Tuesday, 30 September 2014

நம் மேல் விழுந்த கடமை

சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ. -  (1கொரிந்தியர் 9:16).

மோட்ச பிரயாணம் என்ற புத்தகத்தை அறியாத கிறிஸ்தவர்கள் யாரும் இருக்க முடியாது. அதனை எழுதியவர் ஜான் பனியன் என்பவர் ஆவார். வேத புத்தகத்திறகு அடுத்தபடியாக 130க்கும் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட புத்தகம் இதுவே ஆகும். அவர் அப்புத்தகத்தை எப்படி எங்கு எவ்வாறு எழுதினார் என்ற தகவலை அறிந்தோமானால், ஆச்சரியமாக இருக்கும். அவரது வாழ்க்கை குறிப்புகள் நம் கிறிஸ்தவ வாழ்விற்கும் அதிக பிரயோஜனமாயிருககும்.

இங்கிலாந்தில் கிறிஸ்தவரல்லாத குடும்பத்தில் பிறந்த இவர் தனது சிறு வயதிலிருந்தே தனது மூதாதையரின் தொழிலான பாத்திரங்களை பழுது பார்த்து விற்பனை செய்யும் தொழிலை தந்தையுடன் சேர்ந்து செய்து வந்தார். குடும்பத்தின் ஏழ்மை நிலையால் பள்ளிப்படிப்பை கூட பாதியிலேயே விட வேண்டியதாயிற்று. இளம் பிரயாத்தில் தீய மனிதனாக வாழ்ந்தார். நிம்மதியற்ற பனியன் 16 வயதில் இராணுவத்தில் சேர்ந்தார். ஒரு முறை அரசின் ஆணைப்படி போருக்கு செல்ல உத்தரவிடப்பட்டார்; ஆனால் கடைசி நேரத்தில் இவருக்கு பதிலாக வேறொருவர் அனுப்பப்பட்டார். அந்த நபர் போரின் முதல நாளிலேயே போரில் மரணமடைந்தார். இந்த நிகழ்ச்சி இவரை சித்திக்க வைத்தது. மயிரிழையில் தன் உயிர் தப்பினது ஏனோ? என்று யோசித்து நல்லவனாக வாழ விரும்பினார். ஆனால் அது முடியவில்லை. இரண்டு ஆண்டுகளில் வீடும் திரும்பினார்.

19 வயதில் ஒரு கிறிஸ்தவ பெண்ணை மணமுடித்தார். மனைவி அடிக்கடி கிறிஸ்துவை பற்றி கூறியும் அவர் ஆண்டவரை ஏற்க மனமற்றவராகவே இருந்தார். இந்நிலையில் ஒருநாள் தெருவில் பாத்திரம் ரிப்பேர் செய்யும் மூன்று பெண்கள் இயேசுவை பற்றி கூறி கொண்டிருப்பதை கேட்டு தன்னை  முற்றிலும் கிறிஸ்துவுக்கு ஒப்பு கொடுத்தார். ஆண்டவரை ஏற்று கொண்ட கொஞ்ச நாட்களிலேயே அவரது மனைவி இறந்து போனார். தனது வாழ்வை முற்றிலும் ஆண்டவருக்கு அர்ப்பணித்து, அவருக்காக தன்னால் இயன்றதை செய்ய முன் வந்தார். பாத்திரங்களை ரிப்பேர் பார்க்கும் வீடுகளில் தனது தொழிலை செய்து கொண்டே இயேசுவைப் பற்றி அறிவிக்க ஆரம்பித்தார்.

அக்காலத்தில் இங்கிலாந்தில் போதகர் தவிர யாரும் சுவிசேஷத்தை பிரசங்கிக்க கூடாது என்ற சட்டம் இருந்தது. ஆனால் வேதத்திலுள்ள 'நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள்' என்ற வசனத்திற்கு கீழ்ப்படிவதே உத்தமம் என உணர்ந்து, சுவிசேஷத்தை தைரியமாய் பிரசங்கித்தார். ஆகவே சட்டத்தை மீறிய குற்றத்திற்காக நீதிபதி முன் நிறுத்தப்பட்டார். 'இனி சுவிசேஷம் அறிவிக்கமாட்டேன் என கூறினால் விடுதலை' என்றார் நீதிபதி. அப்படி உறுதியளிக்க பனியன் முன்வரவில்லை. உடனே நீதிபதி மூன்று மாதம் சிறை தண்டனை என அறிவித்தார். பனியனோ, மறு நிமிடமே 'இன்று நான் விடுவிக்கப்படாமல் தேவ உதவியால் நாளை பிரசங்கிப்பேன்' என்றார். அதனால்  மூன்று மாத சிறை தண்டனை பன்னிரண்டு வருடங்களாக நீடித்தது.

அதிக அழுக்கு நிறைந்த சிறிய அறையில் 50 பேருடன் தங்க வேண்யதாயிருந்தது. மங்கலான் வெளிச்சம், துஷ்டர்கள், சுகாதாரமற்ற நிலை இந்த நிலையில் தான் மோடச பிரயாணம் புத்தகத்தை எழுதினார். சற்று யோசித்து பாருங்கள், சிறிய அறைக்குள், 50 பேரின் பேச்சு, சத்தம் தொட்டதற்கெல்லாம் குற்றம் சொhல்லி அடிக்க வரும் துஷ்டர்கள் மத்தியில் ஒரு பெரிய புத்தகத்தை எழுதினார். அவர் பிறப்பிலே கிறிஸ்தவரல்ல, படித்தவரல்ல, அவருக்கு தெரிந்தது ஓட்டை விழுந்த பாத்திரத்தை  ஈயம் கொண்டு அடைப்பது மட்டுமே. தேவன் இவரது சாமர்த்தியத்தை பார்க்கவில்லை, அர்ப்பணத்தை பார்த்தார். நாற்மெடுக்கும் அறையில் உலகிற்கே மண்ம் வீசும் மோட்ச பிரயாணத்தை எழுதினார்.

தேவன் உங்களுக்கு கொடுத்து சிறிய பொறுப்பை நிறைவேற்ற இன்று உங்களுக்கு எத்தனை சௌகரியங்கள் உண்டு? அத்தனை பாடுகள் அசௌகரியங்கள் மத்தியிலும் உலகமே போற்றத்தக்கதான ஒரு புத்தகத்தை, ஒரு ஜான் பனியனால் எழுத முடியும் என்றால், உங்களால் எத்தனை காரியங்களை தேவனுக்காக செய்ய முடியும்! உங்கள் இருதயத்தில் கர்த்தருக்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற வாஞ்சை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தால், எந்த சூழ்நிலையிலும் நீங்கள் அவருக்காக எதையும் செய்ய முடியும் என்பதற்கு அவரே சான்றாக இருக்கிறார். நம்மால் இயன்றதை கர்த்தருடைய நாம மகிமைக்காக செய்வோமா? சுவிசேஷத்தை பிரசங்கிப்பது நம்மேல் விழுந்த கடமை என்று பவுல் அப்போஸ்தலன் சொல்கிறாரே, அதை நம் கடமையாக எடுத்து ஏதாவது ஒரு வகையில் நாம் கர்த்தருக்காக காரியங்களை செய்வோமா? இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது என்று சொன்னவர் சீக்கிரம் வருகிறார். அவர் வருகைக்குள் நம்மால் இயன்றதை செய்து, அவருடைய கரத்தினால் நல்ல பலனை பெறுவோமா?
ஆமென் அல்லேலூயா
நன்றி- அனுதின மன்னா

Monday, 29 September 2014

சுகமளிக்கும் ஆண்டவர்


பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன். - (3 யோவான் 1:2).

அது ஒரு கன்வென்ஷன் கூட்டம். ஸ்மித் விகிள்ஸ்வொர்த்த என்ற ஊழியர் செய்தியை பகிர்ந்து கொண்டார். கூட்டம் முடிந்தது. மக்கள் தங்கள் விடுகளை நோக்கி நடக்கலாயினர். சுமார் 15 பேர் தங்களுக்கு சுகம் பெற வேண்டி ஸ்மித்திடம்; ஜெபிக்க முன்வந்தனர். அதில் ஒருவர் இரு கைகளிலும் ஊன்று கோலுடன் வந்து நின்றார். அவர் மேல் கைகளை வைத்து ஸ்மித் ஜெபிக்க ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம்? ஊனமுற்றவர் தன் ஊன்று கோல்களை எறிந்து விட்டு துள்ளி குதித்தார். ஸ்மித்தால் நம்பவே முடியவில்லை. ஸ்மித்தை தேவன் பயன்படுத்த ஆரம்பித்தார். ஏராளம் ஏராளமான அற்புதங்கள் நடைபெற்றன. உயிருக்கு போராடி கொண்டிருந்தவாக்ள மீண்டும் புத்துயிர்; பெற்றனர். பிணியாளிகளின் கைகளில் எண்ணெய் பூசி ஜெபித்தவுடன் சுகம் பெற்றனர். ஆதி அப்போஸ்தலர் காலத்தில் நடந்தது போலவே அற்புதங்கள் அவர் மூலம் நடைபெற்றன.

ஆம் அன்று இயேசு வாழ்ந்தபோது மட்டுமல்ல, இன்னும் அவர் அதே வல்லமையோடு செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறார். அன்று அவரிடம் வந்தவர்கள், அவரது வஸ்திர தொங்கலை தொட்டவர்கள், அவர் கைப்பட்டவர்கள் என அனைவரும் சுகம் பெற்று சென்றனர். அன்றுள்ள அவரது வல்லமை  இன்றும் குறைந்து போகவில்லை. அவரது மகிமையும் மாறவில்லை. ஆனால் தன்னை நாடி வந்தவர்களிடம் அவர் ஒரு காரியத்தை எதிர்பபார்த்தார். ஆம் அவர்களிடம் விசுவாசத்தை எதிர்ப்பார்த்தார். விசுவாசித்த அனைவரும் வியாதியிலிருந்து  விடுதலையாகினர். சரீரத்தில் மாத்திரமல்ல, ஆத்துமாவிலும் விடுதலை பெற்றனர். சுகம் பெற்றவுடன் மீண்டும் தங்கள் பழைய வாழ்விற்கு திரும்பாமல், இயேசுவின் அடிச்சுவடிகளை பின்பற்றினர். அவரோடு ஊழியம் செய்ய தங்களை அர்ப்பணித்தனர். புது வாழ்க்கையையே அவர்களுக்கு கொடுத்தார்.

இன்றும் சரீரத்தில் வியாதியோடு, தாங்கொண்ணா துயரோடு, என்று எனக்கு விடியால் வரும் என்று கலங்கி தவிக்கிறீர்களோ? இரவெல்லாம் தூக்கமின்றி புரண்டு புரண்டு படுத்து, எப்போது விடியும் என்று காத்து கொண்டிருக்கிறீர்களோ? வியாதியின் கொடுமை உங்களை சலிப்படைய செய்து விட்டதோ? கலங்காதீர்கள், இயேசு உங்களை சுகப்படுத்துவார். உங்களை அற்புத சாட்சியாக நிறுத்த போகிறார். அதற்கு முன் ஒரு விசை உஙக்ளை ஆராய்ந்து பாருங்கள். எனது வியாதிக்கு என் பாவ வாழ்வு காரணமோ, எச்சரிப்பின் சத்தத்தை கேட்டும் மனக்கடினமாய் வாழ்ந்ததினிமித்தம் வந்தததோ, என உங்களை நிதானித்து பாருங்கள். தேவன் உங்கள் உளளத்தில் உணர்த்துவாரென்றால் தேவ சமுகத்தில் உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள். புகை, புகையிலை, மதுபானத்தால் உங்கள் சரீரத்தின் சுகம் கெட்டிருக்குமென்றால், அவற்றை விட்டுவிட தீhமானியுங்கள். பின் முழு மனதோடு சுகத்திற்காக மன்றாடுங்கள். தேவன் உங்களை சுகப்படுத்துவார், நீங்கள்  அவருக்கு ஊழியம் செய்வீர்கள்.

பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன் என்ற வசனத்தின்படி உங்கள் ஆத்துமாவாகிய உள்ளான மனிதன் பாவமில்லாமல் பரிசுத்தமாய் வாழும்போது, உங்கள சரீரமும் சுகமாய் வாழும். ஆகவே முதலாவது உங்கள் ஆத்துமா ஆரோக்கியமுள்ளதா என்று பாருங்கள். சரீரத்தைபார்க்கிலும் ஜீவன் விசேஷித்ததல்லவா? இந்த ஆயத்தத்தோடு சுகத்தை எதிர்பாருங்கள். தேவ வல்லமை உஙகளில் வெளிப்படும். நீங்கள் உயிருள்ள சாட்சியாய் வாழ்வீர்கள்.


ஆமென் அல்லேலூயா!
நன்றி - அனுதிம மன்னா

Thursday, 25 September 2014

தெரிந்து கொள்ளப்பட்டு மாற்றப்பட்டவர்கள்

எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். - (1கொரிந்தியர் 1:26-28).

தாவீது ராஜாவின் ஆரம்ப நாட்களில், அந்நாளில் இராஜாவாகவும், தாவீதின் மாமனாராகவும் இருந்த சவுல் அவரை வேட்டையாட வேண்டி அவரை துரத்தும்போது, அவர் தனது உயிருக்கு பயந்து ஒளிந்து கொள்ள வேண்டியிருந்தது. அப்படி தாவீது வனாந்திரங்களிலே ஒளிந்து கொண்டிருந்தபோது, அவரோடு அநேக உண்மையான நண்பர்கள் இணைந்து கொள்ள ஆரம்பித்தார்கள். அந்த நண்பர்கள் வித்தயாசமானவர்கள். அவர்கள் 'ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள் யாவரும் அவனோடே கூடிக்கொண்டார்கள்; அவன் அவர்களுக்குத் தலைவனானான்; இந்தப் பிரகாரமாக ஏறக்குறைய நானூறுபேர் அவனோடிருந்தார்கள்' - (1சாமுவேல் 22:2).

உலகத்தால் வெறுக்கப்பட்ட அவர்கள், தாவீதின் கூட சேர்ந்தபோது, அவர்கள் அதிசய விதமாக மாற்றப்பட்டு, தாவீதினுடைய  பராக்கிரமசாலிகளாக மாறினார்கள். தாவீது இராஜாவானபோது, அவர்கள் அவருடைய பிரதிநிதிகளாகவும், அவருடைய ராஜ்ஜியத்தில் முக்கிய பதவியில் இருப்பவர்களாகவும் மாறினார்கள்.

அன்று தாவீது ராஜாவுடன் இணைந்தவர்களை போல இன்று இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகருடன் நாம் இணைந்திருக்கிறோம். கிறிஸ்து பாவிகளை இரட்சிக்க இந்த உலகத்திற்கு வந்தார். மட்டுமல்ல, அவரிடம் வருகிறவர்கள் இராஜாக்களும், பிரபுக்களும் மாத்திரமல்ல, வாழ்க்கையில் துன்பத்தை அனுபவித்தவர்கள், பாடுகளை அனுபவித்தவர்கள், பிறரால் புறக்கணிக்கப்பட்டவர்கள், பாவிகளும், துரோகிகளும், உதவியற்றவர்களும், நம்பிக்கையற்றவர்களுமாயிருக்கிறவர்கள். அவர்களை அவர் தமக்கென்று தெரிந்து கொண்டு அவர்களுக்கு இரட்சிப்பின் வஸ்திரத்தை உடுத்துவித்து,  தமது நீதியின் சால்வையை தரித்து, தம்முடைய பரிசுத்த ஆவியினால் நிரப்பி அவர்களை பராக்கிரமசாலிகளாக மாற்றுகிறார். பரிசுத்தமாக்கப்பட்ட அவர்களே, அவருடைய ஆயிரவருட அரசாட்சியில் அவரோடு கூட ஆளுகை செய்ய போகிறவர்கள். அல்லேலூயா!

நம்மை எந்த நிலையிலிருந்து கிறிஸ்து தெரிந்து கொண்டார் என்பதை நாம் அறிவோம். அவர் நம்மை தெரிந்து கொண்டு அவருடைய நண்பர்களாகவும், அவருடன் இணைந்து அவருடைய இராஜ்ஜியத்தை கட்டுகிறவர்களாகவும், தேவன் நம்மை மாற்றியிருக்கிறாரே! நாம் இனி துரத்தப்பட்டவர்கள் இல்லை. நாம் இனி நம்பிக்கையற்றவர்கள் இல்லை, நாம் இனி அற்பமாய் எண்ணப்பட்டவர்கள் இல்லை, நாம் இனி இழிவானவர்கள் இல்லை, நாம் இனி புறக்கணிக்கப்பட்வர்கள் இல்லை.  மாறாக, கிறிஸ்துவின் அன்பை மற்றவர்களுக்கு சொல்லும் அவருடைய ஸ்தானாதிபதிகளாக இருக்கிறோம். அவருடைய பலத்த பராக்கிரமசாலிகளாக, சாத்தானை எதிர்த்து போராடுகிறவர்களாக இருக்கிறோம்.  எத்தனை பெரிய பாக்கியமிது! நம்மை எந்த நிலையிலிருந்து கிறிஸ்து அழைத்தார் என்பதை நாம் மறவாமல், அவருக்கு நன்றியாக ஜீவிப்போம். அவருக்கே மகிமையுண்டாக ஜீவிப்போம்.

ஆமென் அல்லேலூயா!
நன்றி- அனுதின மன்னா

Wednesday, 24 September 2014

ஐசுவரிய பெருக்கு

பின்பு  அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான  ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார். - (லூக்கா 12:15).

உலக பிரசித்தி பெற்ற தேவ ஊழியரான பில்லி கிரகாம் தனது சுய வரலாற்று புத்தகத்தில் ஒர நிகழ்ச்சியை பின்வருமாறு எழுதியிருந்தார்: “உலகிலுள்ள மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவராக இருந்த ஒரு மனிதர் தனது ஆடம்பரமான பங்களாவிற்கு என்னையும் என் மனைவி ரூத்தையும் மதிய உணவிற்கு அழைத்திருந்தார். எழுபத்தைந்து வயதான அவர் நாங்கள் இருந்த நேரம் முழுவதும் கண்ணீர் சிந்த கூடிய நிலையிலேயே இருந்தார். ‘உலகிலுள்ள அனைவரைக் காட்டிலும் மிகுந்த வேதனையுள்ளவனாக நான் இருக்கிறேன், உலகில் நான் எங்கு எந்த இடத்திற்கு போக வேண்டுமென்று விரும்பினாலும் என்னால் அங்கு செல்ல முடியும். எனக்கு சொந்தமாக ஆகாய விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களும் இருக்கின்றன. எனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய எல்லா காரியங்களும் என்னிடம் உள்ளன. ஆனால் நான் எப்போதும் நரகத்திலிருப்பதை போலவே உணர்கிறேன்’ என்றார். நாங்கள் அவருக்காக ஜெபித்து விட்டு கடந்து வந்தோம்.

அன்று மதியம் அப்பகுதியிலுள்ள 70 வயது நிரம்பிய போதகர் ஒருவரை சந்தித்தோம். அவர் உற்சாகத்தினாலும், கிறிஸ்துவின் மேலும், பிறரின் மேலும் கொண்டிருந்த அன்பினாலும் நிறைந்திருந்தார். அவர், ‘என்னுடைய பெயரில் இரண்டு பவுண் நாணயங்கள் கூட இல்லை. ஆனால் நான் மிகுந்த மகிழ்ச்சியோடிருக்கிறேன்’ என்றார். அவர் எங்களை விட்டுசென்ற பிறகு, ‘இவ்விருவரில் அதிக ஐசுவரியமுளள்வர் யார்’ என்று நான் ரூத்திடம் கேட்டேன். எங்களிருவருக்கும் அதற்குரிய விடை தெரியும்” என்று எழுதியிருந்தார்.

பிரியமானவர்களே, நாம் பல ஆசீர்வாதங்களை பெற்றிருப்பவாகளாக வாழலாம். ஆனால் நமது வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டதாக இருப்பதே மெய்யான ஆசீர்வாதமாகும். வேதத்திலே சாலமோன் ராஜாவின் வாழ்வில் ஏராளமான ஐசுவரியங்களும், ஆசீர்வாதங்களும் நன்மைகளும் காண்பட்டன. அவருடைய வாழ்விலிருந்த செழிப்பு கொஞ்சம் நஞ்சம் அல்ல. ஆனால் அவர் வாழ்வை குறித்து சொன்னது, ‘எல்லாம் மாயையும் மனதுக்கு சஞ்சலமுமாயிருக்கிறது’ என்பதே. அவர் தங்க தட்டில் சாப்பிடும் அளவிற்கு ஐசுவரியத்தை பெற்றிருந்த போதிலும் விரக்தியுள்ள வாழ்க்கையையே வாழ்ந்து முடித்தார்.

பணம், பொருள், புகழ், ஆஸ்தி, அந்தஸ்து இவைகளையே உலக மக்கள் ஆசீர்வாதமென நாடி தேடுகின்றனர். ஆனால் உண்மையான ஐசுவரியம் என்பது நமக்கு வெளியே என்னென்ன செழிப்புகள் இருக்கிறது என்பதல்ல, நமக்குள்ளே இருதயத்தில் காணப்படும் சந்தோஷம், நிறைவு திருப்தி, நற்குணம் இவையே உண்மையான ஆசீர்வாதங்களாகும். ஒருவரது செழிப்பான வாழ்வை மற்றவர் பார்க்கும்போது பசுமையான புல்வெளி போல தோன்றும், ஆனால் அது உண்மையல்ல, ‘ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான  ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல’ என்று இயேசுகிறிஸ்து கூறினார்.

கிறிஸ்துவை ஏற்று கொண்ட ஒவ்வொருவருக்கும், தேவன் காட்டும் வழி, உலகப்பிரகாரமான ஆஸ்தியும், மேன்மையும் புகழும், அந்தஸ்தும் அல்ல, ‘இவைகளையெல்லாம்  அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்’ (மத்தேயு 6:32-33) என்று இயேசுகிறிஸ்து கூறினார். நம் வாழ்வில் தேவனுடைய ராஜ்ஜியத்தை தேடும்போது, அவர் நமக்கு கொடுக்கும் சந்தோஷம், மன நிறைவு, சமாதான வாழ்வு நிறைவான அமைதி வேறு எவற்றாலும், யாராலும் தர முடியாது. அதுவே மெய்யான ஆசீர்வாதமாகும். கர்த்தர் தரும் ஐசுவரியத்தில் வேதனை இருக்காது. கண்ணீர் இருக்காது, துயரம் இருக்காது. பில்லிகிரகாம் சந்தித்த ஐசுவரியவானிடம் ஐசுவரியம் இருந்தது, பொருள் இருந்தது, ஆனால், அதோடு கூட வேதனையும், கண்ணீரும் இருந்தது. ஏனெனில் அது தேவனில்லாத ஆசீர்வாதம். ‘கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்’  (நீதிமொழிகள் 10:22) என்று வேதம் கூறுகிறது. முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் தேடும்போது, நிச்சயமாகவே தேவன் வேதனையில்லாத ஆசீர்வாதத்தை கட்டளையிடுவார்.

ஆமென் அல்லேலூயா!
நன்றி - அனுதின மன்னா

Saturday, 20 September 2014

ஆயத்தத்தோடு விழித்திருக்க வேண்டும்

மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள். மத்தேயு 25: 13.

யூதர்களின் திருமண நிகழ்ச்சியானது, சாயங்காலத்தில் தொடங்கி இரவு வரை நடைபெறும். மணமகன் தனது தோழர்களுடன், மணமகள் வீட்டிற்க்கு வந்து, பின்னர் மணமகளை திருமண வீட்டிற்கு அழைத்து செல்வது வழக்கம். மணமகனுடைய தோழர்கள் மணமகள் வீட்டை நெருங்கியவுடன், மணமகன் வருகின்றார் என்று முழக்கமிடுவார்கள். மணமகனை வரவேற்கும் வகையில் மணமகளும் தனது தோழிகளை வீட்டின் முன்னே நிறுத்தி வைத்திருப்பாள். இந்த நிகழ்ச்சிகள் பெரும்பாலும் இரவில் நடைபெறுவதால், தோழிகள் தங்கள் கைகளில் விளக்கு வைத்திருப்பார்கள். மணமகன் வரும்பொழுது விளக்கு ஏந்தி அவரை வரவேற்பார்கள். பின்னர் இந்த தோழிகள் மணமகன் மற்றும் மணமகளுடன் திருமணம் நடைபெறும் இடத்திற்கு செல்வார்கள். இப்படித்தான் அந்த நாட்களில் யூதர்களின் திருமணம் நடந்தது.

மத்தேயு 25:1-13-ல் இயேசு இந்த திருமண நிகழ்வை உவமையாக கூறினார். விண்ணரசு, மணமகனை எதிர்கொள்ளச் சென்ற பத்துக் கன்னியருக்கு ஒப்பாயிருக்கும். பத்துபேர் கையிலும் விளக்கு இருந்தது. புத்தியுள்ளவர்கள் கையிலும், புத்தியில்லாதவர்கள் கையிலும் விளக்கு இருந்தது. ஆனால்,புத்தியுள்ளவர்கள் கைகளில் விளக்கோடு இரவு முழுவதும் எரிய போதுமான அளவு எண்ணெயையும் அவர்கள் ஆயத்தமாய் வைத்திருந்தார்கள். புத்தியில்லாதவர்களும் விளக்கு வைத்திருந்தார்கள். ஆனால் இரவுமுழுவதும் எரிய போதுமான அளவு எண்ணெயை வைத்திருக்காமல் ஆயத்தமில்லாமல் இருந்தார்கள். மணவாளன் வர தாமதித்தார். பத்துபேரும் நித்திரையாயிருந்தார்கள். திடீரென்று மணவாளன் வருகிற சத்தம் கேட்டது. பத்து பேரும் தங்கள் விளக்கை ஆயத்தம் பண்ணினார்கள்,புத்தியுள்ளவர்களின் விளக்கு எரிந்து பிரகாசித்தது, புத்தியில்லாதவர்களின் விளக்கு எரிந்து அணையத்தொடங்கியது. உடனே புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களிடம், எங்கள் விளக்கு அணைகிறது, உங்கள் எண்ணெயிலே எங்களுக்கு கொஞ்சம் இரவல் கொடுங்கள் என்றுக் கேட்டார்கள். உடனே புத்தியுள்ளவர்கள் ஞானமாய் சொல்லுகிறார்கள்: “…எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள்“ (மத்.25:9). மணவாளன் வந்தார்; புத்தியுள்ள ஐந்து கன்னிகைகள் மணவாளனோடு கலியாண வீட்டிற்குள் பிரவேசித்தார்கள். உடனே கதவு அடைக்கப்பட்டது. புத்தியில்லாதவர்கள் பிற்பாடு வந்து கதவைத் தட்டுகிறார்கள். இவர்கள் மற்ற கன்னிகைகளோடு ஆயத்தத்தோடு வந்திருந்தால் அந்த வீட்டிற்குள்ளே நுழையக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கும். மணவாளனுக்கு இவர்களைப்பற்றி தெரியாது. மணவாட்டிக்குத் தான் இவர்களைப் பற்றி தெரியும். ஆகவே மணவாளன் தானே கதவை திறந்து சொல்லுகிறார்: “நான் உங்களை அறியேன்“ என்று.

இயேசு கிறிஸ்து இதை ஏன் மக்களுக்கு உவமையாக சொன்னார் என்று சற்று தியானிப்போம். இயேசு தான் ஆகாயத்தில் வந்து தனது மனமகளாகிய சபையை தன்னோடு கூட அழைத்துச் செல்ல போகின்ற முக்கியமான நிகழ்வை எளிதான உவமை மூலம் மக்களுக்கு வெளிப்படுத்தினார். இது திருச்சபையின் விசுவாசிகளுக்காக இயேசு சொன்ன முக்கியமான உவமையாகும். இந்த உவமையில் வரும் பத்து கன்னிகைகளில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்கள், ஐந்துபேர் புத்தியில்லாதவர்கள். இந்த உவமையை நீங்கள் எளிதாக புரிந்துகொள்ள அடைப்புக்குறிக்குள் அதன் விளக்கம் கொடுப்பட்டுள்ளது. பரலோகத்தில் திருமணம் ஒன்று நடைபெற உள்ளது. மாப்பிள்ளையான மணமகன் (இயேசு), தனது மணமகளை (சபையை) சந்தித்து, திருமணவீட்டிற்கு (பரலோகத்திற்கு) அழைத்துச் செல்லுவதற்காக வந்துகொண்டு இருக்கிறார். அந்த திருமணத்தில் பங்குபெற அழைக்கப்பட்டிருந்த மணமகளுடைய தோழிகளான பத்து கன்னிகைகள் (திருச்சபையின் விசுவாசிகள்), மணமகனின் (இயேசுவின்) வருகையை எதிர்கொண்டு காத்திருக்கிறார்கள். மணமகன் வரும்பொழுது தோழிகளின் கைகளில் கொடுக்கப்பட்ட விளக்குகள் எரிந்து கொண்டிருக்க வேண்டும். அபொழுது அவர்கள் பரலோகமாகிய திருமண வீட்டிற்கு, மனமகளாகிய சபையுடன் அழைத்து செல்லப்படுவார்கள். பின்னர் திருமணவீட்டின் கதவுகள் அதாவது பரலோகத்தின் கதவுகள் அடைக்கப்படும்.

இந்த பத்துபேருமே பரலோகத்தில் நடைபெற இருக்கும் திருமணத்திற்கு செல்ல மணவாளன் இயேசுவுக்காய் காத்திருக்கும் திருச்சபை விசுவாசிகள். "ஆட்டுக்குட்டியான்வரின் கலியாணத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள்” என்று வெளிபடுத்தின விஷேசம் 19:9-ல் வாசிக்கின்றோம். ஒவ்வொரு திருச்சபை விசுவாசியும் பேருபெற்றவர்கள் என்ற தேவதூதர்களே தேவனுக்கு முன்பாக பரலோகத்தில் சாட்சி கொடுக்கின்றார்கள். ஆனால் மணமகன் இயேசு சொல்கின்றார், திருமணத்திற்கு“அழைக்கப்பட்டவர்கள்அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோசிலர்” (மத்தேயு 20:16) என்று. எல்லா திருச்சபை விசுவாசிகளும் அழைக்கப்படிருந்தாலும், எல்லோரும் திருமண விட்டிற்க்குள் அதாவது பரலோகத்திர்க்குள் நுழையப்போவது இல்லை என்று கூறுகின்றார்.

ஆகவே தான் “விழிப்பாயிருங்கள்; ஏனெனில் நான் வரும் வேளையோ நாளோ உங்களுக்கு தெரியாது”  என்று இயேசு கூறினார். நோவா தனது குடும்பத்தினருடன் பேழைக்குள் சென்றவுடன் தேவன் கதவைப் பூட்டின்னார். அதே போல இயேசுவின் இரகசிய வருகைக்கு பின்னர், அதாவது மணவாட்டி சபை எடுத்துகொள்ளபட்ட பின்னர், இயேசு கிறிஸ்துவை அறிந்த, அவருடைய வருகையை எதிர்நோக்கி ஆயத்தத்தோடு இல்லாத அநேகர் கதவை திறக்க சொல்லி மன்றாடுவார்கள்.. அப்பொழுது இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “உறுதியாக உங்களுக்கு சொல்லுகிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது” என்பார். இதை வாசிக்கின்ற திருச்சபை விசுவாசிகளாகிய நீங்கள், மணமகன் இயேசுவை சந்திக்க ஆயத்தமாக இல்லையென்றால், “இயேசு, உங்களை அவருக்கு தெரியாது” என்று சொல்லிவிடுவார். மணமகனாகிய இயேசு கிறிஸ்த்துவின் வருகைக்குரிய எல்லா அடையாளங்களும் இப்பொழுது நடந்துகொண்டு இருக்கிறது. ஆகவே நாம் அவரை சந்திக்கும்படி ஆயத்தத்தோடு விழித்திருக்கவேண்டும்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக
நன்றி- விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

Friday, 19 September 2014

பத்து மடங்கு ஞானம்

ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா அவர்களைக் கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களைப் பத்து மடங்கு சமர்த்தராகக் கண்டான். - (தானியேல் 1:20).

நமக்கு எல்லாருக்கும் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் அவர்களைப் பற்றி நன்றாக தெரியும். அவர் Modern day’s  Father of Physics என்றழைக்கப்படுகிறார். அவருடைய ஞானம் மிக சிறந்ததாக இருந்தது. சாதாரணமாக ஒருவர் I.Q. test செய்ய வேண்டுமென்றால், அவருடைய I.Q. வை வைத்தே கணக்கிடுவர். ஐன்ஸ்டினின்  I.Q. 160 க்கும் மேல் இருந்தது. சாதாரணமாக ஒரு மனிதனின் I.Q. level 90 லிருந்து 100 வரை இருக்கும். 100லிருந்து 110 வரை இருப்பவருக்கு சாதாரண நிலையிலிருந்து சற்று அதிகம் என்று கூறுவர்.

ஒரு நண்பர் எப்போதும் தனக்கு அதிக I.Q. இருப்பதாக கூறி கொள்வார். அவர் யூத மக்களுக்கு எதிரான ஒரு நாட்டை சேர்ந்தவர். ஒரு முறை நான் கூறினேன், 'நீர் எப்போதாவது I.Q.test   செய்திருக்கிறீரா?' என்று கேட்டதற்கு 'எனக்கு அதெல்லாம் தேவையில்லை, எனது மூளை மிகவும் பெரியது' என்று கூறினார். அப்போது நான், சரி என்னதான் இந்த I.Q.test- ல் இருக்கிறது என்று பார்க்க ஆரம்பித்த போது, ஐன்ஸ்டினின் I.Q. level 160-க்கு மேல் இருப்பதை கண்டேன். ஐன்ஸ்டின் ஒரு ஜெர்மானிய யூதர். இதை நான் அந்த நண்பரிடம் சாட்சிகளுடன் சொன்னபோது, அவர் வாயடைத்து போனார்.

'நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்' (உபாகமம் 7:6) என்று இஸ்ரவேலரை தமக்கு சொந்தமாக தேவன் தெரிந்து கொண்ட போது, அவர்களுக்கு விசேஷித்த கிருபைகளையும் கொடுத்திருந்தார். அதனால்தான், தானியேல் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவை குறித்து வாசிக்கும்போது, 'ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா அவர்களைக் கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களைப் பத்து மடங்கு சமர்த்தராகக் கண்டான்' என பார்க்கிறோம்.

மட்டுமல்ல, இஸ்ரவேல் என்றழைக்கப்பட்ட யாக்கோபு தன் மாமனாகிய லாபானிடத்தில் ராகேலுக்காக வேலையில் இருந்தபோது, லாபான் யாக்கோபின் சம்பளத்தை மாற்றினான் (ஆதியாகமம் 31:41) என பார்க்கிறோம். ஆதியாகமம் 30ம் அதிகாரத்தில்,  'நான் வருமுன்னே உமக்கு இருந்தது கொஞ்சம்; நான் வந்தபின் கர்த்தர் உம்மை ஆசீர்வதித்ததினால் அது மிகவும் பெருகியிருக்கிறது; இனி நான் என் குடும்பத்துக்குச் சம்பாத்தியம்பண்ணுவது எப்பொழுது என்றான். அதற்கு அவன்: நான் உனக்கு என்ன தரவேண்டும் என்றான்; யாக்கோபு: நீர் எனக்கு ஒன்றும் தரவேண்டியதில்லை; நான் சொல்லுகிறபடி நீர் எனக்குச் செய்தால், உம்முடைய மந்தையைத் திரும்ப மேய்த்துக் காப்பேன். நான் இன்றைக்குப்போய், உம்முடைய மந்தைகளையெல்லாம் பார்வையிட்டு, அவைகளில் புள்ளியும் வரியும் கறுப்புமுள்ள செம்மறியாடுகளையும், வரியும் புள்ளியுமுள்ள வெள்ளாடுகளையும் பிரித்துவிடுகிறேன்; அப்படிப்பட்டவை இனி எனக்குச் சம்பளமாயிருக்கட்டும்' என்று யாக்கோபு லாபானிடத்தில் கேட்பதாக காண்கிறோம். அதன்பின் யாக்கோபு மிகவும் புத்தியுள்ளவனாக, சாதுரியமுள்ளவனாக, 'பச்சையாயிருக்கிற புன்னை, வாதுமை, அர்மோன் என்னும் மரங்களின் கொப்புகளை வெட்டி, இடையிடையே வெண்மை தோன்றும்படி, பட்டையை உரித்து, தான் உரித்த கொப்புகளை ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும் கால்வாய்களிலும் தொட்டிகளிலும் ஆடுகளுக்கு எதிராகப் போட்டுவைப்பான்; ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும்போது பொலிவதுண்டு. ஆடுகள் அந்தக் கொப்புகளுக்கு முன்பாகப் பொலிந்தபடியால், அவைகள் கலப்புநிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளைப் போட்டது.பலவீனமான ஆடுகள் பொலியும்போது, அவைகளைப் போடாமலிருப்பான். இதனால் பலவீனமானவைகள் லாபானையும், பலமுள்ளவைகள் யாக்கோபையும் சேர்ந்தன' (ஆதியாகம் 30: 37-39, 42). எத்தனை ஞானமுள்ள செய்கை! ஆந்த காலத்தில் இருந்தே எத்தனை ஞானமாக காரியத்தை யாக்கோபு செய்திருந்தார்! ராஜாவாகிய சாலமோனின் ஞானம் நாம் அனைவரும் அறிந்ததே! இன்றைய நாளளவும், உலகத்தின் அதிகமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தவர்கள் யூதர்களே!

சரி, யூதர்களுக்கு மட்டும்தானா அந்த ஞானமும் விவேகமும்? கர்த்தர் ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய நமக்கும் நிச்சயமாக அதை கொடுப்பார். 'உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்' (யாக்கோபு 1:5) என்று வாக்கு தத்தம் செய்தவர் நிச்சயமாகவே நம்மையும் அவ்வித விசேஷித்த ஞானத்தினால் நிரப்ப வல்லவராகவே இருக்கிறார். முற்பிதாக்களில் ஒருவராகிய  'ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக் குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று' (கலாத்தியர் 3:14). கிறிஸ்து இயேசுவின் மூலமாக நமக்கு அந்த ஆசீர்வாதம் கிடைக்கும்படியாக தேவன் கிருபை செய்தார். அவர் வாக்கு பண்ணிவிட்டார். அதை கேட்டு பெற்று கொள்ளவேண்டியது நமது கடமை! நம்முடைய பிள்ளைகளில் யாராவது ஞானத்தில் குறைவுள்ளவர்களாயிருந்தால், அவரிடம் கேட்போம், 'ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா' (மத்தேயு 7:11) என்று நமக்கு எப்போதும் நன்மையானவைகளையே கொடுக்கும் நம் பரமபிதா நிச்சயமாகவே நாம் விரும்பும் ஞானத்தை நமக்கு கொடுப்பார்.

ஆமென் அல்லேலூயா!
நன்றி - அனுதின மன்னா

Wednesday, 10 September 2014

ஜீவத்தண்ணீரின் ஊற்று

'என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக் கொண்டார்கள்' - (எரேமியா 2:13).

இந்த இடத்தில் தேவன் தம் ஜனங்கள் தமக்கு விரோதமாக இரண்டு தீமைகளை செய்தார்கள் என்று முறையிடுகிறார். நன்மையான காரியத்தை விட்டு தீமையை தெரிந்தெடுப்பேதே மனிதனுடைய இயல்பாக இருக்கிறது. தேவனோடு மனிதன் கொண்டுள்ள உறவிலே தான் இப்படிப்பட்ட காரியங்கள் அதிகமாக காண்ப்படுகிறது. ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய தேவனை விட்டுவிட்டு, தண்ணீரே நிற்காத வெடிப்புள்ள தொட்டிகளை தெரிந்து கொள்வதே மனிதனின் இயல்பாக இருக்கிறது. கர்த்தர் தரும் இலவசமான ஜீவத்தண்ணீரின் ஊற்றிலே மொண்டு ஆனந்தமாக குடித்து மகிழ்வதை விட்டுவிட்டு, தண்ணீரே இல்லாத வெடிப்புள்ள தொட்டிகளை தங்களுக்கு வெட்டி கொண்டவர்கள் வேறு யாருமில்லை, தேவனுடைய ஜனங்களே ஆவார்கள்.

'பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்' (யோவான் 7:37-38). இயேசுகிறிஸ்து அருளும் இலவசமான ஜீவத்தண்ணீரை அருந்த மனமில்லாதபடி இன்றைய நாட்களில் அவருடைய ஜனங்கள் அவரை விட்டுவிட்டார்கள். அவரிடத்தில் விசுவாசிக்கிறவனுடைய உள்ளத்திலிருந்து ஓடும் ஜீவத்தண்ணீருள்ள நதிகளை அவர்கள் தெரிந்து கொள்ளாமல், தண்ணீரே நிற்காத வெடிப்புள்ள தொட்டிகளை தெரிந்து கொண்ட அவருடைய ஜனம், அதனால் ஒரு வெறுமையை தங்கள் இருதயங்களில் பெற்றவர்களாயிருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் என்று பெயர் கொண்டிருந்தாலும், இருதயத்தில் மகிழ்ச்சி இல்லாதவர்களாக, ஏதோ வாழ்கிறோம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உள்ளத்தில் உள்ள வெறுமையை இயேசுகிறிஸ்துவினால் மட்டுமே நிரப்ப முடியும்!

தேவன் இல்லாத வெறுமையை மாற்ற அவருடைய ஜனம் என்று சொல்லி கொள்ளுகிறவர்கள், தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக் கொண்டார்களாம். நம்மை திருப்தி செய்து கொள்ள நாமே எடுத்து கொள்கிற முயற்சி இது. இது நம்முடைய பெருமையையே வெளிப்படுத்துகிறது. நாம் எடுத்து கொள்கிற முயற்சிகள் எல்லாம், தண்ணீர் நிற்காத வெடிப்புள்ள தொட்டியை போன்றதாகும். எத்தனை முயற்சிகள் எடுத்தாலும், அந்த தொட்டி வெடிப்புள்ளதாக இருப்பதால், அங்கு தண்ணீர் ஒருக்காலும் நிற்காது. தேவன இல்லாதபடி நாம் எடுக்கிற எந்த முயற்சிகளும் வீணாணதே! எத்தனை முறை அதில் நிரப்பினாலும், அது நிறைவடையவே முடியாது. உலகத்தின் காரியங்களில் நாம் நம்மை திருப்தி படுத்தி கொள்ள நினைத்தால் அது ஒரு போதும் நம்மை திருப்தி படுத்தவே முடியாது. ஆரம்பத்தில் இனிமையாக மனமும் இருதயமும் நிரம்பினதை போல தோற்றமளிக்கும். ஆனால் அது சிறிது நேரமே, ஓட்டையான தொட்டியில் ஊற்றின தண்ணீரை போல அது சீக்கிரமே வடிந்து போய் விடும். பின் இருதயத்தில் இருப்பது வெறுமையும், குற்ற உணர்ச்சியுமே! உலக சிற்றின்பங்கள் எல்லாம் சந்தோஷத்தை கொடுப்பது, சில மணி நேரங்களுக்கு மாத்திரமே! எதுவும் நிரந்தரமானது அல்லவே அல்ல!

இதற்கு ஒரே ஒரு பதில், நாமாக முயற்சி எடுத்துகொண்டிராமல், , உடைந்து போன தொட்டியில் ஊற்றின தண்ணீரை போல தற்காலிக திருப்திப்பட்டு கொள்ளாமல், ஜீவ தண்ணீரின் ஊற்றான கிறிஸ்துவை பற்றி கொள்வோம். அந்த ஜீவத்தண்ணீர், நிரந்தரமானது, தொடர்ந்து ஊறிக்கொண்டே இருப்பது மட்டுமல்ல, அதுவே நம்முடைய ஆத்துமாவையும் ஆவியையும் திருப்திபடுத்த வல்லது. மற்றவை எல்லாம் ஓட்டையான தொட்டியில் ஊற்றப்பட்ட தண்ணீரே! வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் (இயேசுகிறிஸ்துவினிடத்தில்) விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்.

ஆமென் அல்லேலூயா!
நன்றி - அனுதின மன்னா

ஜீவத்தண்ணீரின் ஊற்று

'என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக் கொண்டார்கள்' - (எரேமியா 2:13).

இந்த இடத்தில் தேவன் தம் ஜனங்கள் தமக்கு விரோதமாக இரண்டு தீமைகளை செய்தார்கள் என்று முறையிடுகிறார். நன்மையான காரியத்தை விட்டு தீமையை தெரிந்தெடுப்பேதே மனிதனுடைய இயல்பாக இருக்கிறது. தேவனோடு மனிதன் கொண்டுள்ள உறவிலே தான் இப்படிப்பட்ட காரியங்கள் அதிகமாக காண்ப்படுகிறது. ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய தேவனை விட்டுவிட்டு, தண்ணீரே நிற்காத வெடிப்புள்ள தொட்டிகளை தெரிந்து கொள்வதே மனிதனின் இயல்பாக இருக்கிறது. கர்த்தர் தரும் இலவசமான ஜீவத்தண்ணீரின் ஊற்றிலே மொண்டு ஆனந்தமாக குடித்து மகிழ்வதை விட்டுவிட்டு, தண்ணீரே இல்லாத வெடிப்புள்ள தொட்டிகளை தங்களுக்கு வெட்டி கொண்டவர்கள் வேறு யாருமில்லை, தேவனுடைய ஜனங்களே ஆவார்கள்.

'பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்' (யோவான் 7:37-38). இயேசுகிறிஸ்து அருளும் இலவசமான ஜீவத்தண்ணீரை அருந்த மனமில்லாதபடி இன்றைய நாட்களில் அவருடைய ஜனங்கள் அவரை விட்டுவிட்டார்கள். அவரிடத்தில் விசுவாசிக்கிறவனுடைய உள்ளத்திலிருந்து ஓடும் ஜீவத்தண்ணீருள்ள நதிகளை அவர்கள் தெரிந்து கொள்ளாமல், தண்ணீரே நிற்காத வெடிப்புள்ள தொட்டிகளை தெரிந்து கொண்ட அவருடைய ஜனம், அதனால் ஒரு வெறுமையை தங்கள் இருதயங்களில் பெற்றவர்களாயிருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் என்று பெயர் கொண்டிருந்தாலும், இருதயத்தில் மகிழ்ச்சி இல்லாதவர்களாக, ஏதோ வாழ்கிறோம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உள்ளத்தில் உள்ள வெறுமையை இயேசுகிறிஸ்துவினால் மட்டுமே நிரப்ப முடியும்!

தேவன் இல்லாத வெறுமையை மாற்ற அவருடைய ஜனம் என்று சொல்லி கொள்ளுகிறவர்கள், தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக் கொண்டார்களாம். நம்மை திருப்தி செய்து கொள்ள நாமே எடுத்து கொள்கிற முயற்சி இது. இது நம்முடைய பெருமையையே வெளிப்படுத்துகிறது. நாம் எடுத்து கொள்கிற முயற்சிகள் எல்லாம், தண்ணீர் நிற்காத வெடிப்புள்ள தொட்டியை போன்றதாகும். எத்தனை முயற்சிகள் எடுத்தாலும், அந்த தொட்டி வெடிப்புள்ளதாக இருப்பதால், அங்கு தண்ணீர் ஒருக்காலும் நிற்காது. தேவன இல்லாதபடி நாம் எடுக்கிற எந்த முயற்சிகளும் வீணாணதே! எத்தனை முறை அதில் நிரப்பினாலும், அது நிறைவடையவே முடியாது. உலகத்தின் காரியங்களில் நாம் நம்மை திருப்தி படுத்தி கொள்ள நினைத்தால் அது ஒரு போதும் நம்மை திருப்தி படுத்தவே முடியாது. ஆரம்பத்தில் இனிமையாக மனமும் இருதயமும் நிரம்பினதை போல தோற்றமளிக்கும். ஆனால் அது சிறிது நேரமே, ஓட்டையான தொட்டியில் ஊற்றின தண்ணீரை போல அது சீக்கிரமே வடிந்து போய் விடும். பின் இருதயத்தில் இருப்பது வெறுமையும், குற்ற உணர்ச்சியுமே! உலக சிற்றின்பங்கள் எல்லாம் சந்தோஷத்தை கொடுப்பது, சில மணி நேரங்களுக்கு மாத்திரமே! எதுவும் நிரந்தரமானது அல்லவே அல்ல!

இதற்கு ஒரே ஒரு பதில், நாமாக முயற்சி எடுத்துகொண்டிராமல், , உடைந்து போன தொட்டியில் ஊற்றின தண்ணீரை போல தற்காலிக திருப்திப்பட்டு கொள்ளாமல், ஜீவ தண்ணீரின் ஊற்றான கிறிஸ்துவை பற்றி கொள்வோம். அந்த ஜீவத்தண்ணீர், நிரந்தரமானது, தொடர்ந்து ஊறிக்கொண்டே இருப்பது மட்டுமல்ல, அதுவே நம்முடைய ஆத்துமாவையும் ஆவியையும் திருப்திபடுத்த வல்லது. மற்றவை எல்லாம் ஓட்டையான தொட்டியில் ஊற்றப்பட்ட தண்ணீரே! வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் (இயேசுகிறிஸ்துவினிடத்தில்) விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்.

ஆமென் அல்லேலூயா!
நன்றி அனுதின மன்னா

Saturday, 6 September 2014

எத்தனை எளிது!

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். -  (ரோமர் 5:8).

ஒரு கடை வீதிக்கு செல்லும்போது நூறு ரூபாய் செலவு செய்வது எத்தனை எளிது, ஆனால் ஆலயத்திற்கு அந்த 100 ரூபாய் காணிக்கையாகப் போடுவது எத்தனை கடினம்!

கிரிக்கெட் விளையாட்டைப் பார்க்க உட்காரும்போது வேகமாக இரண்டு மணிநேரம் போவது எத்தனை எளிது! ஆனால் ஜெபிக்க ஒரு மணி நேரம் உட்கார்ந்திருப்பது எத்தனை கடினம்!

தன் தோழிகளுடனோ, தோழர்களுடனோ மணிக்கணக்கில் பேசுவது எத்தனை எளிது, ஆனால், ஜெபத்தில் இரண்டு வார்த்தை சொல்லி ஜெபிப்பது எத்தனை கடினம்!

கிரிக்கெட்டில் ஒரு விளையாட்டு வீரன் ஒரு ஸிக்ஸர் அடித்தவுடன்  கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுவது எத்தனை எளிது, ஆனால் ஆலயத்தில் போதகர்  கொஞ்ச நேரம் செய்தியை இழுத்தவுடன் அமர்ந்து கேட்பது எத்தனைக் கடினம்!

ஒரு சுவையான கதை புத்தகம் கிடைத்தவுடன் அதை படித்து முடித்துவிட்டுதான் மறு வேலை என்று தொடர்ந்து படிப்பது எத்தனை எளிது, ஆனால்  வேதத்தில் ஒரு அதிகாரம் வாசிப்பது எத்தனை கடினம்!

விளையாட்டை பார்ப்பதற்கு முதல் இடத்தில் உட்காரவேண்டும் என்று எத்தனை செலவு செய்து இடத்தைப் பிடிப்பது எத்தனை எளிது, ஆனால் ஆலயத்தில் முதல் இடத்தில் உட்காருவது எத்தனை கடினம்!

தினம் செய்தித்தாளில் வரும் செய்திகளை நம்புவது எத்தனை எளிது, ஆனால் வேதத்தில் கூறப்பட்டுள்ள உண்மைகளை நம்புவது எத்தனை கடினம்!

கிறிஸ்துவை விசுவாசிக்காமல், எதையும் செய்யாமல் பரலோகத்திற்கு செல்ல விரும்புவது எத்தனை எளிது! ஆனால் அவரை விசுவாசிக்காமல், பரலோகம் செல்வது எத்தனை கடினம்!

தேவன் மனிதனை இரட்சிப்பதற்கென்று வைத்திருக்கும் திட்டம் எத்தனை எளிது, ஆனால் அதை மனிதன் ஏற்றுக் கொள்வது எத்தனைக் கடினம்!

இலவசமாய் தேவன் தருகிற இரட்சிப்பு எத்தனை எளிது, ஆனால் அதை அறியாத மனிதன் அதற்காக ஓடிஓடி படுகிற பாடுகள்தான்  எத்தனை கடினம்!

பிள்ளைகள் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புவது எத்தனை எளிது, ஆனால், அதற்கென்று பெற்றோர் எடுத்துக்காட்டாய் வாழ்வது எத்தனைக் கடினம்!

நம்மை எல்லாரும் மதிக்க வேண்டும், நம்மைக் குறித்து நன்றாக நினைக்க வேண்டும் என்று நினைப்பது எத்தனை எளிது, ஆனால், மற்றவர்களை மதித்து நடப்பதோ அவர்களைக் குறித்து நன்மையாக நினைப்பதோ எத்தனைக் கடினம்!

நாம் எத்தனைக் காரியங்களில் குறைவுள்ளவர்களாக காணப்படுகிறோம்!     அதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுப்பதில்லை. ஆனால் மற்றவர்களின் குறைகள் மாத்திரம் நம் கண்களுக்கு எத்தனை பெரிதாக தெரிகிறது!

மேலே சொல்லப்பட்டதுப் போல எத்தனையோக் காரியங்கள் நமக்கு எளிதாக இருக்கும்போது, கர்த்தருக்கடுத்தக் காரியங்கள் நமக்கு எத்தனை கடினமாக இருக்கிறது! கர்த்தரை நேசிப்போம் அப்போது எதுவும் நமக்கு கடினமாக இருக்காது. இன்றைய கிறிஸ்தவ உலகத்தில் இருக்கும் பிரச்சனை, நாம் நம் தேவனை உள்ளத்திலிருந்து நேசிப்பதில்லை. எல்லாவற்றையும் ஒரு கடமைக்காக செய்கிறோம். நாம் பக்தியுள்ளவர்களாக இருக்கிறோம். ஆனால், ஆவிக்குரியவர்களாக இருப்பதில்லை. மற்றவர்களுக்கு முன்பாக நாம் பக்தியுள்வர்கள்தான், ஆனால் எத்தனை தூரம் நாம் கர்த்தரை நேசிக்கிறோம் என்றால், அது 5 சதவீதம் கூட இருக்காது. கர்த்தர் நம்மை எத்தனையாய் நேசித்தபடியால் தம் ஜீவனையே நமக்காக தந்தாரே! இன்று நம்முடைய உயிர் தோழருக்காக நம் ஜீவனை கேட்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், எத்தனைப் பேர் அதை கொடுக்க விரும்புவோம்?   நம் குடும்பம் உண்டு, யார் அவர்களைப் பார்த்துக் கொள்வார்கள் என்று எத்தனை சாக்கு போக்கு சொல்வோம்! ஆனால் நாம் பாவிகளாக இருக்கையில் அவர் நம்மேல் அன்பு கூர்ந்ததினால் நம்மேல் வைத்த அன்பை விளங்கப்பண்ணினார். அது எத்தனை உண்மை!

நம் தேவன் நேசத்தை விரும்புகிற தேவன். பேதுரு பின்வாங்கிப் போய் திரும்பவும் மீன் பிடிக்க சென்ற போது, அவனது நேசத்தை விரும்பி, என்னை நேசிக்கின்றாயா? என்று ஒரு தடவை அல்ல, இரண்டு தடவை அல்ல, மூனறு முறை கேட்டு, அவன் வாயிலிருந்து  ‘ஆம் ஆண்டவரே உம்மை நேசிக்கிறேன்’  என்றுச் சொல்லும்படியாக அவனது நேசத்தை விரும்பின தேவன். ஆதியிலிருந்தே மனிதனோடு உறவாட விரும்பின தேவன் நம் தேவன். ஆபிரகாமோடே ஒரு சிநேகிதனைப் போல பேசின தேவன், மோசேயோடே முகமுகமாய் பேசின தேவன், நாமும் அவரிடம் அனுதினமும்பேச வேண்டும் என்று விரும்புகிறவர். அதற்காகவே நம்மை தெரிந்துக் கொண்டு நம்மை நேசித்தவர். அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம். - (1யோவான் 4:19).

அவர் நம்மேல் வைத்த கிருபைகளை நினைத்து அவரை உள்ளத்தில் ஆழத்திலிருந்து நேசிப்போம்! அவருக்கென்று சிறிது கடினமான காரியமானாலும் பொறுமையோடு செய்வோம். கர்த்தர் அதில் மகிழுவார். நம்மை ஆசீர்வதிப்பார்!

ஆமென்...அல்லேலூயா
நன்றி- அனுதின மன்னா

Tuesday, 2 September 2014

நம்பிக்கையின் வைரம் - (Hope Diamond)

மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும், ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள். - (1பேதுரு 2:5).

உலகத்தில் மிகவும் புகழ்பெற்ற விலையேறப்பெற்ற கல்லாக நம்பிக்கை வைரம் (Hope Diamond)  இன்றளவும் விளங்குகிறது. இது முதலில் இந்தியாவில் இருந்து கிடைக்கப்பட்டதாகவும், அதை ஒரு பிரஞ்ச் வாணிபர் வாங்கி, Evalyn Walsh McLean  என்பவருக்கு விற்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த வைரத்தை உரியவர்களுக்கு அது சாபத்தையும், சாவையும் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அது அநேகருடைய கை மாறினாலும், அது சாபத்தை கொண்டு வந்ததால், அத உரியவர்கள் உடனே மற்றவர்களுக்கு விற்றனர். கடைசியில் இப்போது அமெரிக்காவில் உள்ள ஸ்மித்சோனியன் (Smithsonian)  என்னும் கூடத்தில் தானமாக கொடுக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

விலையுயர்ந்த கற்கள் எப்போதும் மதிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வைக்கப்படும். அதை அடைவதற்காக யுத்தங்களும் நடந்ததுண்டு. சிலர் தங்களுடைய மனைவிகளுக்கு வைரத்தால் செய்த மோதிரங்களை தங்களின் அன்பின் அடையாளங்களாக தருவதுண்டு. எப்போதும் அதனுடைய மதிப்பு போற்றதக்கதே!

தேவன் கிறிஸ்துவையும், நம்மையும் விலையேறப்பெற்ற ஜீவனுள்ள கல்லாகவே காண்கிறார். 'தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும்' என்று வசனம் நமக்கு கூறுகிறது. உலகம் முழுதும் விலையேறப்பெற்ற கல் என்று போற்றப்பட்ட நம்பிக்கையின் வைரம் அதை உடையவர்களுக்கு நம்பிக்கையை சிறிதேனும் தரவில்லை. மாறாக, அது சாபத்தையும் சாவையும், மோசமான விளைவுகளையும் தந்தது. அதை வாங்கிய பணக்கார இவாலின் (Evalyn) தனக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது, ஏனெனில் தான் விசேஷித்தவள் என்று அதை வாங்கி, பெரிய பெரிய விருந்துகளில் அதை பகட்டாக அணிந்து வந்து அநேகரை வியப்பூட்டினாள். ஆனால், அந்த வைர கல்லை வைத்திருந்ததால், அவள் தன் மகனையும், மகளையும், தன் கணவரையும் இழக்க நேரிட்டது.

ஆனால் ஜீவனுள்ள விலையேறப்பெற்ற கல்லாகிய கிறிஸ்துவினிடத்தில் வருகிற ஒருவரும் தங்கள் ஜீவனை இழக்க மாட்டார்கள். அவர்களுக்கு ஜீவனை தரவே அவர் இந்த உலகத்திற்கு வந்தார். அவரை பற்றி கொண்ட நாமும் நாம் இருக்கும் இடங்களில் ஜீவனுள்ள விலையேறப்பெற்ற கல்லாகவே விளங்குவோம். விலையேறப்பெற்ற கல்லாகிய கிறிஸ்துவை 'விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது; கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று' (வசனம் 7). நமக்கு விலையேறப்பெற்றதாயிருக்கிற அந்த கல்தானே, விசுவாசியாதவர்களுக்கு இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று என்று பார்க்கிறோம்.

ஆகவே விலையேறப்பெற்ற கல்லாகிய கிறிஸ்துவும், அவரை விசுவாசிக்கிற நாமும் அவரில் ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்தஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறோம்.

நம்பிக்கையின் வைரம் இதுவரை யாருக்கும் நம்பிக்கையை தரவில்லை. ஆனால் நமது நம்பிக்கையாகிய கிறிஸ்துவினால்  அவருடைய இரத்தத்தால் கழுவப்பட்டு, நீதிமான்களாக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஜீவனுள்ள கற்களாக ஜொலித்து, இந்த உலகில் நம்பிக்கையற்று வாழ்கிற ஒவ்வொருக்கும் நம்பிக்கையை கொடுக்கிறவர்களாக வாழ கர்த்தர் தாமே கிருபை செய்வாராக!

ஆமென் அல்லேலூயா!

நன்றி- அனுதின மன்னா