Saturday, 30 August 2014

பழைய ஏற்பாட்டு பண்டிகையும், கிறிஸ்த்துவின் பொருளும்

"முதலாம் மாதம் பதினாலாம் தேதி அந்திநேரமாகிற வேளையிலே கர்த்தரின் பஸ்காபண்டிகையும், அந்த மாதம் பதினைந்தாம் தேதியிலே, கர்த்தருக்குப் புளிப்பில்லா அப்பப் பண்டிகையுமாய் இருக்கும்; ஏழுநாள் புளிப்பில்லா அப்பங்களைப் புசிக்கவேண்டும்". (லேவி 23:5-8)

ஏழு நிறம் கொண்ட வானவில் மழைக்கு பின் வந்து, தேவன் நோவாவுடன் செய்த உடன்படிக்கையை இன்றளவும் நிறைவேற்றி வருகின்றது. அதே போல கர்த்தரால் உருவாக்கப்பட்ட ஏழு பண்டிகைகளும் இன்றளவும் நிறைவேறிகொண்டு வருகின்றது. பஸ்கா மற்றும் புளிப்பில்லா அப்பப் பண்டிகை,இளவேனிற் பருவத்தின் அதாவது வசந்த காலத்தின் ஆரம்பத்திலும்; பெந்தெகொஸ்தே, அல்லது வாரங்களின் பண்டிகை, வசந்த காலத்தின் முடிவிலும்; எக்காளப் பண்டிகை, பாவ நிவாரணப் பண்டிகை, எட்டு நாட்கள் அடங்கிய கூடாரப் பண்டிகை அல்லது அறுப்புக்கால பண்டிகை இலையுதிர்ப் பருவத்திலும் அனுசரிக்கவேண்டும் என்று கர்த்தர் மோசேவிற்கு திட்டவட்டமாய் அறிவித்தார். திருச்சபையும் இயேசு என்னும் வசந்த காலத்தில் தொடங்கி, அந்திகிறிஸ்து என்னும் இலையுதிர் காலத்தில் முடியப்போவதை இந்த பண்டிகைகள் நமக்கு தெளிவாக காண்பிக்கின்றன. அந்திகிறிஸ்து என்னும் இலையுதிர் காலத்தின் துவக்கம், திருச்சபை காலத்தின் நிறைவு என்பதை இந்த பண்டிகைகள் மூலமாக நாம் அறிந்து கொள்ள முடியும். அதாவது அந்திகிறிஸ்துவின் ஆட்சிக்கு முன்பாக மணவாட்டி திருச்சபை, மணவாளன் இயேசுவுடன், திருமண வீடாம் பரலோகத்திற்கு சென்றுவிடும்.

பழைய ஏற்பாட்டு காலத்தில் கர்த்தரால் உருவாக்கப்பட்ட இந்த ஒவ்வொரு பண்டிகையும் புதிய ஏற்பாட்டு காலத்தில் நிறைவேறியும் நிறைவேறிக் கொண்டும், இனி வரும் நாட்களில் நிறைவேறப்போவதுமாக இருகின்றது. இந்த வருடத்தில் ஏப்ரல் மாதம் பதினான்காம் தேதி பஸ்கா பண்டிகையும் பின்னர் அதைதொடர்ந்து பதினைந்தாம் தேதி முதல் இருப்பத்து இரண்டாம் தேதி வரை புளிப்பில்லா அப்பப் பண்டிகையும் கொண்டாடப்பட்டது. இவைகளை புதிய ஏற்ப்பாட்டு கிறிஸ்த்தவர்களாகிய நாம் ஏன் அறிந்து கொள்ள வேண்டும். எனக்கும் அந்த பண்டிகைகளுக்கும் என்ன சம்பந்தம் என்று அநேர்கர் கேட்கின்றனர். இதுவரை ஏற்ப்பட்ட நான்கு இரத்த சிவப்பு சந்திரன்கள் அனைத்தும் யூதர்களின் பண்டிகை நாட்களில் தான் வந்து மிகப்பெரிய மாற்றத்தை இஸ்ரயேல் நாட்டிற்கு தந்துள்ளது. இந்த வருடம் ஏப்ரல் பதினான்காம் தேதியில் ஒரு சந்திர கிரகணம் வந்ததது. அதன் பின்னர் இஸ்ரேலுக்கும், காசாவிற்கும் போர் உண்டானது. இவையெல்லாம் இயேசுவின் வருகை சமீபம் என்பதை நமக்கு தெள்ளத்தெளிவாக கான்பின்கின்றது. அதைப்பற்றி வரும் நாட்களில் விரவாக எழுதுகின்றேன்.

இயேசு யூத குலத்தில் பிறந்தவர் என்பதை நாம் நன்கு அறிவோம். அவரை அப்பா என்று அழைக்கும் நாம் நம்மை ஆவிக்குரிய யூதர்களாக மாற்றிக்கொள்ள முற்ப்படுவதில்லை. யூதர்கள் இயேசுவை புறக்கணித்ததால் அவர் நம்மை அந்த இடத்தில் வைக்க ஆசைப்படுகின்றார். நாமோ இன்றும் நான் இந்த ஜாதி, அந்த ஜாதி என்று சொல்லிக் கொண்டு நாம் ஒரு ஆவிக்குரிய யூத ஜாதி என்பதை மறந்து விட்டோம். பவுல் எழுதுகின்றார், “ஒலிவ மரத்தின் சில கிளைகள் முறித்துப் போடப்பட்டிருக்க, காட்டொலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளியாய் இருகின்றாய் (ரோமர் 11: 17) என்று புறஜாதியரான காட்டு ஒலிவமரமாகிய விசுவாசிகள், யூதர்களான இஸ்ரயேல் தேசத்து ஒலிவ மரங்களுடன் இயேசு ஓட்ட வைத்துள்ளதை அழகாக விளக்கியுள்ளதை சென்ற வாரம் பார்த்தோம்.

நாம் வாழும் உலகத்தில் அநேக பண்டிகைகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டது தான். நாம் அனைவரும் விமர்சையாக கொண்டாடி வரும் ஈஸ்டர் மற்றும் கிறிஸ்மஸ் கூட மனிதர்களால் ஒரு நினைவு கூறுதலுக்காக உருவாக்கப்பட்டதாகும். ஈஸ்டர் என்ற வார்த்தையோ கிறிஸ்மஸ் என்ற வேதத்தில் ஆதியாகமத்தில் தொடங்கி வெளிப்படுத்துதல் வரை எங்கும் குறிப்பிடவில்லை. கிறிஸ்மஸ் சமயத்தில் நாம் ஒலிப்பெருக்கிளை உபயோகிக்க காவல் துறையினரிடம் நாம் அனுமதி பெறத்தேவையில்லை. எல்லோரிடம் சென்று இயேசு உங்கள் வாழ்வில் பிறப்பாராக என்று தைரியமாக சொல்லலாம். இது போன்ற சலுகைகள் கிறிஸ்மஸ் நாட்களில் நமக்கு கிடைப்பதால் நாம் அதைப் நிச்சயமாக நற்செய்தியை அறிவிக்க பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது உலகம் சார்ந்த காரியமாக உள்ளது. ஆனால் ஆவிக்குரிய கிறிஸ்த்தவர்கள் கர்த்தரால் உருவாக்கப்பட்ட ஏழு பண்டிகைகளை அனுசரிக்காவிட்டாலும் அதைப் பற்றி நிச்சயமாய் அறிந்து கொண்டிருக்க வேண்டும். “ஏழு பண்டிகைகளும் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது” (கொலோ 2:16-17) என வேதம் நமக்கு தெளிவாக போக்கின்றது. இயேசுவே பண்டிகை நாட்களில் தேவாலயம் சென்றதாக வேதாகமத்தில் வாசிக்கின்றோம்.
ஆமென்..அல்லேலூயா

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக
நன்றி- விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

Friday, 29 August 2014

கர்த்தருடைய உக்கிரகத்தின் நாள்

கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது; அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும்; தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார். - (செப்பனியா 1:18) .

ஒரு பணக்கார பெண் ஒரு வைத்தியரிடம் தன் கால் வலிக்காக பார்க்க சென்றிருந்தாள். அந்த வைத்தியர், 'உனக்கு முன் நான்கு பேர் இருக்கிறார்கள். நீ போய் உன் பேர் வரும் போது வா' என்று அனுப்பினார். அதற்கு அந்த பெண் 'நான் யார் தெரியுமா? நான் நினைத்தால் உன்னை வேலையிலிருந்தே எடுத்து விட முடியும், ஏன் நான் கை நீட்டி உன்னை அடிக்கலாம், இந்த நாட்டின் சட்டப்படி யாராவது வைத்தியரை அடி

கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே சடிதியாய் அழிவு வரும். அப்போது மனிதருடைய வெள்ளியும் பொன்னும் அவர்களை தப்புவிக்கமாட்டாது. தங்கள் செல்வ பெருக்கினால் மகிழ்ந்து, உலகத்தில் உள்ள அத்தனை அக்கிரமங்களையும் செய்து கொண்டு, சந்தோஷமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் மேல் அழிவு சீக்கிரமாய் வரும். 'ஐசுவரியவான்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் நிர்ப்ந்தங்களினிமித்தம் அலறி அழுங்கள். உங்கள் ஐசுவரியம் அழிந்து, உங்கள் வஸ்திரங்கள் பொட்டரித்துப்போயின. உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருந்தது, அக்கினியைப்போல உங்கள் மாம்சத்தைத் தின்னும் கடைசி நாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள்' (யாக்கோபு 5:1-3) என்று வேதம் எச்சரிக்கிறது.  ஐசுவரியவான்களின் மேல் கர்த்தரின் நாளில் தீங்கு சடுதியாய் வரும்.

நம் தேவன் எரிச்சலின் தேவன். அவருடைய பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு. கிருபையின் காலம் நிறைவடையும்போது, மனந்திரும்புதலின் காலமும் நிறைவடையும். 'உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள் மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்' (லூக்கா 21:34) என்று இயேசுகிறிஸ்து எச்சரித்தார்.

பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும். யாரும் தப்ப முடியாது. மக்கள் தங்கள் தங்கள் வேலைகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு, கர்த்தரை மறந்து, தங்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும்போது சடுதியாக முடிவு வரும். அவர்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் வரும். அப்போது யாரும் தப்ப முடியாது. ஒருவேளை அதிக பொருட்களை சேர்த்து வைத்ததினால், ஒரு மனிதன் தனக்குள்ளாக இப்படி சொல்லிக் கொள்வானேயானால், 'ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான். தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். - (லூக்கா 12:19-20).

நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள் மேல் வராதபடிக்கு கர்த்தருடைய நாள் என்று வந்தாலும் அவரை சந்திக்க நீங்கள் ஆயத்தமா? இன்று மரணம் நேரிட்டாலும் நான் கர்த்தரை சந்திப்பேன் என்ற நிச்சயம் உங்களுக்கு இருக்கிறதா? மரணத்தின் பின் மனம் திரும்புதல் இல்லை, இரட்சிப்பு இல்லை, எந்த நினைவும் அங்கு இல்லை. வாழ்ந்திருக்கும் இந்த நாளில் தானே அவருடைய இரட்சிப்பை பெற்று கொள்ள ஆயத்தமா? 'பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு, பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்; அவருடைய கோபாக்கினையின் மகாநாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள்' (வெளிப்படுத்தின விசேஷம் 6:15-17). பூமியின் ராஜாக்களிலரிருந்து அடிமைகள் வரைக்கும் அநேகர் தங்களை ஆயத்தப்படுத்தி கொள்ளவில்லை. ஆனால் மகாநாள் வந்தபோதோ அவர்கள் தங்களை ஒளித்து கொள்ள வகை தேடுகிறார்கள். ஆனால் தங்களை ஒளித்து கொள்ளவோ, மறைந்து கொள்ளவோ முடியாது. ஆகவே கிடைக்கப் பெற்றிருக்கும் இந்த நாட்களில் தானே, கிருபையின நாட்கள் நிறைவுபெறுமுன்னே, இரட்சிக்கப்படுவோம். அவரை தேடி அவரை பற்றி கொள்வோம். 'கர்த்தருடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்துவருகிறது; கர்த்தருடைய நாளென்கிற சத்தத்துக்குப் பராக்கிரமசாலி முதலாய் அங்கே மனங்கசந்து அலறுவான். அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் இடுக்கமுமான நாள்; அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள், அது இருளும் அந்தகாரமுமான நாள், அது மப்பும் மந்தாரமுமான நாள்' (செப்பனியா 1:14-15).

த்தால் 500 பணத்தை கட்ட வேண்டும் அதை ஒரு நிமிடத்தில் கட்டி நான் வெளியே வந்து விடுவேன்' என்று அகங்காரத்தோடு பேசினாள். அதற்கு அந்த வைத்தியர், 'நானும் உன்னை அடித்து, அதே 500 பணத்தை கட்டி வெளியே வந்துவிடுவேன்' என்று கூறினார். சில பணக்காரர்களுக்கு பணம்தான் தங்கள் பெலன், அது அவர்களை எப்போதும் காப்பாற்றும்  என்று நம்பி கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் பணம் ஒன்றுமில்லாமற்போகும் என்பதை அவர்கள் அறிவதில்லை. அவர்களுடைய இருதயத்தில் அவர்களுடைய பொருள் அவர்களுக்கு அரணான பட்டணம் போலிருக்கிறது, அதனால் அதை கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று துணிகரம் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இயேசுகிறிஸ்து 'ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்' என்றார் - (லூக்கா 19:25).
ஆமென்..அல்லேலூயா
நன்றி- அனுதின மன்னா

Thursday, 28 August 2014

தாறுமாறாக்கப்பட்ட பாஷை

நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுகிறதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார். அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்; அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள். பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில்  தாறுமாறாக்கினபடியால், அதின்பேர் பாபேல் என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார். -  (ஆதியாகமம் 11:7-9)

நீங்கள் என்றாவது உலகில் எத்தனை பாஷைகள் உண்டென்று யோசித்திருக்கிறீர்களா? அவைகள் எப்படி வந்தது என்று உங்களுக்கு தெரியுமா? மொழி ஆராய்ச்சியாளர்கள் மொழிகள் எப்படி வந்தது என்று இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள், ஒரு மொழி பேசும் குடும்பத்திலிருந்து தான் மற்ற மொழிகள் வந்திருக்க வேண்டும் என்று. அவர்கள் இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கட்டும். ஆனால், வேதத்தில் நமக்கு தெளிவாக பாஷைகள் எப்படி வந்தது என்று எழுதப்பட்டிருக்கிறது. அதையே நாம் விசுவாசிப்போம். பூமியெங்கும் வழங்கின பாஷையை கர்த்தர் தாறுமாறாக்கினார் என்று வசனம் சொல்கிறது. அதற்கு முன் பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரே விதமான பேச்சும் இருந்தது (வசனம் 1).

தேவன் ஏன் அதை தாறுமாறாக்கினார்? ஏனென்றால் மனிதன் கர்த்தருக்கு விரோதமாக எழும்பினபடியால், தேவன் அந்த காரியத்தை செய்தார். மனிதர்கள் ஒன்று சேர்ந்து தேவனுக்கு விரோதமாக கலகம் செய்து, செய்ய ஆரம்பித்த முதல் முரண்பாடான காரியமும் அதுதான். அவர்கள் ஒரு கோபுரத்தை மாத்திரம் கட்ட திட்டமிடவில்லை, அதற்கு மேலான ஒன்றை செய்ய ஆரம்பித்தார்கள். நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள் (வசனம் 4). இங்கு கர்த்தர் எங்கே? அவரை குறித்து அவர்கள் பயப்படாதபடி, அவர்களுடைய திட்டங்களில் அவர் இல்லாதபடி செய்ய ஆரம்பித்தார்கள். ஒருவேளை அவர்கள் நினைத்திருக்கலாம், திரும்பவும் தேவ கோபாக்கினை வந்து, ஒரு வெள்ளம் வந்தால், வானளாவும் இந்த கோபுரத்தின்மேல் ஏறி தப்பித்து கொள்ளலாம் என்று. எப்படியாயினும், அவர்கள் தேவனில்லாதபடி தங்களுக்கென்று ஒரு ராஜய்த்தையும், தங்கள் பெயருக்கென்று ஒரு கோபுரத்தையும் கட்ட ஆரம்பித்தனர். ஆகவே தேவன் இறங்கி வந்தார். அவர் அப்படி வந்து செய்திருக்காவிட்டால், அந்த மனிதர்கள், நோவாவின் காலத்தில் இருந்த பாவத்தைவிட அதிக பாவத்தை செய்து, தேவன் வேறு முறையில் உலகத்தை அழிக்கும்படியான நியாயத்தீர்ப்பை பெற்றிருப்பார்கள்.

கர்த்தர் அவர்கள் பாஷையை தாறுமாறாக்கினபடியால், அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள, புரிந்து கொள்ள கூடாதிருந்தது. அப்போது அவர்கள் அந்த கோபுரத்தை கட்டுவதை விட்டுவிட்டார்கள். அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்.

ஆனால், தேவனுக்கு ஒரு திட்டம் இருந்தது. அவருடைய திட்டத்தை நாம் பெந்தேகோஸ்தே நாளில் பார்க்கிறோம். 'அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். வானத்தின்கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள். அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள்' (அப்போஸ்தலர் 2:3-6). வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்த வந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அந்த இடத்திலே கூடி வந்திருந்தார்கள். அப்போது பரிசுத்த ஆவியானவரால் மேல்வீட்டறையிலே கூடியிருந்த 120 பேரும் வெவ்வேறு பாஷையிலே பேசினபோது, அங்கு வந்திருந்து அனைத்து மக்களும் எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள் (வசனம்7). அவர்கள் தங்கள் மொழியில் அவர்கள் தேவனுடைய மகத்துவங்களை பேசினதை கேட்டபோது, ஆச்சரியப்பட்டார்கள். ஆம், தேவன், குழப்பத்தின் இடமாகிய பாபேலில் அவர்கள் ஒரே பாஷையை பேசினபோது, அதை தாறுமாறாக்கினவர், அவர்கள் தேவனை பற்றிக்கொள்ளாமல், தேவனுக்கு முதலிடத்தை கொடாமல், தங்களுக்கு பெயர் உண்டாக்கும்படி அவர்கள் செய்தபடியால், அந்த இடத்தில் பாஷையை தாறுமாறாக்கினவர், பெந்தேகோஸ்தே நாளில், அவர்கள் பேசின வார்த்தைகள் மற்றவர்கள் விளங்கி கொள்ளும்படி செய்தார். உலகில் உள்ள ஜனம் இரட்சிப்பை பெற்றுகொள்ளும்படி, அவர் அந்த நாளில் வெவ்வேறு பாஷைகளை பேச வைத்தார். அந்த நாளில் இரட்சிப்பின் செய்தியை பேதுரு எழுந்து நின்று அறிவித்தபோது, மூவாயிரம் பேர் இரட்சிக்கப்பட்டார்கள். அல்லேலூயா! பரலோகத்தின் பாஷை குழப்ப பாஷையல்ல, இரட்சிக்கும் பாஷையே!

கர்த்தருடைய இரட்சிப்பு எல்லா மொழி பேசும் மக்களுக்கும் உரியது. 'தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்' (வெளிப்படுத்தின விசேஷம் 5:9-10). ஆம் பரலோகத்தில் சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து வந்த ஜனங்கள் அல்லேலூயா என்று பாட்டுக்களை பாடுவார்கள். ஒவ்வொரு மொழிகளிலுமிருந்து தேவனுக்கு துதிகள் செலுத்தப்படும்.

ஆமென் அல்லேலூயா!

நன்றி- அனுதின மன்னா

Wednesday, 27 August 2014

முதலிடம் யாருக்கு?

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். - (மத்தேயு 6:33).

ஸ்காட்லாந்தை சேர்ந்த எரிக் லிடல் என்னும் வாலிபர்; தன்னை சீனாவுக்கு மிஷனெரியாக செல்ல அர்ப்பணித்திருந்தார்;. அவருக்கு பல சிறப்பு திறமைகளும் காணப்பட்டன. குறிப்பாக கால்பந்து வீரனாகவும், ஓட்டப்பந்தய வீரனாகவும் சிறந்து விளங்கினார். கால்பந்தில் ஸ்காட்லாந்து  தேசிய அணியிலும், ஓட்டப்பந்தயத்தில் இங்கிலாந்திலும் பிரபலமாக திகழ்ந்தார். 100 மீட்டர் ஓட்டபந்தயத்தில்  எரிக் நிகழ்த்திய சாதனையை இங்கிலாந்தில் 35 வருடங்களுக்கு யாராலும் முறியடிக்க முடியவில்லை. 1924-ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இவருக்கு கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஓட்டப்பந்தயத்திற்கான தேர்வு ஓட்டம் ஒரு ஞாயிற்றுக் கிழமைக்கு குறிக்கப்பட்டிருந்தது. எரிக் ஞாயிற்றுகிழமை  ஆராதனைக்கு செல்ல வேண்டும் என்பதால் ஓட மறுத்து விட்டடார். உலகின் புகழை சம்பாதிப்பதைவிட தேவனுக்கு கீழ்ப்படிவதே சால சிறந்தது என்பதே அவர் நன்கு அறிந்திருந்தார், மட்டுமல்ல, அதே ஞாயிற்றுகிழமையில் ஒரு ஆலயத்தில் பிரசங்கம் பண்ண ஒப்புக்கொண்டு அதை நிறைவேற்றினார். இவருடைய இச்செயலை தேவன் கனம் பண்ணினார். எப்படியெனில், மூன்று நாட்களுக்கு பின் நடந்த அந்த ஒலிம்பிக் ஓட்ட பந்தயத்தில் சிறப்பாக வெற்றி பெற்று உலக சாதனை நிகழ்த்தினார். தம்மை கனம் பண்ணுகிறவர்களை கனம் பண்ணுகிற தேவனல்லவா நம் தேவன்!

தான் அர்ப்பணித்திருந்தபடியே சீனாவுக்கு மிஷனெரியாக சென்று மகிமையான ஊழியத்தை நிறைவேற்றினார். 1945ஆம் ஆண்டு மறுமைக்குள் பிரவேசித்தார். இவருடைய பெயர் பரலோகில் மட்டுமல்ல, இப்பூமியிலும் எல்லோராலும் கனப்படுத்தப்பட்டது.

இதை வாசிக்கிற நாம் நம் தேவனுக்கு எப்படி முதலிடம் கொடுககிறோம்? எத்தனை நாட்கள் சிறு சிறு காரியங்களை சாக்குபோக்காக காட்டி ஞாயிறு ஆராதனையை புறக்கணித்திருக்கிறோம்! சிலரது வாழ்க்கையில் இடறல்கள், போராட்டங்கள, பாடுகள், துன்பங்கள் வந்தாலொழிய மற்ற எவ்விதத்திலும் தேவனை தேடுகிற உணர்வே அவர்களுக்கு  வருவதில்லை. அவர்கள்; முதலிடம் கொடுப்பது சமுதாய அந்தஸ்திற்கும் ஐசுவரிய வாழ்விற்குமே!

தாவீது தன் மகன் சாலமோனிடம், 'நீ தேவனை தேடினால் உனக்கு தென்படுவார், நீ அவரை விட்டுவிட்டால் அவர் என்றைக்கும் கைவிடுவார்' என்று கூறுகிறார். அவ்வசனத்தை நமக்கு அன்பான ஆலோசனையாகவும், அதே வேளையில் எச்சரிப்பாகவும் எடுத்து கொள்ள வேண்டும்.

தேவனுக்கு நம் வாழ்வில் முதலிடம் கொடுக்கும் போது, உலகத்தாரின் பார்வையிலே நாம் ஒரு சில நன்மைகளை வீணாக இழப்பதுபோல தோன்றலாம். உதாரணமாக ஞாயிற்று கிழமை நமது வியாபார ஸ்தலத்தை மூடிவிட்டு ஆலயத்திற்கு செல்லவும், குடும்பத்தோடு மகிழ்வாய் இருக்கவும் தீர்மானிக்கலாம். அதனால் அன்றைய வியாபாரம் பாதிக்குமே, அது மற்றவர்கள் வசமாகுமே என்று பிறர் யோசிக்கலாம். ஆனால் தேவனை முக்கியப்படுத்தியதால் வருமானம் குறைந்தாலும் அந்த குறைந்த வருமானத்தை தேவன் ஆசீர்வதித்து கடனில்லாத வாழ்வை அளிக்க முடியும் அல்லது அந்த நாளின் வருமானத்தை மற்ற ஆறு நாட்களில கூட்டி கொடுக்கவும் முடியுல்லவா? இப்படி ஒவ்வொரு காரியத்திலும் தேவனுக்கு முதலிடம் கொடுககும்போது, தேவன் நம்முடைய தேவைகளை அதிசய விதமாய் சந்திக்க வல்லவராயிருக்கிறார்.

தேவனுக்கு நம் முதன்மையையும் சிறந்ததையும் கொடுப்போம். அவருடைய ராஜ்யத்தை தேடுவோம். அவருடைய நீதியை தேடுவோம்.  அப்போது தேவன் நம் ஒவ்வொருவருடைய தொழிலிலும், படிப்பிலும்;, குடும்பத்திலும்;  நம்மை முதலிடத்திற்கு கொண்டு வருவார்.

ஆமென் அல்லேலூயா!
நன்றி- அனுதின மன்னா

Monday, 25 August 2014

உணர்வில்லாத இருதயம்

அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்பொருட்டு, நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். - (லூக்கா 16:27-28).

ஒரு சர்க்கஸ் நடைபெற்று கொண்டு இருந்த இடத்தில் கோமாளிகள் நின்று எல்லாரையும் சிரிக்க வைத்து கொண்டிருந்தனர். ஜனங்கள் தங்களையே மறந்து அந்த கோமாளிகள் செய்யும் கோமாளிதனத்தை இரசித்து பார்த்து கொண்டிருந்தனர். திடீரென்று அந்த சர்க்கஸ் உரிமையாளர் முன்னே வந்து, அந்த சர்க்கஸ் கூடாரம் தீப்பிடித்து இருப்பதாகவும், உடனே எல்லாரையும் வெளியேறும்படியும்  கேட்டுக்கொண்டார். ஆனால் ஜனங்களோ, இதுவும் ஒரு சிரிப்புக்காக சொல்லப்படும் காரியம் என்று நினைத்து இன்னும் சிரிக்க ஆரம்பித்தனர். அந்த முதலாளியோ எல்லாரையும் வெளியேறும்படி கெஞ்ச ஆரம்பித்தார். பின்னர்தான் மக்களுக்கு புரிய வந்தது, அது சிரிப்புக்காக அல்ல, நிஜம்தான் என்று. ஆனால் ஏற்கனவே கொட்டகை முழுவதும் தீப்பிடித்து விட்டபடியால், உயிர் பிழைத்தவர்கள் மிகவும் குறைவானவர்களே.

அதைப்போலவே ஒரு ஐசுவரியவான் தான் நரகத்தின் அக்கினியில் எரியும்போது, லாசருவை தன் சகோதரரிடத்தில் அனுப்பும்படிக்கும், அவர்கள் அந்த நரக அக்கினியில் சிக்கி கொள்ளாதபடி லாசரு சென்று எச்சரிக்கும்படியாகவும் அவனை அவனுடைய தகப்பன் வீட்டிற்கு அனுப்பும்படி ஆபிரகாமிடம் கெஞ்சுகிறான் (லூக்கா 16:27-28). 'ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவி கொடுக்கட்டும் என்றான். அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான். அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்' (லூக்கா 16:29-31). எத்தனை சோகமான காட்சி! அத்தனை நாட்கள் பூமியிலிருந்த நாட்களில் தன்னுடைய சகோதரர்கள் மேல் இல்லாத கரிசனை நரகத்தில் எரியும்போது அந்த ஐசுவரியவானுக்கு வருகிறது, ஆனால் ஏற்கனவே காலம் கடந்து விட்டபடியால், ஒன்றுமே செய்யமுடியாத நிலைமை!

'நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும்,  ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும் (மத்தேயு 24:37-39). கடைசி நேரம் வரை ஜனங்கள், சந்தோஷமாய் உலகத்தை அனுபவித்து கொண்டு, யார் எங்களை அசைக்க முடியும் என்று வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஜலப்பிரளயம் வரப்போகிறது, பூமியை அழிக்க போகிறது என்று நோவா சொன்ன வார்த்தைகளுக்கு செவிகொடாமல், அவர்கள் தங்கள் இஷ்டம் போல வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு நாள் வந்தது. ஜலப்பிரளயம் வந்தது, ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோனது! என்ன ஒரு பரிதாபமான நிலைமை! அவர்கள் உணர தொடங்கும்போது, ஏற்கனவே நேரம் கடந்து விட்டபடியால், அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே காலம் இருக்கும்போதே கர்த்தரின் சத்தத்திற்கு செவிகொடுத்து இரட்சிக்கப்படும்படி வந்துவிட வேண்டும். நாளை பார்த்து கொள்ளலாம் என்று நாட்களை தள்ளிப்போட்டால், ஒருவேளை நாளை வராமலே போகலாம்! ஆகவே நாட்கள் பொல்லாதவைகளாய் இருப்பதால் காலத்தை பிரயோஜனப்படுத்தி கொள்வோமாக!

கர்த்தர் நீதியுள்ளவர், அவர் எல்லாரும் அவரை குறித்து அறிந்து கொள்ளும்படியான தருணத்தை கொடுக்கிறார். அவருடைய சத்தத்திற்கு செவிகொடுக்கிறவர்கள் பாக்கியவான்கள். செவிகொடாமற் போகும்போது, கருணையுள்ள தேவன், நீதியுள்ள தேவனாய் இருக்கிறபடியால், செவிகொடாதவர்களுக்கு அந்தநாளில் அவரும் செவிகொடாமலே போவார். ஆகையால் இந்த நாளே இரட்சண்ய நாள் என்று இரட்சிப்பின் கோட்டைக்குள்ளே வந்து விடுவோமாக!

ஆமென்...அல்லேலூயா
நன்றி- அனுதின மன்னா

Friday, 22 August 2014

புல்லுக்கு ஒப்பான ஜீவியம்

நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே. - (யாக்கோபு 4:14).

ஒரு வைத்தியர் தன்னுடைய நோயாளி ஒருவரை தொடர்பு கொள்ள முயன்று கிடைக்காமல், மிகவும் கஷ்டப்பட்டு கடைசியில் ஒருவகையாக டெலிபோன் மூலமாக அவரை தொடர்பு கொண்டு, 'நீங்கள் செய்த பரிசோதனைகளின் ரிசல்ட் வந்து விட்டது. உங்களுக்கு கெட்ட செய்தி முதலில் தெரிய வேண்டுமா? அல்லது அதைவிட மிக மோசமான செய்தி தெரிய வேண்டுமா?' என்று கேட்டார். அப்போது நோயாளி, 'முதலில் எனக்கு கெட்ட செய்தியை சொல்லுங்கள்' என்று கூறவும், டாக்டர், 'நீங்கள் இன்னும் ஒரு நாள் தான் உயிரோடு இருப்பீர்கள்' என்று கூறினார். அதற்கு நோயாளி, ஐயோ, இதைவிட கெட்ட செய்தி ஒன்றுமில்லை, ஆனால் நீங்கள் சொன்னீர்களே, இதை விட மோசமான செய்தி என்று, அது என்ன? என்று கேட்டபோது, டாக்டர், 'இந்த ரிசல்டை சொல்ல நான் நேற்றிலிருந்து முயற்சி செய்திருக்கிறேன்' என்று கூறினார்.

நம்முடைய வாழ்க்கை கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறது என்று வேதம் சொல்கிறது. நம்முடைய வாழ்க்கை அத்தனை குறைவானது. நாளை நமக்கு என்ன நடக்கும் என்று நமக்கு தெரியாது. மனிதனுக்கு தான் இன்று தான் மரிக்கபோகிறோம் என்று தெரிந்தால் கடைசி நிமிடம் வரை பாவம் செய்து, கடைசி நிமிடத்தில் மனம் திரும்பி கொள்ளலாம் என்று பாவத்திற்கு மேல் பாவம் செய்து கொண்டே இருப்பான். அதனால்தான் கர்த்தர் அதை இரகசியமாகவே வைத்திருக்கிறார்.

உலகம் மனிதனை பிடித்து இழுத்து கொண்டிருக்கிறது. எங்களுக்கு தெரிந்த ஒரு உறவினர், சமீபத்தில் மிகவும் வியாதிப்பட்டு, மரணத்திற்க்கு சமீபித்திருந்தார். அப்போது வெளிநாட்டில் இருக்கும் அவருடைய மகளுக்கு சொல்லி, எல்லாரும் வந்து பார்த்து விட்டு போனார்கள். உறவினர்கள் எல்லாரும் வந்து பார்த்துவிட்டு, அவர் இன்னும் ஒரு நாள்தான் உயிரோடு இருப்பார் என்று கூறிவிட்டு மனைவிக்கு ஆறுதல் சொல்லிவிட்டு போனார்கள். இரண்டு நாட்கள் கழித்து, ஒன்றுமே சாப்பிடாத மனிதர், பல்லில்லாத வாயிலும் நொறுவை தீனி வாங்கி சாப்பிட ஆரம்பித்தார். தன் மனைவியிடம், பேங்க் புக்கை என்னிடம் கொண்டுவா, நான் உடல் நலமில்லாத போது என் பணத்தை எவ்வளவு செலவு செய்தாய் என கேட்க ஆரம்பித்தார். அதை கண்ட உறவினர்கள், வாயடைத்து போனார்கள். உயிருக்கு போராடினாலும், உலகமும், பண ஆசையும் மனிதனின் இருதயத்தை விட்டு போவதில்லை. நாளை மரித்தால் எந்த மனிதன் தன்னோடு கூட செல்வத்தை எடுத்து கொண்டு போவான்?

நம் வாழ்க்கை மிகவும் குறுகியதாக இருப்பதால், நாளை என்ன நடக்கும் என்று அறியாதவர்களாக நாம் இருப்பதால், கர்த்தரிடம் நம் வாழ்க்கையை அர்ப்பணித்து விட வேண்டும். அவர் நம் காலங்களை அறிந்திருக்கிறபடியால், அவரிடம் நாம் அர்ப்பணித்து விடும்போது, நமக்கு நேரிடும் எல்லா காரியஙகளையும் அவர் பொறுப்பெடுத்து கொள்வார்.

உலகத்திற்கும், பணத்திற்கும் அடிமைகளாக இருக்கும்போது, சாகும் நேரத்திலும் பணமும் உலகமும்தான் முன்னால் வருமே தவிர வேறு எந்த காரியங்களும் முன்னே வராது. கர்த்தரிடம் வாழ்க்கையை அர்ப்பணிக்காத வரை உலகம் தான் முன்னே நிற்கும். தான் ஒரு பாவி என்ற உணர்வோ, தேவனுடைய இரட்சிப்பு இல்லாவிட்டால் தான் நித்திய நித்தியமாய் எரிகிற அக்கினியிலே கிடப்போம் என்ற உணர்வோ வரவே வராது. 'உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள், ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்;தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்' (1யோவான் 2:15-17) என்று வேத வசனம் நம்மை எச்சரிக்கிறது. உலகத்தை சாராமல் தேவனை மாத்திரம் சார்ந்து ஜீவிப்போமாக.

ஆமென்... அல்லேலூயா
நன்றி- அனுதின மன்னா

Thursday, 21 August 2014

யார் புத்தியுள்ள கண்ணிகைகள்

பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக் கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டு போகப் புறப்பட்ட பத்து கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கிறது. அதில், ஐந்து பேர்  புத்தியுள்ளவர்கள் ஐந்து பேர்  புத்தியில்லாதவர்கள் என்று இயேசு கூறிய உவமையை மத்தேயு 25 –ம் அதிகாரத்தில் வாசிக்கின்றோம்.

பத்து கண்ணிகைகள் உவமையில், மணமகன் இயேசு அவரை சந்திக்க ஆயத்ததோடு இருந்த புத்தியுள்ள ஐந்து கண்ணிகைகளை மணமகளோடு கூட திருமண வீடாம் பரலோகத்திற்கு அழைத்து சென்றதாக பார்த்தோம். மேலும் ஆயத்ததோடு இல்லாத புத்தியில்லாத ஐந்து கண்ணிகைகள் கைவிடப்பட்டதையும் வாசிக்கின்றோம்.

தற்போதைய உலகம் முழுக்க முழுக்க இந்த உவமையை அடிப்படையாக கொண்டுதான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கின்றது அல்லவா. ஆம் பிரியமானவர்களே, நமக்காய் சிலுவையில் மரித்த இயேசு கிறிஸ்துவானவர் அவருடைய பிள்ளைகள்  புத்தியுள்ளவர்களாக இருக்க விரும்புகின்றார்.

சாத்தானோ, இயேசுவின் பிள்ளைகள் புத்தியில்லாதவர்களாக இருக்க வேண்டுமென விரும்புகின்றான். எப்படி ஒரு குடும்பத்தில் புத்தியுள்ள பிள்ளைகளும், புத்தியில்லாத பிள்ளைகளும் இருக்கின்றார்களோ அதேபோல இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டுள்ள அவரது பிள்ளைகளிலும் புத்தியுள்ளவர்கள் மற்றும் புத்தியில்லாதவர்கள் இருக்கின்றார்கள்.
இந்த உவமையில் இயேசு கிறிஸ்து அறிவுள்ளவர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல்  புத்திசாலி என்ற வார்த்தையை பயன் படுத்தியுள்ளார்.

அறிவாளிக்கும் புத்திசாலிக்கும் ஒரு மிகப்பெரிய  வித்தியாசம் உண்டு. அறிவு என்பது கல்வி அல்லது பலவேறு புத்தகங்களை படிப்பதின் மூலம் பெறுவது. அதாவது வெளி உலகத்திலிருந்து நமக்குள் செல்வது. மாணவர்கள் அநேக புத்தங்களை படித்து அறிவாளிகளாய் திகழுதல் இதற்க்கு உதாரணம். புத்தி என்பது ஒரு மனிதன் தன்னிடம் உள்ள தாலந்துகளின் மூலம் ஒரு வேலையை சிறப்பாக செய்து முடிப்பதற்கு ஒப்பாகும்.

உதாரணத்திற்கு தமிழ்நாட்டிலே அறிவாளியாய் இல்லாதவர்கள் புதிசாலியாய் சாதித்து இருக்கின்றார்கள். கலைஞர் எஸ்.எஸ்.எல்.சி.வரை (பத்தாம் வகுப்பு) படித்து தேர்வில் வெற்றி பெறாதவர். அறிஞர் அண்ணா கூட மூன்றாவது முறை தான் எஸ்.எஸ்.எல்.சி-யில் தேறினார். கணிதத்தில் அண்ணா ரொம்ப வீக்! இவர்கள் கல்வியறிவு இல்லாதவர்கள் ஆனால் இருவருமே பயங்கரமான புத்திசாலிகள் என்று நாம் அணைவரும் அறிவோம்.

வேதம் சொல்கின்றது புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாய் வரும் (நீதி 14:6). புத்தியுள்ளவன் தன்னிடம் உள்ள தாலந்துகளை சிறந்த முறையில் செயல்படுத்தி சாதிப்பதால் இவர்கள் அறிவாளிகளை விட மேன்மையானவர்கள் என்று வேதம் சொல்கின்றது. உலகத்தில்கூட அறிவாளிகளை விட புத்திசாலிகளே அதிகமாய் சாதித்துள்ளனர்.


இயேசு கிறிஸ்த்துவும் தனது பிள்ளைகள் புத்தியுள்ளவர்கலாக, சாதனையாளர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றார். எதிலே புத்தியுள்ளவர்களாக இருக்க வேண்டும். வேத வசனம் சொல்கின்றது, “எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து,ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள் (I பேதுரு 4:7). அநேக நாடுகளில் கிறிஸ்தவர்கள் கொல்லப்படுகின்றார்கள். உயிர் கொல்லி வைரஸ்கள் பரவுகின்றன. நில நடுக்கங்கள் ஏற்படுகின்றன.

யுத்தங்களை செய்திகளில் வாசிக்கின்றோம். ஆம் பிரியமானவர்களே, எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று. மணவாளன் இயேசுவின் வருகை சமீபமாயிற்று. இதை உணர்ந்து ஜாக்கிரதையோடு ஜெபிபவர்கள் புத்தியுள்ளவர்கள்.

மேலும் நாம் தெளிந்த புத்தியைப் பெற, பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தில் நிறைந்து ஜெபிக்க வேண்டும். தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். (II தீமோத்தேயு 1:7).

ஐந்து புத்தியுள்ள கன்னிகைகள் ரகசியவருகையில் எடுத்துக் கொள்ளப்பட்டவர்கள். ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.

லூக்கா:21.36. விழித்திருந்து ஜெபம்பண்ணாதவர்கள் (அதாவது) தேவனுக்கு முன்பாக நிற்க தகுதி இல்லாத அந்த ஐந்து புத்தி இல்லாதா கன்னிகைகளைப் போல உலகத்தாரோட கை விடப்படுவார்கள். நீங்கள் புத்தியுள்ளவர்களா? ஒரு நாளில் எவ்வளவு நேரம் நீங்கள் ஜெபிகின்றீர்கள் என்று யோசித்தும் நிதானித்தும் பாருங்கள். ஒருவேளை ஜெபத்திலும் வேதவாசிப்பிலும் குறைவுள்ளவர்களாக நீங்கள் காணப்படுவீர்கள் என்று சொன்னால், உடனே ஒரு மணி நேரமாவது ஜெபத்திலும் வேத வாசிப்பிலும் தரித்திருப்பேன் என்று உங்களை அர்ப்பணித்து புத்தியுள்ளவர்களாய் உடனடியாக மாறிவிடுங்கள்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக
ஆமென்..அல்லேலூயா

நன்றி- விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

Wednesday, 20 August 2014

ஆச்சரியமான தேவ அன்பு

அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.- (1 யோவான் 3:16).

இங்கிலாந்து நாட்டின் போதகர் ஜோசப் பார்க்கரிடத்தில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. 'இயேசுகிறிஸ்து யூதாஸ் காரியோத்தை ஏன் தமது சீஷராக தெரிந்துக் கொண்டார்? அவருக்கு தெரியுமே அவன் அவரை காட்டிக் கொடுப்பான் என்று' என்பதுதான் அந்தக் கேள்வி. போதகர் ஆழ்ந்து யோசித்துப் பார்த்தார். ஆனால் பதிலைக் கூட முடியவில்லை. அந்தக் கேள்வி அவரை திணறடித்துவிட்டது. ஆனால் அதே கேள்வி அவருக்கு மற்றொரு கேள்வியை உருவாக்கியது. அதுவும் அவரை திணறடித்தது, அந்தக் கேள்வி, 'தேவன் ஏன் என்னை தெரிந்துக் கொண்டார்?' என்பதே.

ஒரு சிலருடைய நடவடிக்கைகளை பார்க்கும்போது நம் இருதயத்தில் மிகவும் துக்கப்படுகிறோம். கிறிஸ்தவர்கள் என்று பெயரை வைத்துக் கொண்டு இப்படி ஒழுங்கீனமாய் வாழ்கிறார்களே?  அவர்களையெல்லாம் எப்படி தேவன் தெரிந்துக் கொண்டார் என்று அங்கலாய்க்கிறோம். ஆனால் உண்மையில் சொல்லப் போனால், மற்றவர்களை குற்றப்படுத்தி பார்க்கிற கண்ணோட்டத்தினால் தான் நாம் அவ்வாறு நினைக்கிறோம் என்பதை நாம் உணருகிறதில்லை. இதைத்தான் பிரபல சுவிஷேசகராகிய பில்லிகிரகாம் அவர்கள் கூறும்போது.  'மீட்கப்பட்ட எந்தவொரு பாவியும் பிறரைப் பார்த்து பாவி என்று சொல்ல எந்தவொரு நியாயமுமில்லை' என்று சொல்கிறார்.

நாம் காண்கின்ற மனிதர்கள் எல்லாரும் தேவ சாயலில் பூரணப்பட்டவர்கள் கிடையாது என்பதை நாம் முதலில் அறிந்துக் கொள்ள வேண்டும். நம்மைப் போல் அவர்களும் தேவ சாயலில் முழுமைப் பெற தேவனால் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களே! இதில் சிலர் தேவகிருபையில், பெலத்தில், சீராக வாழ முடிகிறது. சிலரோ குறைவுள்ளவர்களாய், பெலவீனர்களாய் காணப்படுகிறார்கள். 'அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும்.  நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்' (ரோமர் 15:1-2) என்று வசனம் கூறுகிறது. ஆம், அப்படிப்பட்ட பெலவீனமுள்ளவர்களை  நாம் நியாயந்தீர்க்காமல், அவர்களை தாங்க வேண்டும், அவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என் கிறிஸ்து நம்மிடம் எதிர்ப்பார்க்கிறார்.

ஜோசப் பார்க்கரிடம் கேட்கப்பட்ட அதே கேள்வி இன்று நம்மிடம் கேட்கப்பட்டால், நாம் என்ன பதில் சொல்வோம்? பாவத்தில் வாழும் மனிதர்களை மீட்கும்படி, இரட்சிக்கும்படி தேவ அன்பு வெளிப்பட்டதே! அந்த அன்பு பாவியாகிய என்னை சந்தித்ததே! அதேப் போல மற்றவர்களையும் பெலவீனர்களையும் சந்திக்கக்கூடாது? தேவன் தகுதியற்ற நம்மிடத்தில் காண்பிக்கின்ற அவருடைய ஆச்சரியமான அன்பிற்காக அவரை துதிப்போமா?

பெலவீனமுள்ளவர்களும், நான் பெலவீனன், என்னால் பரிசுத்தமாக வாழ முடியாது, என்னால் கர்த்தர் விரும்புகிற தரத்திற்கு உயரமுடியாது என்று சாக்குபோக்கு சொல்லிக் கொண்டிராமல், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் நம்முடைய இரட்சிப்பு  நிறைவேறப் பிரயாசப்பட வேண்டும் (பிலிப்பியர் 2:12).

தேவன் ஒவ்வொருவருக்கும் சுயசித்தத்தை கொடுத்திருக்கிறார். தேவனே எல்லாவற்றையும் நமக்காக செய்வாரென்றால் அவர் நீதியுள்ள தேவன் என்று யாராலும் கூற முடியாது. நம்முடைய சித்தத்திற்கு அவர் நம்மை விட்டுக் கொடுப்பதால்தான் அவர் நீதியுள்ள தேவன் என்றுக் கூறப்படுகிறார். அப்படி அவர் செய்யாதிருந்தால் பிசாசானவன் வந்திருக்கவே முடியாதே அல்லது யூதாஸ் காரியோத் வந்திருக்கவே முடியாதே! அவர் மனிதருக்கு மட்டுமல்ல, தூதருக்கும் சுயமாய் முடிவெடுக்கும் தன்மையை கொடுத்திருப்பதினால்தான், லூசிபர் அந்த நாளில் பாவம் செய்து கீழே தள்ளப்பட்டான்.

இன்றும் தேவன் யாரையும் வற்புறுத்தி தம்மை ஏற்றுக் கொள்ள செய்கிறவரல்ல. ஒவ்வொருவரும் தங்கள் சுய சித்தத்தை பயன்படுத்தி, அவருடைய அன்பை நினைத்து அவரை ஏற்றுக் கொள்ளவே அவர் அனுமதிக்கிறார். ஆவியில் பெலவீனமானவர்களை ஏற்றுக் கொள்வோம், அவர்களை தாங்குவோம், அவர்களை சேர்த்துக் கொள்வோம், அவர்கள் பலப்பட உதவி செய்வோம்.
 

ஆமென் அல்லேலூயா!
நன்றி- அனுதின மன்னா

Monday, 18 August 2014

வேதத்தை அந்நியமாக எண்ணாதிருப்போம்

கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள்; நீங்கள் ஏன் சாகவேண்டும் என்கிறார் என்று அவர்களோடே சொல்லு. - (எசேக்கியேல் 33:11).

கிரீஸ் நாட்டை ஆண்ட மன்னர்களில் அர்கியஸ் என்ற மன்னரும் ஒருவர். அவர் உலகில் என்னென்ன சிற்றின்பங்கள் உண்டோ அவை எல்லாவற்றையும் அனுபவித்து வாழ்ந்து வந்தவர். நாட்டின் மக்களின் நலனில் சிறிதேனும அக்கரையின்றி, தன் வாழ்வை சிற்றின்பத்திலும், கேளிக்கைளிலும் செலவழித்து வந்தார். அதனால் அவரது அரண்மனையில் மட்டுமல்ல, நாடு முழுவதும் சீர்கேடுகள் நிறைந்தது.

இவற்றைக் கண்டு, ஒழுக்கமுள்ளவர்கள் யாரும் சுகமாக வாழ முடியாத நிலைமையினால், இந்த ராஜாவை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று ஒரு கூட்ட மக்கள் கூடி தீர்மானித்தனர்.  அதற்கான சரியான வேளையையும் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர்.

மக்களில் பெரும்பான்மையோர் தனக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதை அறியாத ராஜா, வழக்கம் போல கேளிக்கைகளில் மூழ்கி இருந்தார். ஏதென்ஸ் நகரில் மன்னருக்கு மிக நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார். மன்னருக்கு விரோதமான சதித்திட்டத்தைக் குறித்து அறிந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. உடனே மன்னருக்கு விரோதமான சதித்திட்டத்தைக் குறித்தும், அதிலிருந்த தப்பித்துக் கொள்ளும் வழிவகைகளையும் குறித்து விரிவாக ஒரு கடிதத்தை எழுதி, தனது நம்பகமான உதவியாளர் மூலமாக இராஜாவுக்கு அனுப்பி வைத்தார்.

நண்பரின் உதவியாளர் அரண்மனை வந்தபோது, அன்றும் மன்னர் பெரிய விருந்தில் ஈடுபட்டிருந்தார். மன்னரிடம்,  'ஏதென்ஸ் நாட்டிலுள்ள உமது நண்பர் ஒரு கடிதத்தை கொடுத்தனுப்பியிருக்கிறார். இதை உடனே வாசிக்கும்படியாக உங்களிடம் சொல்லி அனுப்பியிருக்கிறார். ஏதோ அபாயம் வரப்போகிறதாம்' என்று கடிதத்தை அவரிடம் கொடுத்தனர். மன்னரோ, மதுமயக்கத்தில் 'அபாயமா? என் நாட்டிலா?' என்று ஏளனமாக சிரித்து, 'வரும்போது பார்த்துக் கொள்ளலாம்' என்று அந்த கடிதத்தை வாசிக்கவும் இல்லை, அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவும் இல்லை. அந்தக் கடிதம் தரையில் வீசப்பட்டு, கால்களால் மிதிப்பட்டது.

விருந்தின் உச்சக்கட்டத்தை நெருங்கியபோது, சதிகாரர்கள் உணவு பறிமாறும் பணியாளர்களைப் போல உடையணிந்து, மன்னரின் மீது பாய்ந்து, அதே இடத்தில் குத்தி கொன்றனர். மன்னர் இரத்த வெள்ளத்தில் மிதந்தார். நண்பரின் கடிதம் இரத்தத்தில் நனைந்தது. வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்ற மன்னருக்கு பார்த்துக் கொள்ள நேரம் கூட கிடைக்கவில்லை.

பிரியமானவர்களே, கர்த்தர் நம் மீது கொண்ட அளவற்ற அன்பினால் நமக்கு வேதத்தை எழுதி கொடுத்திருக்கிறார். 'என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்' (ஓசியா 8:12) என்று கர்த்தர் நம்மைக் குறித்து சொல்லாதபடி, அந்த அற்புத வேதத்தை எடுத்து வாசிப்போம்.

வேதத்தில் நாம் எப்படி வாழ வேண்டும் என்று அநேக ஆலோசனைகள் சொல்லப்பட்டிருக்கிறது. 'பாவம் செய்கிற ஆத்துமா சாகும்' என்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. பாவத்திலிருந்த விடுதலையாகும் வழிகள் சொல்லப்பட்டிருக்கிறது. கடைசி காலத்தில் நடைபெற இருக்கும் சம்பவங்கள், ஏற்படப் போகும் அழிவுகள், அதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வழி என்று எல்லாமே எழுதப்பட்டிருந்தாலும் அவற்றை நமக்கு சொந்தமாக எடுத்துக் கொள்ளாமல், வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று கவலையற்று இருந்து விட்டால் அந்த நாள் வரும்போது, அந்த இராஜாவைப் போல எச்சரிப்புக் கொடுக்கப்பட்டும், அதைக் குறித்து பயமில்லாமல், தன்னிச்சையாக வாழ்ந்து, கெட்டதுப்போல காரியங்கள் நேரிடலாம்.

'கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள்; நீங்கள் ஏன் சாகவேண்டும் என்கிறார் என்று அவர்களோடே சொல்லு' என்ற வார்த்தைகளின்படி, நம்முடைய பொல்லாத வழிகளை விட்டு, திரும்பி, கர்த்தரைப்பற்றிக் கொள்வோம். கர்த்தர் நமக்கு எழுதிக் கொடுத்திருக்கிற மகத்துவமான வேதத்தை வாசித்து, வரும் அழிவுக்கு தப்பித்துக் கொள்வோம்.

ஆமென் அல்லேலூயா!
நன்றி- அனுதின மன்னா

Wednesday, 13 August 2014

சம்பவிக்க வேண்டியவைகள்

யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். - (மத்தேயு 24:6-7).

இந்த நாட்களில் மத்திய கிழக்கு பகுதிகளில் நடக்கும் சம்பவங்கள் அநேகருக்கு தெரியாது. அதைப் பற்றி செய்திகளை கேட்டாலும், எங்கோ நடக்கிறது நமக்கு என்ன என்கிற மனநிலைதான் அநேகரிடம் காணப்படுகிறது. ஆனால் கடைசி கால சம்பவங்களில் மத்திய கிழக்கு நாடுகள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது நாம் யாவரும் அறிந்திருக்க வேண்டும். செய்தித்தாள்களை வாசிக்கும்போது அதோடு வேத வசனம் என்ன சொல்கிறது என்று பார்த்து, வேதத்தில் சொல்லப்படுகிற தீர்க்கதரிசன நிறைவேறல் என்பதை நாம் அறிந்துக் கொள்ள வேண்டும்.

தற்போது இஸ்ரேலுக்கும், இஸ்ரேலின் ஒரு பகுதியாகிய காசாவிற்கும் இடையில் போர் நடந்து கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரத்தின்படி எகிப்தில் போர் நிறுத்தத்தைக் குறித்து பேச்சு வார்த்தை நடந்துக் கொண்டிருக்கிறது.

இஸ்ரேலின் மூன்று வாலிபர்களை காசாவிலுள்ள ஹமாஸ் என்னும் தீவிரவாத குழு கடத்திச் சென்று, இஸ்ரேல் அரசாங்கத்தின் வேண்டுகோள் எதையும் கேட்காமல், அவர்களை கொன்று, தூக்கி வீசியது. அதனால் கோபமுற்ற யூதர்களில் சிலர் பாலஸ்தீனாவை சேர்ந்த சிறுவன் ஒருவனை கடத்தி சென்று அவனை கொன்றனர். அதன்பின் ஹமாஸ் இஸ்ரவேலை ராக்கெட்டுகள் வீசி தாக்க, போர் ஆரம்பித்தது. ஜூலை மாதம் 8ம்தேதி ஆரம்பிக்கப்பட்ட போர் இன்றளவும் தொடர்ந்து நடந்து வருகிறது. இடையிடையே போர் நிறுத்தம் இரண்டு நாள், மூன்று நாள் என்று நிறுத்தப்பட்டாலும், ஹமாஸ் அதையும் மீறி தாக்கும்போது, மீண்டும் போர் தொடர்கிறது.

இப்படியாக கடந்த முப்பத்து மூன்று நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருந்த போர் தற்போது மூன்று நாட்களாக பேச்சு வார்த்தையின் நிமித்தம் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் போரில் இஸ்ரவேல் பக்கத்திலிருந்து, மூன்று பாமரமக்களும், (அதில் ஒருவர் தாய்லாந்தை சேர்ந்தவர்) அறுபத்தி மூன்று போர் வீரர்களும் வீர மரணம் அடைந்திருக்கிறார்கள். ஆனால் காசாவின் பக்கத்தில் இருந்து, 1964 பேரும், சுமார் 2000 பேருக்கும் மேலாக காயமடைந்திருக்கிறார்கள். அநேகருடைய வீடு தரைமட்டமாகி இருக்கிறது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து யுனைட்டட் நேஷன்ஸின் பாதுகாப்பில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்.

இத்தனைக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள் விடாமல் 3488 ராக்கெட்டுகளை இஸ்ரவேல் மீது வீசியும் அவர்களில் மனித சாவும், கட்டிடங்கள் இடிபாடும் மிகவும் குறைவே. எப்படி இந்த காரியம் நடந்தது? போர் நடக்கும்போது, அதில் ஈடுபட்டிருந்த வீரர்கள் அநேக அற்புதங்களை கண்டனர். ஏன், ஹமாஸ் தீவிரவாதிகளில் ஒருவனே, 'நாங்கள் அனுப்புகிற ராக்கெட்டுகளை அவர்களின் தேவன் எங்கள் மேலேயோ, கடலிலோ திருப்பி அனுப்புகிறார்' என்று சாட்சி கூறினான்.

இந்த போரைப்பற்றியும், காசாவிற்கு ஏற்படப் போகும் அழிவைக் குறித்தும், 2000 வருடங்களுக்கு முன்பாகவே கர்த்தர் வேதத்தில் எழுதி வைத்திருக்கிறார் என்பது எத்தனை ஆச்சரியம்! 'காத்சா குடியற்று, அஸ்கலோன் பாழாகும்ளூ அஸ்தோத்தைப் பட்டப் பகலிலே பறக்கடிப்பார்கள்ளூ எக்ரோன் வேரோடே பிடுங்கப்படும். . சமுத்திரக்கரை குடிகளாகிய கிரேத்தியருக்கு ஐயோ! பெலிஸ்தரின் தேசமாகிய கானானே, கர்த்தருடைய வார்த்தை உனக்கு விரோதமாயிருக்கிறதுளூ இனி உன்னில் குடியில்லாதபடிக்கு உன்னை அழிப்பேன். சமுத்திரக்கரை தேசம் மேய்ப்பர் தங்கும் குடில்களும் ஆட்டுத்தோழங்களுமாகும். அந்தத் தேசம் யூதா வம்சத்தாரில் மீதியானவர்களின் வசமாகும்ளூ அவர்கள் அவ்விடங்களில் மந்தை மேய்ப்பார்கள்ளூ அஸ்கலோனின் வீடுகளிலே சாயங்காலத்திலே படுத்துக்கொள்வார்கள்; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களை விசாரித்து, அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவார்' (செப்பனியா 2:4-7) என்று வசனம் திட்டவட்டமாக காசாவின் அழிவைக் குறித்து தீர்க்கதரிசனமாய் நமக்கு வெளிப்படுத்துகிறது.

அவர்களுக்கு ஏன் இந்த அழிவு? அதே அதிகாரத்தில் 'அவர்கள் சேனைகளுடைய கர்த்தரின் ஜனத்துக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டி அவர்களை நிந்தித்தபடியினால், இது அவர்கள் அகங்காரத்துக்குப் பதிலாக அவர்களுக்குக் கிடைக்கும்' (10ம் வசனத்தில்) கூறப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய ஜனத்திற்கு விரோதமாக பெருமைபாராட்டி, அவர்களை நிந்தித்தபடியினால் அவர்களுக்கு இந்த தண்டனை என்று கர்த்தர் கூறுகிறார்.

இஸ்ரவேல் தவறு செய்யவில்லையா? அவர்கள் பாவம் செய்யவில்லையா? வசனம் கூறுகிறது,  'அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லைளூ அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார்' (எண்ணாகமம் 23:21) அவர்கள் அக்கிரமம் செய்தாலும், குற்றம் செய்தாலும், ஒரு தகப்பனைப் போல அவர் தம் சொந்த ஜனத்தை சிட்சிப்பார், அவர் அவர்களை தண்டிப்பார். அவர்களை நியாயம் தீர்க்கும் நாள் உண்டு. அப்போது அவர்களை நியாயம் விசாரிப்பார். ஆனால் எதிரிகளிடம் அவர்களை காட்டிக் கொடுத்து, அவர்களை அழிக்கும்படி அனுமதியார். எத்தனை நல்ல தேவன் நம் தேவன்!

பிரியமானவர்களே, நாமும் கூட பாவம் செய்தாலும், ஒரு தகப்பனைப் போல அவர் நாம் செய்த அக்கிரமங்களுக்கும், பாவங்களுக்கும் தண்டிப்பார். ஆனால் மற்றவர்களிடம் காட்டிக் கொடுத்து, மற்றவர்கள் முன் நம்மை வெட்கப்படுத்த விடமாட்டார்.

கர்த்தர் தமக்கு சொந்தமாக தெரிந்துக் கொண்ட ஜனத்திற்கு எதிராக யார் வந்தாலும், கர்த்தர் தம் ஜனத்தோடு இருந்து அதைக் காப்பார். ஏனெனில் ஆயிரம் வருட அரசாட்சி எருசலேமில் இருந்து கர்த்தர் ஆட்சி செய்யப்போகிறபடியால் அதை யாருக்கும் விட்டுக் கொடார். ஆந்திக்கிறிஸ்துவின் காலத்தில் யூதர்கள் உபத்திரவ காலத்திற்கு கடந்து செல்ல நேரிட்டாலும், பின் கிறிஸ்து அந்திக்கிறிஸ்துவோடு போராடி, வெற்றிப்பெற்று, ஆயிர வருட அரசாட்சியை எருசலேமில் அமைப்பார்.

இந்த யுத்த நிகழ்ச்சிகள்  தற்போது நடந்துக் கொண்டிருந்தாலும், உடனே முடிவு வராது என்று இயேசுகிறிஸ்து சொன்னாலும், ஆனால் இது வேதனைகளுக்கு ஆரம்பம் என்று நம்மை எச்சரித்திருக்கிறபடியால் நாம் நம் தேவனை பற்றிக் கொள்வோம். எந்த வேளையில் கிறிஸ்து வந்தாலும் அவருடன் செல்ல ஆயத்தப்படுவோம். மற்றவர்களை ஆயத்தப்படுத்துவோம்.

ஆமென் அல்லேலூயா!
நன்றி- அனுதின மன்னா

Tuesday, 12 August 2014

நல்ல மரம்

அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது;  கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும். ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள். - (மத்தேயு 7:17-20).

நாம் எல்லாரும் மரங்களை கண்டிருக்கிறோம். மரங்கள் நமக்கு மழைக்காக தேவை. மரங்களை வெட்டாதீர்கள் என்று அரசாங்கம் நமக்கு எச்சரித்து கொண்டே இருக்கிறது. சில நாடுகளில் மரத்தை வெட்டினாலோ, மரத்தை எந்த விதத்திலும் பாதித்தாலோ அதற்கு கடுமையான அபராதம் உண்டு. இப்படிப்பட்ட மரங்களில் நல்ல கனி கொடுக்கும் மரம் என்றும் உண்டு. கெட்ட கனிகொடுக்கும் மரங்கள் என்றும் உண்டு. காட்டு பகுதிகளில் விளையும் சில மரங்ளின் கனிகள் விஷம் நிறைந்தவை. சாப்பிடுவதற்கு அருகதை அற்றவை.

நாம் இப்போது ஒரு வாழைமரத்தை நட விரும்பினால், எலுமிச்சை விதைகளை கொண்டு வந்து நடுவோமோ? இல்லை. அதுப்போல வாழை மரத்தை எலுமிச்சை செடியின் அருகில் வைத்தாலும், அது எலுமிச்சை பழத்தை கொடுப்பதில்லை. அது வாழைப்பழத்தையே கொடுக்கும்.

நம்முடைய வாழ்க்கையும் சில வேளைகளில் எலுமிச்சையை போல புளிப்பாக இருந்தாலும், நாம் கர்த்தரால் நடப்பட்டிருந்தால், நாம் வாழைபழத்தை போல இனிமையான பழத்தையே கொடுப்போம். நம்மிடமிருந்து புளிப்பான மற்றவர்களை புண்படுத்தும் பழங்கள் வராது.   துன்ப நேரத்திலும், இன்ப நேரத்திலும் ஒரே விதமான இனிமையான கனிகளையே கொடுக்க முடியும்.

நமக்கு நேரிடும் எந்த சூழ்நிலையிலும் நாம் நல்ல கனிகளை கொடுக்கவே எதிர்ப்பார்க்கப் படுகிறோம். நமக்கு துன்பம் வரும்போது வேறுவிதமான கனிகளையும், இன்ப நேரத்தில் மட்டும் தேவன் விரும்பும் கனிகளை கொடுப்போமானால், நம்மை நட்ட எஜமானாராகிய தேவனுக்கு பிரயோஜனமற்றவர்களாகவே காணப்படுவோம். எந்த நிபந்தனையுமின்றி கனிகொடுக்கவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

'உங்களுக்கு தெரியாது, நான் எந்த நிலைமையில் இருக்கிறேன் என்று, என்னாலே எந்த விதத்திலும் கட்டுபடுத்த முடியாத சூழ்நிலையில் நான் இருக்கிறேன், என்னால் எப்படி நல்ல கனிகளை கொடுக்க முடியும் என்று நீங்கள் சொல்லாம், இயேசுகிறிஸ்து எந்த நிபந்தனையுமின்றி தம்; ஜீவனை நமக்காக கொடுத்து, நம்மை நட்டு வைத்திருக்கிறாரே, அவருக்கு தெரியும் நீங்கள் எந்த சூழ்நிலையில் இருக்கிறீர்களென்று! நீங்கள் கொடுக்க முடியாதபோது அவருடைய பாதத்தில் அமர்ந்திருந்து, அவரிடத்திலிருந்து சாரத்தை பெற்றுகொண்டு  மீண்டும் கனிகொடுக்கிறவர்களாக மாற வேண்டும்.

'அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்' என்ற வசனம் சொல்கிறது. இதில் மரம் நல்லதாயிருந்தால் அது நல்ல கனிகளை கொடுக்கும் என்றும் மரம் கெட்டதாயிருந்தால் அது கெட்டகனிகளை கொடுக்கும் என்று அறிகிறோம். கனிகள் நல்லதாக இருக்க வேண்டுமெனறால், அதன் மரம் நல்ல மரமாக, நன்கு ஊட்ட சத்து நிறைந்ததாக, அதை நன்கு பராமரிக்கிற தோட்டக்காரர் இருந்து கவனித்தாலொழிய அது நன்கு கனிகளை கொடுக்க முடியாது. அதுப்போல நாம் நல்ல கனிகளை நம் வாழ்வில் தர வேண்டுமென்றதால், தோட்டக்காரராகிய இயேசுகிறிஸ்து நம் வாழ்வில் நம்மை எரு இட்டு, களை பிடுங்கி, தேவையில்லாத கிளைகளை, இலைகளை தரித்து, நன்கு பராமரிக்க நம்மை அவரிடம் ஒப்பு கொடுக்க வேண்டும். அவரில்லாதபடி நாம் நல்ல கனிகளை கொடுக்க முடியாது. அவரில் நிலைத்திருந்து நல்ல கனிகளை கொடுக்கிறவர்களாக தேவன் தாமே நம் ஒவ்வொருவரையும் மாற்றுவாராக!

ஆமென்..அல்லூயா
நன்றி: அனுதின மன்னா

Monday, 11 August 2014

இன்றைய வேத வசனம்

உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன்.
எசேக்கியேல் 36:27

Friday, 8 August 2014

பரிசுத்தத்தை காத்துக் கொள்வோம்

உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள். - (லேவியாராகமம் 19:2).

ஒரு பெரிய உணவகத்தில் ஒரு இளம் ஜோடி வந்து உணவை ஆர்டர் செய்தார்கள். அதோடு கூட கையில் எடுத்துச் செல்லும்படியாக ஒரு பார்சலையும் கேட்டார்கள். பார்சல் வந்ததும், பணத்தை செலுத்திவிட்டு, தாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு திரும்பினர். சிறிது நேரத்திற்குப்பின் திறந்தால் அதில் உணவு இல்லை. கட்டுகட்டாக பணநோட்டுகள் வைக்கப்பட்டிருந்தது.

அதைக் கண்ட அதிர்ச்சியுற்று, அதை அப்படியே எடுத்துக் கொண்டு கடை முதலாளியிடம் கொடுத்தனர். அவரும் அதிச்சியுற்றார். பின் அவர்களுக்கு நன்றி செலுத்தினார். அவர்களைப் பற்றி அங்கிருந்தவர்களிடம் பெருமையாக சொன்னார்.

அங்கே தற்செயலாக வந்திருந்த பத்திரிக்கை நிருபர் ஒருவர் இருவரையும் பேட்டிகண்டு, புகைப்படம் எடுப்பதற்காக சேர்ந்து நிற்க சொன்னார். ஆனால் அவர்கள் இருவரும் ஒரேயடியாக மறுத்தனர். கடை முதலாளி 'இப்படிப்பட்ட நற்குணம் எல்லாருக்கும் தெரிய வேண்டும். ஆகவே கண்டிப்பாக போட்டோ எடுத்து பத்திரிக்கையில் போட வேண்டும்' என்று வற்புறுத்தினார். ஆனால் அவர்களோ பிடிவாதமாய் மறுத்து விட்டனர். ஏன் என்று முதலாளி கேட்கவே, அவர்கள் இருவரும் 'நாங்கள் கணவன் மனைவி அல்ல' என்று சொல்லி தலைகுனிந்து நின்றனர்.

நற்பண்பும் நல்ல நடத்தையும் இணைபிரியா இரண்டு தண்டவாளங்கள் போன்றவை. மேலேயுள்ள சம்பவத்தில் நற்பண்பு சிறந்து விளங்கினாலும், நடத்தை மோசமாயிருந்தது.

வேதத்திலே சிம்சோனின் வாழ்வை பார்ப்போமென்றால், 'இஸ்ரவேலை பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பான்' என்ற பெரிய திட்டத்தோடு தேவனால் மனோவா தம்பதியினருக்கு கொடுக்ப்பட்ட விசேஷித்த பிள்ளைதான் இந்த சிம்சோன். தேவன் பேரில் வைராக்கியமுள்ளவனாகவே அவன் வளர்க்கப்பட்டான். கர்த்தருடைய ஆவியானவா அவனை வழிநடத்தினார். அதன்படி அவன் இஸ்ரவேலை இருபது வருஷம் நியாயம் விசாரித்தான். ஆம், அவன் தேவனுக்காக வைராக்கியமாய் செயல்பட்டது உண்மைதான்.

ஆனாலும் காசாவில் அவன் தனது நடத்தையில் தேவனுக்காக வைராக்கியம் பாராட்டவில்லை. தவறான நடக்கையால் தேவ ஆவியையும், நியாயாதிபதியின் பொறுப்பையும், தன் பெலத்தையும், தன் இரு கண்களையும் இழந்து. இரு தூண்களுக்கு நடுவில் பரிகசிக்கப்படும் நபராய் மாறிப் போனான். சிம்சோனும் இஸ்ரவேலை விடுவிக்க சிறந்த செயல்களை செய்தான. அனால் அவன் நடத்தையோ மோசமாயிருந்தது.

ஆனாலும் கடைசி நிமிஷத்தில் 'சிம்சோன் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தராகிய ஆண்டவரே, நான் என் இரண்டு கண்களுக்காக ஒரே தீர்வையாய்ப் பெலிஸ்தர் கையிலே பழிவாங்கும்படி, இந்த ஒருவிசைமாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே, என்னைப் பலப்படுத்தும் என்று சொல்லி, அவன் கர்த்தரை நோக்கி கூப்பிட்ட போது கர்த்தர் அவன் ஜெபத்தை கேட்டார் என்றுப் பார்க்கிறோம். கர்த்தர் அவரது பாவங்களை மன்னித்து, அவரது  பெயர் விசுவாசிகளின் பட்டியல் நிரம்பிய எபிரேயர் 11ம் அதிகாரத்தில் இடம் பெற வைத்து விட்டார்.

நாமும் கூட பிறருடைய பார்வையிலும், அவர்கள் பாராட்டும் விதத்திலும் நற்கிரியைகள் பலவற்றை செய்யலாம். ஆனால் நம்முடைய அந்தரங்க வாழ்வு, வாழ்க்கையின் மறுபக்கம் தேவன் பாராட்டும்படி உள்ளதா? நமது நடத்தை நன்றாயிருக்கும்போது மட்டுமே, தேவன் நமது நற்செயல்களை அங்கீகரிக்க முடியும். அதில் அவர் மகிமைப்பட முடியும்.

பிரியமானவர்களே, நாமும் நற்செயல்கள் பல மற்றவர்களுக்கு செய்து, ஆனால் அந்தரங்க வாழ்வில் பாவமுள்ளவர்களாக இருப்போமானால், இந்த நேரத்தில் கர்த்தரை நோக்கி கூப்பிட்டு, ஆண்டவரே, தயவாய் என்னை மன்னியும், நான் பாவ வழிகளிலிருந்து திருந்தி வாழ எனக்கு ஒரு விசை கிருபை செய்யும் என்று கூப்பிடுவோமானால் கர்த்தர் நம் ஜெபத்தையும் கேட்டு, நம்மை பரிசுத்தமாக்குவார். 'உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்' என்று அவர் சொன்னாரே!

நாம் கர்த்தருக்கு பிரியமாக இருக்க வேண்டுமானால் நாம் பரிசுத்தமாய் இருக்க வேண்டும் என்பது கர்த்தருடைய சித்தம். பரிசுத்தமாய், கர்த்தருக்கு பயந்து, மற்றவர்களுக்கு நன்மையான காரியங்களை செய்யும்போது, கர்த்தர் அதில் மகிழுவார். அவர் நாமமும் மகிமைப்படும்.
ஆமென் அல்லேலூயா!


நன்றி அனுதின மன்னா

Thursday, 7 August 2014

தேவர்களில் உமக்கொப்பானவர் யார்?

கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்? - (யாத்திராகமம் 15:11).

பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவரான தோமா முதலாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்தார். சென்னையையும் கேரளாவின் கடற்கரைப் பகுதியையும் தன்னுடைய ஊழியஸ்தலமாக தெரிந்துக் கொண்டார். ஒரு முறை கேரளாவின் கடற்கரை வழியாக நடந்து வந்துக் கொண்டிருந்தபோது, அங்கு ஒரு பெரிய மதத்தின் தலைவரோடு அநேகர் கூட்டமாக நின்று கையில் தண்ணீரை அள்ளி சூரியனை நோக்கி தெளித்து, சூரியனை கடவுளாக வணங்குவதைக் கண்டார்.

அதைக் கண்டவுடன் ஆவியில் வைராக்கியம் கொண்டவராய், தோமா 'சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கிய ஆண்டவா ஒருவர் இருக்கிறார். அவர்தான் இயேசுகிறிஸ்து. அவர் அற்புதங்களை செய்கிறவர். அவர் இன்றைக்கும் ஜீவனோடிருக்கிறார் என்பதை நிரூபிக்கிறேன்' என்று சவால் விட்டார். அந்த சவால் என்னவென்றால். பூசாரிகளும் தோமாவும் கடல் தண்ணீரை கடலிலிருந்து எடுத்து வானத்திற்கு நேராக எறிய வேண்டும். தண்ணீர் அள்ளப்பட்ட அந்த இடத்தில் தண்ணீருக்கு மத்தியில் பள்ளம் விழ வேண்டும். மட்டுமல்ல, வானத்தில் எறியப்பட்ட தண்ணீர் வானத்தில் அப்படியே நிற்க வேண்டுமென்பதாகும்.

முதலில் அந்த மதத்தவர் அவ்விதமாக தண்ணீரை எறிந்தார்கள். தண்ணீரை அள்ளிய இடம் மீண்டும் தண்ணீரால் சூழப்பட்டது, ஆகாயத்தில் எறியப்பட்ட தண்ணீரும் புவிஈர்ப்பு விசையின் காரணமாக கீழே விழுந்தது. அதன் பின்பு தோமா தன்னுடைய குரலை உயர்த்தி, 'ஜீவனுள்ள இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நான் கட்டளையிடுகிறேன், தண்ணீரே ஆகாயத்தில் அப்படியே நில்' என்று சொல்லி தண்ணீரை அள்ளி மேலே எறிந்தார். என்ன ஆச்சரியம்! தண்ணீர் ஆகாயத்தில் அப்படியே நின்றது. அவர் தண்ணீர் எடுத்த பகுதியில் அந்த இடம் அப்படியே பள்ளமாக இருந்தது.

இந்த அற்புதத்தை கண்டவுடன் அங்கிருந்த பூசாரிகள் மற்றும் அந்த மதத்தின்  முக்கியமானவர்கள் அத்தனைப்பேரும் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார்கள். தோமா அப்போஸ்தலர் அவர்களை கிறிஸ்துவண்டை அருமையாக வழிநடத்தினார். இன்றைக்கும் கேரளாவிலிருக்கிற மார்த்தோமா சபையார் தோமாவின் காலத்திலிருந்தே கிறிஸ்தவர்களாயிருக்கிறார்கள்.

பிரியமானவர்களே, தோமாவின் தேவன் நம்முடைய தேவன். அவர் இன்றும் ஜீவனோடிருக்கிறார். அற்புதங்களை செய்துக் கொண்டு இருக்கிறார். அவருக்காக தோமாவைப் போல சவாலிட்டு அறைகூவல் கொடுக்கும் ஊழியர்கள் எழும்ப வேண்டும். சாதாரணமானவர்களாக அல்ல, இந்தியாவை கலக்குகிறவர்களாக, உலகத்தை கலக்குகிறவர்களாக நாம் மாற வேண்டும். ஒரு தோமாவினால் 'தண்ணீரே அப்படியே மேலே நில்' என்று சொல்லும்போது அது நிற்குமானால், அந்த அற்புதத்தை செய்த அதே தேவன் இயேசுகிறிஸ்துவை நாம் விசுவாசிக்கும்போது, அவருடைய நாமத்தில் அற்புதங்கள் நிச்சயமாக நடக்கும்.

தமது நாமத்திற்காக வைராக்கியமாக எழும்பும் யாரையும் அவர் தமது ஆவியின் வரங்களினாலும், வல்லமைகளினாலும் நிரப்ப வல்லமையுள்ளவராயிருக்கிறார். அவரிடத்தில் பட்சபாதம் என்பதே இல்லை. ஆனால் நாம் பரிசுத்தர்களாக, என்ன வந்தாலும் அசையாதவர்களாக, உறுதியாக, என் ஜனம் எப்படியாவது இரட்சிக்கப்பட வேண்டும் என்கிற வைராக்கியம் நிறைந்தவர்களாக இருக்கும்போது, அவர் நம்மையும் நிரப்பி, அற்புதங்களை செய்ய போதுமானவராயிருக்கிறார். அவர் விரும்பும், அவர் தேடும் நபராக நாம் மாறுவோமா? உலகத்தை கலக்குவோமா? ஆமென் 


ஆமென்...அல்லேலூயா!
நன்றி: அனுதின மன்னா

Wednesday, 6 August 2014

இன்றைய வேத வசனம்

என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால் கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்.
மீகா 7:8

Tuesday, 5 August 2014

பரிபூரண ஜீவன்

திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். - (யோவான் 10:20).

ஒரு வீட்டின் சொந்தக்காரர் தன் வீட்டை ஒரு இலட்சத்திற்கு விற்க விரும்பினார். அதை மற்ற ஒருவர் எப்படியாவது வாங்க வேண்டும் என முயற்சித்தார். ஆனால் அவரிடம் அந்த அளவு பணம் இல்லாததால் அந்த வீட்டு சொந்தக்காரரிடம், பேசி, கடைசியில் அரை லட்சத்திற்கு அந்த வீட்டு சொந்தக்காரர் ஒரு நிபந்தனையின் பேரில் அதை விற்க ஒப்பு கொண்டார். அதன்படி, வீட்டின் சொந்தக்காரர் வீட்டு முன் கதவின் உட்புறம் ஒரே ஒரு ஆணியை மட்டும் அடிக்கவும் அந்த வீட்டை வாங்கினவர் ஒப்புக்கொண்டார். அதன்படி, ஒரு ஆணி மாத்திரம் அந்த வீட்டின் கதவில் அடிக்கப்பட்டது.

சில வருடங்கள் கழித்து, அந்த வீட்டின் சொந்தக்காரர் அந்த வீட்டை திரும்ப பெற விரும்பினார். ஆனால் வீட்டை வாங்கினவரோ அதை திரும்ப கொடுக்க மறுத்து விட்டார். அதனால் அந்த வீட்டின் சொந்தக்காரர், போய் ஒரு மரித்த நாயின் உடலை கொண்டுவந்து, தான் அடித்திருந்த ஆணியின் மேல் மாட்டி விட்டார். ஒரு செத்த நாய் வீட்டின் உள் இருந்தால், அந்த வீட்டில் குடியிருக்க முடியுமா? உடனே அந்த வீட்டை காலிபண்ணினார்கள், அந்த வீட்டை வாங்கியிருந்தவர்கள்.

நாம் கர்த்தரை ஏற்று கொண்டபின் ஒரு சிறு பகுதியை நமக்கு என்று நம் இருதயத்தில் வைத்திருந்தாலும், சத்துரு அதை சொந்தம் கொண்டாட வருவான். திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வாரன் என்று வசனம் நமக்கு கூறுகிறது. சாத்தானாகிய திருடன் வரும்போது, கொல்லவும் அழிக்கவும், திருடவும் தான் வருவான். அவனால், எந்த நல்ல காரியத்தையும் செய்ய முடியாது. அப்படி அவன் வரும்போது, நம்முடைய ஆவிக்குரிய வாழ்கையை சூறையாடவும், கர்த்தருக்கும் நமக்கும் இடையே உள்ள உறவை அழிக்கவும் தான் வருவானேயன்றி, வேறொன்றுக்கும் வருவதில்லை.

சாத்தான் வந்து, நம்மிடம் சொந்தம் கொண்டாடும்படி அவனுடைய  எந்த ஒரு பொருளும் நம்மிடம் இருக்க வேண்டாம். நம் முழு இருதயத்தையும் கர்த்தரிடம் ஒப்படைத்து விட்டு, அவரை எப்போதும் நம் முழு இருதயத்தோடும் அன்பு செலுத்த வேண்டும். நம் இருதயத்தில் ஒரு சிறு இடத்தை உலகத்திற்கென்று வைத்திருந்தாலும்;, நாளாக நாளாக, அந்த சிறு இடத்திலிருந்து பாவம் நம் இருதயத்தில் பிரவேசிக்க ஆரம்பிக்கும்.

ஓவ்வொரு நாளும் கர்த்தரிடம், 'எனக்குள்  சத்துருவின் உரிமை கொண்டாடும் எந்த ஒரு காரியமும் காண்ப்பட வேண்டாம் தகப்பனே, அப்படியிருந்தால் அதை என்னை விட்டு அகற்றி போடும்' என்று ஜெபித்து, நாம் அவனை மேற்கொள்ள வேண்டும்.

திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன் என்று இயேசுகிறிஸ்து கூறினார். சாத்தானாகிய அவன் நம் சரீர சுகத்தையும், ஆத்தும சுகத்தையும் திருட வந்தாலும், நாம் அவனுக்கு இடம் கொடுக்காதபோது, அவனுடைய பொருள் நம்;மிடம் இல்லாதிருக்கும்போது, அவன் வந்து வெட்கத்தோடு போய் விடுவான்.

இயேசுகிறிஸ்துவோ, நமக்கு ஜீவனை கொடுக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தார். ஆகையால் கிறிஸ்துவை உடையவன், ஜீவனை உடையவன். கிறிஸ்து இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். கிறிஸ்து இல்லாதவர்கள் உயிரோடு வாழ்ந்தாலும், அவர்களுக்குள் ஜீவன் இருக்காது, மட்டுமல்ல, அவர்களுக்கு மறு வாழ்வில் தேவன் அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு கிருபையாக தருகிற நித்திய ஜீவனும் இல்லை. இயேசுகிறிஸ்து தருகிற ஜீவன் பரிபூரண ஜீவன். அதாவது நித்திய நித்தியமான ஜீவன். அதை பெறுகிற எவரும் தாங்கள் மரித்தாலும், நித்திய நித்தியமாய் ஜீவிப்பார்கள். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் என்று இயேசுகிறிஸ்து கூறினாரே!

இயேசுகிறிஸ்து தரும் நித்திய ஜீவனை பெற்று கொண்ட நாம், சத்துரு வெட்கப்படும்படி அவனுடைய எந்த ஒரு காரியமும் நம்மில் காணப்படாதபடி நம்மை கர்த்தருக்குள் காத்து கொள்வோமாக! பரிபூரண ஜீவனை தரும் கிறிஸ்துவை பற்றி கொள்வோமாக!

ஆமென் அல்லேலூயா
நன்றி: அனுதின மன்னா

Saturday, 2 August 2014

வானங்களை சிந்தித்துப் பார்க்கையில்..

வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார். அது தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப் போலிருந்து, பராக்கிரமசாலியைப்போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது. சங்கீதம் 19:1-5.

“ஆகாயவிரிவு” அல்லது வளிமண்டலம் வழியாக மின்னுகின்ற நட்சத்திரங்களும் கிரகங்களும் மகிமையான கடவுள் இருப்பதற்கு மறுக்க முடியாத அத்தாட்சி அளித்ததாக தாவீது உணர்ந்தார். மேலும் “அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார். அது தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப் போலிருந்து, பராக்கிரமசாலியைப்போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது. அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, அவைகளின் மறு முனைவரைக்கும் சுற்றியோடுகிறது;  அதின் காந்திக்கு மறைவானது ஒன்றுமில்லை.”

மற்ற நட்சத்திரங்களோடு ஒப்பிட சூரியன் நடுத்தரமான அளவுடையது தான். ஆனாலும் இது குறிப்பிடத்தக்க ஒரு நட்சத்திரம் ஆகும்; அதனைச் சுற்றி வலம் வரும் கிரகங்கள் அதற்குப் பக்கத்தில் மிகச் சிறியவையாக தெரிகின்றன. “2-க்கு பக்கத்தில் 27 பூஜ்யங்கள் சேர்த்தால் எத்தனையோ அத்தனை டன் நிறையுடையது அது”. நம் முழு சூரிய மண்டலத்தின் மொத்த நிறையில் அது 99.9 சதவீதம்! அதன் ஈர்ப்பு சக்தியினால் பூமி அதைவிட்டு தூர விலகாமலும் அதன் கிட்டேநெருங்காமலும் 15 கோடி கிலோமீட்டர் தூரத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது. சூரியனில் வெளிப்படும் ஒளியானது பூமியை வந்தடைய 8 நிமிடம் 20 வினாடிகள் எடுக்கின்றது. சூரிய ஆற்றலில் சுமார் 200 கோடியில் ஒரு பங்கு தான் நம் கிரகத்தை எட்டுகிறது;  ஆனால் உயிரைக்காக்க அதுவே போதுமானது. இந்த அளவு அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ பூமியின் சீதோஷண நிலை மாறி எல்லாம் பூமியே அழிந்துவிடும்.

அப்படிப்பட்ட சூரியனை, சங்கீதக்காரர் தாவீது அடையாள மொழியில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்;பகலில் ஒரு அடிவானத்திலிருந்து மறு அடிவானம் வரை ஓடி,  இரவிலோ கூடாரத்தில் தங்கும் பராக்கிரமசாலியாக அதை அவர் சித்தரிக்கிறார். அந்த வல்லமை மிக்க நட்சத்திரம் அடிவானத்திற்கு கீழே இறங்கும்போது, பூமியிலிருந்து பார்க்கையில், அது இளைப்பாறுவதற்காக ஒரு ‘கூடாரத்திற்குள்’ போவதுபோல் தெரிகிறது. காலையில் ‘அது தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போல்’ பிரகாசமாக திடீரென வெளியே வருகிறது. தாவீது மேய்ப்பனாக இருந்ததால் இரவின் கடுங்குளிரை நன்கு அறிந்திருந்தார். சூரியக்கதிர்கள் வேகமாக தன்னையும் தன்னைச்சூழ்ந்த நிலப்பரப்பையும் எவ்வாறு வெதுவெதுப்பாக்கும் என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.

நாமோ, நமது தேவன், மகிமையின் தேவன் என்பதை அநேக வேளைகளில் நாம் மறந்து விடுகின்றோம். நம்முடைய வாழ்வின் ஆசீர்வாததிற்க்கும் விடுதலைக்கும் மட்டுமே தேவனை தேடுகின்றோம். இது போன்ற தேவைகளுக்காக தேவனை நாடி செல்வதாலேயே, நம்மால் தேவனுடைய மகிமையை அறிந்து கொள்ள முடிவதில்லை. நம்மை போல மனிதனாக வாழ்ந்த தாவீது அரசர், பாடுகளுக்கும் வேதனைகளுக்கும் மத்தியில் தேவனின் மகிமையை எண்ணி துதிக்கின்றார். வார்த்தையால் அகிலத்தையும் படைத்த சர்வல்லவரின் பிள்ளைகள் நாம் என்று தேவனை துதிக்கும் பொழுது, நமது வாழ்வின் தடைகள் மாறி, மகிமையான தேவனின் நாமம் நம் வாழ்வின் மூலமாகவும் மகிமைப்படும்.
ஆமென்..அல்லேலூயா

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக...

நன்றி- விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்