Tuesday, 29 April 2014

இன்றைய வேத வசனம்

உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.
ஏசாயா 60.20

Monday, 28 April 2014

இன்றைய வேத வசனம்

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை; நீ அநேகம் ஜாதிகளை ஆளுவாய், உன்னையோ அவர்கள் ஆளுவதில்லை.
உபாகமம் 15:6

Sunday, 27 April 2014

இன்றைய வேத வசனம்

இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.
சங்கீதம் 130.7

Friday, 25 April 2014

இன்றைய வேத வசனம்

தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்;
பிரசங்கி 2:26

Monday, 21 April 2014

இன்றைய வேத வசனம்

நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.
யோவான் 15.7

Saturday, 19 April 2014

சிலுவையில் இயேசு கூறிய ஏழு வார்த்தைகள்

இயேசு சிலுவையில் அறையப்பட்ட நிலையில், சிலுவை மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்போது பேசியவைகள் அவருடைய சிலுவை மொழிகள் என அழைக்கப்படுகின்றன.

முதல் வார்த்தையில், இயேசு தம்முடைய சத்துருக்களுக்காக பிதாவிடம் பரிந்து பேசினார். 

இரண்டாவது வார்த்தையில், இயேசு மனந்திரும்பின கள்ளனுக்காகப் பேசினார்.

மூன்றவது வார்த்தையில், இயேசு தன் தாயாகிய மரியாளுக்காக 
பேசினார்.

நான்காவது வார்த்தையில், இயேசு உலக மனிதர்களின் பாவங்கள் அனைத்தும் தன் மேல் வரும் நேரத்தில் தன்னைவிட்டு எடுப்பட்டதன் பிதாவின் பிரசன்னத்திற்காய் பேசினார்.

ஐந்தாவது வார்த்தையில், இயேசு தன்னுடைய ஆவிக்குரிய தேவையைக் குறித்து மனிதகுலத்தின் ஆத்தும இரட்சிப்பின் திட்டத்தைக்குறித்து பேசினார்.

ஆறாவது வார்த்தையில், இயேசு தான் பூமிக்கு மனிதனாய் பிறந்த நோக்கத்தை, பிதாவின் அநாதி திட்டத்தை முடித்ததை குறித்து பேசினார்.
 

ஏழாவது வார்த்தையில், இயேசு மனிதகுலத்திற்காய், அவர்களின் பாவபரிகாரியாய் தன்னையே ஜீவ பலியாக ஒப்புகொடுத்து மரித்தார் .



1) மன்னிப்பு
"பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" (லூக்கா 23 : 34) (மத்தேயு 6:14)

2) இரட்சிப்பு
"இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரலோகத்திலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்" (லூக்கா 23 : 43)

3) அரவணைப்பு
தம்முடைய தாயை நோக்கி : "அம்மா, இதோ, உன் மகன் என்றார்". சீடனை நோக்கி : "இதோ உன் தாய் என்றார்" (யோவான் 19 : 26-27)

4) தத்தளிப்பு

ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். (மத்தேயு 27 : 46)

5) தவிப்பு
எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக : "தாகமாயிருக்கிறேன் என்றார்" (யோவான் 19:28)

6) அர்ப்பணிப்பு
இயேசு காடியை வாங்கின பின்பு, "முடிந்தது" என்று சொல்லி தலையை சாய்த்து ஆவியை ஒப்புக்கொடுத்தார் (யோவான் 19 : 30)

7) ஒப்புவிப்பு

இயேசு பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கின்றேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டு சொன்னார், இப்படி சொல்லி ஜீவனை விட்டார். (லூக்கா 23:46)

இது நமக்காகவும்,நம் ஜனத்துக்காகவும் துக்கப்படும் வேளை.இரட்டை கிழித்து சாம்பலில் உட்காராவிட்டாலும் வேத வசனம் சொல்கிறபடி நம் இருதயங்களை கிழித்து நம் மக்கள் மேல் வரப்போகும் கோபாக்கினைகளுக்கு தேவன் ஜனங்களை காக்கும் படி திறப்பிலே நின்று அவருக்கென்று கதறகூடிய ஆத்துமாவை ஆணடவர் தேடிக்கொண்டிருக்கிறார்.

கண்முன்னால் அழிந்துகொண்டிருக்கும் இத்தனை கோடி ஜனங்களுக்கு நாம் என்ன் பதில் ஆண்டவருகு சொல்லப்போகிறோம். நாம் சிந்திப்போம் ,ஆண்டவருக்காக எதையாகிலும் சாதிக்கிறவர்களாக அவரிடம் நம்மை ஒப்புக்கொடுப்பதே அவரின் சிலுவையை தியானிப்பதின் உண்மையான அர்த்தம் ஆகும்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

Friday, 18 April 2014

இன்றைய வேத வசனம்

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
யோவான் 3:16

Tuesday, 15 April 2014

இன்றைய வேத வசனம்

இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப்போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன்.
ஏசாயா 48:10

Monday, 14 April 2014

இன்றைய வேத வசனம்

விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.
எபிரெயர் 10.38

Saturday, 12 April 2014

இன்றைய வேத வசனம்

உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்.
சகரியா 2.8

Wednesday, 9 April 2014

இன்றைய வேத வசனம்

ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.
நீதிமொழிகள் 19.17


Tuesday, 8 April 2014

இன்றைய வேத வசனம்

கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது.
சங்கீதம் 119.89

Sunday, 6 April 2014

இன்றைய வேத வசனம்

பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.
ஏசாயா 43.1

Saturday, 5 April 2014

இன்றைய வேத வசனம்

ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
எபேசியர் 4.32

Thursday, 3 April 2014

இன்றைய வேத வசனம்

கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்
சங்கீதம் 128.5

Wednesday, 2 April 2014

இன்றைய வேத வசனம்

நான் சொல்லுகிறவைகளைச் சிந்தித்துக்கொள்; கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார்.
II தீமோத்தேயு 2.7