆண்டவர் சொல்கிறார் அழைக்கப்பட்டவர்கள் அநேகம் பேர் ஆனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் சிலர்.

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே!
நம்முடைய பெயர்கள் ஜீவ புத்தகத்தில் எழுத்தியிருக்கிறது என்வென்று சிந்தித்துப் பாருங்கள்..

இன்றைக்கும் ஆண்டவரை் ஒவ்வொருவரையும் அழைக்கின்றார்... வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றவர்களே எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்...

என்னண்டடை வாருங்கள் என அன்போடு அழைக்கின்றார்.

நாம் ஆண்டவரின் பாதத்தில் வந்துவிட்டோம்... அந்த அழைக்கப்பட்ட கூட்டத்திலிருந்து தெரிந்து கொள்ளபட்ட கூட்டத்திற்கு வர வேண்டும்.

நாம் ஜெபத்தில் வல்லமையுள்ளவர்களாக...இருக்க வேண்டும்..
பரிசுத்தத்திற்காக...
பரிசுத்த ஆவியானவரின் வல்லமைக்காக...
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபைக்காக.. அனுதினமும் ஜெபிக்க வேண்டும்..
ஆண்டவரின் சமூகத்தினண்டையில் புகவேண்டும்.. ஆமென்.

Saturday, 21 September 2013

இன்றைய வேத வசனம்

“தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.” (எபிரெயர் 4.12)

ஆவிக்குரிய வாழ்க்கை

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே...!

உலகம் தோன்றுவதற்கு முன்னரே கர்த்தல் நம்மீது அன்பு கூர்ந்தார். நம்மை பாவங்களிலிருந்து மீட்க தமது குமாரனையே நமக்காக அனுப்பி ஆக்கினைக்குள்ளாக ஒப்புக்கொடுத்தார். நம்மைப் பாவங்களிலிருந்து மீட்டெடுத்தார்.

பூமிக்குரிய இந்த வாழ்க்கை உண்மையல்ல. இவ்வாழ்க்கை நீர்க்குமிழி போன்று நிலையற்றது. வரப்போகின்ற நித்தியத்திற்கு ஆயத்தப்படுத்துகிறதற்கான வாழ்க்கை தான். உண்மையானது. அனைவரும் அறிந்திருக்க வேண்டியது. 

சரீரத்தையும் சரீரத்தோடு ஐம்புலன்களையும் ஆண்டவன் படைத்தான்.  உலகத்தோடு தொடர்பு கொள்ள சரீரத்தையும் சரீரத்திற்குள் ஐம்புலன்களையும் வைத்தார்.

மனிதனில் மிக முக்கியமானது ஆவி. ஆவியில் 2 பகுதிகள் உள்ளன.
ஒரு பகுதியில் அவனுடைய குணாதிசயங்கள், அவனுடைய சுபாவங்கள்..
அவனுடைய உயிர் அல்லது ஜீவன் இருக்கிறது.

இன்னொரு பகுதியில் ஆண்டவர் வெற்றிடமாய் வைத்திருக்கிறார்.

அந்த வெற்றிடத்தில் கர்த்தர் ஆவியால் அபிசேகம் பண்ணி நிரப்ப விரும்புகிறார். சாத்தானும் அதனைப் பிடிக்க நினைக்கிறான்.
மனிதனுடைய ஆன்மா தவறாய் நடக்கும் தவறாய் சிந்திக்கக் கூடும். ஆவியானவர் மனிதனுடைய ஆவியை ஆட்கொண்டு அவனை வழி நடத்தும் விரும்புகிறார்.

ஆவிக்குரிய மனிதனுடைய வாழ்க்கை தான் சிறப்பானதாக இருக்கவேண்டுமெனின்,  ஆவியில் தேவனோடு இடைப்பட்டு, பரிசுத்தமாய் வாழ்வது.  அப்படி இருக்கும்  போது தான் அவனுடைய அப்படி இருக்கும்போது தான் அவனுடைய ஆத்மாவும் செழிப்பாக இருக்கும் சரீரமும் செழிப்பாக இருக்கும்.

ஆவியால் நடத்தப்படுகின்ற மேன்மையான வாழ்க்கையில் ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைகளும் இருக்க வேண்டும். ஆனால் அனேகரிடத்தில் ஆவிக்குரிய வாழ்க்கை வெறுமையாக உள்ளது.

ஆவியானவர் என்ன செய்கிறார் முதலாவது மனிதனை ஆட்கொண்டு ஆவியின் மூலமாக ஆத்மாவையும் சரீரத்தையும் வழி நடத்த விரும்புகிறார்.
அப்படி வழி நடத்தப்படும் போதுதான் உண்மையுள்ள கிறிஸ்தவனாக வாழ முடியும்.
ஆவியானவர் தான் நம்மை வழி நடத்துவார். அவர் தான் நித்திய ஜீவனுக்குள் நம்மை அழைத்துச் செல்வார்.
ஆவியால் நடத்தப்படுகிற வாழ்க்கையே கிறிஸ்தவ வாழ்க்கையில் முக்கியானது.

ஒரு ரெபேக்காளை மணமகளா அழைத்துச் சென்றது.....இஸ்ரவேலரை கானானுக்கு வழிநடத்தியது  ஆவியானவரே.. மேகமாய் அவர்களை வழிநடத்தினார்.

நம்மை நிச்சயமாய் பரலோகம் வரை வழி நடத்தக் கூடிய ஒருவர் ஆவியானவரே.  எந்தவொரு மனிதனும் பரிசுத்த ஆவியால் வழி நடத்தப்படுகிறானோ அவன் தான் வெற்றியடைய முடியும்.  அவன் தான் பரிசுத்தமாய் வாழ முடியும்.





ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனுடைய  ஆவி ஆத்மா சரீரத்தை பரிசுத்தப்படுத்துவது தான் ஆண்டவருடைய முக்கியமான காரியம்.

ஏனெனில் சாத்தான் ஒரு மனுசனை பாவத்திற்குள் தள்ளுவதற்கு என்னென்ன வழிகளுண்டோ அவ்வளவு வழிகளையும் பயன்படுத்துவான்.
இன்றைய காலகட்டத்தில் சாத்தான் அதிகமாக இணையத்தளங்களை மிக அதிக மாக பயன்படுத்தி பாவத்திற்குள் தள்ளி விடுகிறான்.

மனிதனுடைய ஆவி ஆத்மா சரீரத்தை பரிசுத்தப்படுத்துவதற்காக 5 காரியங்களை கர்த்தர் செய்கிறார்.ஆவி ஆத்ம சரீரம் எல்லாம் பரிசுத்தமாய் இருக்கவேண்டும். சாத்தானிலிருந்து விலகி, அசுத்தங்களிலிருந்து விலகி, பரிசுத்தமாய் இருந்தால் தான் ஆவியானவர் நித்தியத்திற்குள் நம்மை அழைத்துச் செல்வார்.

பரிசுத்த வேதாகமத்தில் எபிரேயர் 12.14 இல், பரிசுத்தமில்லாமல் ஒருவனும் பிதாவைத் தரிசிக்க முடியதது. என்று  சொல்லப்படுகிறது.

அதேபோல், யோசுவா 3:5 இல்,  பரிசுத்தம் இல்லையென்றால் அற்புதத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது என்று கூறப்படுகிறது.

உங்களைப் பரிசுத்தப் படுத்திக் கொள்ளுங்கள் கர்த்தர் அற்புதம் செய்வார்.

பரிசுத்தமில்லாமல் ஆண்டவரிடத்தில் ஜெபிக்க முடியாது. நம்முடைய பாவங்கள் முன்பாகவே நிற்கும். பரிசுத்தமில்லாமல் மகிமையின் ராஜ்யத்தில் பிரவேசிக்கவே முடியாது.

அதனால் தான் நாம் நாம் முக்கியமாக தெரிந்து கொள்ளவேண்டியது, ஆவிக்குரிய வாழ்க்கையில் மிக முக்கியமானது பரிசுத்தமாக வாழ்தல்.
ஆகவே அன்பானவர்களே, நாம் ஆவிக்குரிய வாழ்க்கையில் பரிசுத்தமாய் வாழ ஆண்டவருக்குள் ஒப்புக் கொடுத்து ஜெபம் பண்ண வேண்டும். பரிசுத்த ஆவியானவரிடம் வழி நடத்துமாறு ஆத்ம தாகத்தோடு வேண்டிக்கொள்ள வேண்டும். கர்த்தர் நிச்சயம் அற்புதம் செய்வார்...ஆமென்!

Friday, 20 September 2013

இன்றைய வேத வசனம்

"உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்." (யோவான்4.23)

Monday, 16 September 2013

இன்றைய வேத வசனம்

“நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு” ( 2 தீமோத்தேயு 2:15)

“ Let it be your care to get the approval of God, as a workman who has no cause for shame, giving the true word in the right way.” ( 2 Timothy 2 :15)

கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பேன்......


Sunday, 15 September 2013

இன்றைய வேத வசனம்

இதோ, உம்முடைய கட்டளைகள்மேல் வாஞ்சையாயிருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும்.
கர்த்தாவே, உம்முடைய வாக்கின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக.( சங்கீதம் 119:40,41)

Thursday, 12 September 2013

இன்றைய வேத வசனம்


மூன்று சத்தியங்கள்

மூன்று சத்தியங்கள் மனிதனை பாவத்திலிருந்து முழுமையாய் விடுதலையாக்கும். நாம் அதனை முக்கியமாக அறிந்திருக்க வேண்டும்.

1. யோவான் 8:36
“குமாரன் உங்களை விடுதைலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.”

2. யோவான் 8:32
“சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.”

3. 2 கொரிந்தியர் 3:16,17
“எங்கே ஆவியானவர் உண்டோ அங்கே விடுதலை உண்டு.”

விடுதலைக்காக தேடி அங்கலாய்க்கும் மக்களுக்கு ஆண்டவர் கொடுத்திருக்கும் வாக்குத்தத்தங்களே இவை.

பிசாசின் பிடியில் அறியாமல் சிக்கியிருக்கும் மக்களுக்காக நம் தேவன் நமக்காக அளித்த வாக்குத்தத்தங்கள்.

Wednesday, 11 September 2013

இன்றைய வேத வசனம்

"உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார். அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோசமாய் மகிழ்ந்து தம்முடைய அன்பின் நிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய் களிகூருவார்" (செப்பனியா 3:17)


Monday, 9 September 2013

இன்றைய வேத வசனம்

"உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின்ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக"  (வெளிப்படுத்தல் 1 :5)

Sunday, 8 September 2013

இன்றைய வேத வசனம்

"நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப் பேச அறியும்; துன்மார்க்கருடைய வாயோ மாறுபாடுள்ளது." ( நீதிமொழிகள் 10 : 32)

Friday, 6 September 2013

இன்றைய வேத வசனம்

“ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன். நீ என்னை மகிமைப்படுத்துவாய்.” (சங்கீதம் 50: 15)


And call upon me in the day of trouble: I will deliver thee, and thou shalt glorify me.(Psalm 50:15)

Wednesday, 4 September 2013

இன்றைய வேத வசனம்

தேசமே பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார். (யோவேல் 2 :21)

Tuesday, 3 September 2013

மனிதனை உயிர்ப்பிக்கும் வேத வசனம்...!


வேத வசனம் நம்முடைய வாழ்வில் எவ்வாறு வழி நடத்துகின்றது.. நம்மைத் தேற்றுக்கின்றது... வசனத்தினூடாக நம் தேவனாகிய கர்த்தர் வழி நடத்துவதை இதுவரை உணராமல் இருப்போமானால் நாம் வேத வசனத்தை சரிவர தியானிப்பதில்லை என்பதை சிந்திக்க வேண்டும். 
 
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,  

கிறிஸ்தவர்களில் அநேகர் தொடர்ச்சியாக வேத வசனத்தை வாசித்து தியானிப்பதில்லை. வேதத்திலிருந்து விளக்கங்களை பெற விரும்பாமல் ஞாயிற்றுக் கிழமைகளில்  ஆராதனையிலும், பிரசங்கங்களிலிருந்தும் அறிந்து கொள்ளலாம் என்று எண்ணுகிறார்கள்

இவ்வாறு நாம் இருந்து விடுவோமானால் எமது வாழ்வை சாத்தான் தனக்கு சாதகமாக்கிக் கொள்வான். 

வேத வசனம் இன்று படித்து விட்டு நாளை மறந்துவிடவோ, இல்லது தூக்கி எறிந்துவிடக் கூடிய காகிதமோ அல்ல. ஆவியானவரின் தூண்டுதலோடு எழுதப்பட்ட ஜீவனுள்ள வார்த்தைகள். ஆயிரக்கணக்கான வருடங்கள் உருண்டோடினாலும் இன்றும் அது மனிதனை உயிர்ப்பிக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. 

நாம் தொடர்ந்து வேதத்தில் பிரியமாய் இருந்து வாசிப்போமானால்,  தவறு செய்யும் பட்சத்தில் சரியான வசனம் உங்கள் ஞாபகத்திற்கு வந்து உங்களை எச்சரிக்கும், ஆறுதல்படுத்தும். வாழ்க்கை பாதையில் வசனம் உங்களை காப்பாற்றும். எத்தனை ஆவலோ வேதத்தை வாசிக்கிறோமோ அத்தனை ஆவலோடு தேவனும் நம்மோடு பேசுவார்.


வேத வசனம் நமது வாழ்வில் எவ்வாறு உறுதுணையாக அனுதினம் நம்மை வளரச் செய்கின்றது . நமக்கு ஆகாரமாய் விளங்குகின்றது.. 


மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.” (ஏசாயா 55.10,12)


நிலத்தில் விதை விதைக்கும் போது, அது முளைவிட்டு செழிப்பாக வளர நீர் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. வானத்திலிருந்து பொழிகின்ற மழை நீரானது  நிலத்தில் வீழ்ந்து விதை முளைக்க காரணமாயிருந்து, அது விதைத்தவனுக்கு நல்ல விளைச்சலைக் கொடுக்க வல்லதாக உள்ளது.  

 அதுபோலவே நமது தேவனாகிய கர்த்தருடைய வார்த்தைகளும் நமது வாழ்க்கையில் நாம் வளருவதற்கு ஏற்ற நல்லது கெட்டவைகளை உணர்த்தி நம்மை வளரச் செய்கின்றது. நமக்கு ஆகாரமாக விளங்குகின்றது.
அதுமட்டுமல்ல ஆண்டவருடைய வனசம் நமது கால்களுக்கு தீபமாய் விளங்குவதுடன், பாதைக்கு வெளிச்சாமாக இருக்கின்றது.  நம்மை செம்மையான வழிகளிலே நடத்திச் செல்கின்றது.

 ஆண்டவர் நம் ஒவ்வொருவரையும் உருவாக்கும் போது களிமண்ணாகவே உருவாக்குகிறார். அவருடைய வேத வசனமே  நம்மை உயிர்ப்பித்து பெறுமதி மிக்கவர்களாக மாற்றுகிறது. 
உள்ளத்தில் வாஞ்சையோடு, தாகத்தோடு, பாரத்தோடும் வேத வசனங்களை வாசித்துதியானிக்க  வேண்டும்

நாம் வேத வசனத்தை தியானிக்கவோ வாசிக்கவோ எடுக்கும் போது சாத்தான் நம்மை தடை செய்வான். துன்பம், உபத்திரவம் வரும். எத்தகைய உபத்திரவமோ துன்பங்களோ வந்தாலும் ஆண்டவருடைய வசனத்தை விட்டுவிடவோ சோர்ந்துபோகவோ கூடாது. உலக கவலை, ஐஸ்வரிய இச்சை வரும். அவற்றையெல்லாம் விடுத்து நாம் கர்த்தருடைய வார்த்தையை வாசித்து தியானிக்க வேண்டும். 

இயேசு கிறிஸ்து வசனத்திற்கு முதலிடம் கொடுத்து வாஞ்சையோடு ஜெபம் செய்துள்ளதை வேதப் புஸ்தகம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை; ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை. அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது.” (ஆதியாகமம்-2 :5,6)  

 இங்கு நாம் அவதானிக்க வேண்டிய  சொல் “பனி”- தேவனின் வசனத்திற்கு ஒப்பனையாக வருகிறது. அத்தோடு அளவில் சிறிதாயும் வெண்மை நிறமாயும் தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பாயிருந்தது என வேத வசனம் வர்ணிக்கப்படுகிறது. 

நாம் வேத வசனத்தை ருசித்து  உள்ளத்தோடு ஒன்றித்து வாசிக்க வேண்டும். ஆண்டவர் நம்மோடு கூடப் பேசுவார். 
நாம் புதிதாய் பிறந்த குழந்தையைப் போல, களங்கமில்லாத ஞானப்பாலாகிய வேதவசனத்தில் வாஞ்சையாய் இருக்க வேண்டுமென கூறப்படுகிறது.  புதிதாய்ப் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலே குழந்தைக்கு ஆகாரமாய் இருக்கும். குழந்தைகள் வளர வளர பால் குடிப்பதை மறந்து விடுகின்றன. ஆனால் நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கின்ற குழந்தைகளைப் போன்று ஞானப் பாலாகிய வேத வசனத்தில் வாஞ்சையாய் இருக்க வேண்டும்.

“நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.”( 1 பேதுரு-2:3)

யோசேப்பைக்குறித்து: கர்த்தரால் அவனுடைய தேசம் ஆசீர்வதிக்கப்படுவதாக; அது வானத்தின் செல்வத்தினாலும், பனியினாலும், ஆழத்திலுள்ள நீரூற்றுகளினாலும், ( உபாகமம் 33:13 ) என நமக்கு தெளிவு படுத்துகின்றது.

இஸ்ரவேல் வம்சத்தார் அதற்கு மன்னா என்று பேரிட்டார்கள்; அது கொத்துமல்லி அளவாயும் வெண்மைநிறமாயும் இருந்தது, அதின் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஓப்பாயிருந்தது. (யாத்திராகமம் 16:31)

வேதம் தேனிலும் இனிமையானது என சங்கீதப் புஸ்தகம் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.. 
எவ்வளவோ இனிப்புள்ள பண்டங்கள் இருந்தாலும் நாம் வேத வசனத்தை வாசிக்க வாசிக்க அதன் மகத்துவத்தை அறந்து கொள்ளலாம்.

 பூக்களிலுள்ள தேனை தேனீக்கள் சுறுசுறுப்பாய்  சேகரிப்பதை போல நாமும் வேத வசனத்தை வாஞ்சையாய் வாசிக்க வேண்டும் 

தினந்தோறும் வேதத்தை கருத்தாய் வாசித்து,  ஜெபத்தொடு  தியானித்தால் ஆவியானவர் நம்மை வழி நடத்துவார். 

ஆமென். அல்லேலூயா..




வேதப் புத்தகத்திலிருந்து சில வசனங்கள்
உபாகமம்- 32:2 , 33:13

ஏசாயா 5:10,15

சங்கீதம்- 119: 89,105,160

எபேசியர்- 6:17

1பேதுரு 2:3, 1:23
மாற்கு 4:15
யாத்திராகமம்- 16:4,31
ஆதியாகமம்- 2: 6,5
சங்கீதம் 19:

ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக பிதாவே உமக்கு ஸ்தோத்திரம்.  கோடான கோடி ஸ்தோத்திரம்..கர்த்தாவே இவ்வேளையில், உமது வசனங்களை தியானிக்கவும் அவற்றைக் கற்றுக் கொள்ளவும் நீர் செய்த கிருபைக்காக உமக்கு நன்றி. தகப்பனே வேதத்தைக் கருத்தாய் வாசித்து விளங்கிக்கொள்ள கற்றுத் தாரும். நாங்கள்  ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறந்த குழந்தைகளைப் போல, வெத வசனத்தில் பிரியமாய் இருந்து தியானிக்க, வாஞ்சையாயிருக்க கிருபை தாரும்.. புதிதாய் பிறந்த குழந்தையைப் போல, தினமும் வேதத்தில் பிரியமாய் இருக்க ஆசீர்வதியும்.. எங்கள் ஜெபத்தைக் கேட்டு பதில் கொடுப்பவரே உமக்கு நன்றி.  ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம். சகலதையும் செய்து முடிக்க வல்லவராய் இருப்பவரே உமக்கு நன்றி ராஜா. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஜீவனுள்ள பிதாவே. ஆமென்

இன்றைய வேத வசனம்

"நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்."( ஏசாயா 53: 5)


தெள்ளுப் பூச்சியையும் வாழ வைக்கும் நம் தேவன்.....


Monday, 2 September 2013

இன்றைய வேத வசனம்

"நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயது முதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்."( 2 தீமோத்தேயு 3:14,15)

Sunday, 1 September 2013

இன்றைய வேத வசனம்

"மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்; பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும்" (உபாகமம் 32 : 2)