கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே...!
உலகம் தோன்றுவதற்கு முன்னரே கர்த்தல் நம்மீது அன்பு கூர்ந்தார். நம்மை பாவங்களிலிருந்து மீட்க தமது குமாரனையே நமக்காக அனுப்பி ஆக்கினைக்குள்ளாக ஒப்புக்கொடுத்தார். நம்மைப் பாவங்களிலிருந்து மீட்டெடுத்தார்.
பூமிக்குரிய இந்த வாழ்க்கை உண்மையல்ல. இவ்வாழ்க்கை நீர்க்குமிழி போன்று நிலையற்றது. வரப்போகின்ற நித்தியத்திற்கு ஆயத்தப்படுத்துகிறதற்கான வாழ்க்கை தான். உண்மையானது. அனைவரும் அறிந்திருக்க வேண்டியது.
சரீரத்தையும் சரீரத்தோடு ஐம்புலன்களையும் ஆண்டவன் படைத்தான். உலகத்தோடு தொடர்பு கொள்ள சரீரத்தையும் சரீரத்திற்குள் ஐம்புலன்களையும் வைத்தார்.
மனிதனில் மிக முக்கியமானது ஆவி. ஆவியில் 2 பகுதிகள் உள்ளன.
ஒரு பகுதியில் அவனுடைய குணாதிசயங்கள், அவனுடைய சுபாவங்கள்..
அவனுடைய உயிர் அல்லது ஜீவன் இருக்கிறது.
இன்னொரு பகுதியில் ஆண்டவர் வெற்றிடமாய் வைத்திருக்கிறார்.
அந்த வெற்றிடத்தில் கர்த்தர் ஆவியால் அபிசேகம் பண்ணி நிரப்ப விரும்புகிறார். சாத்தானும் அதனைப் பிடிக்க நினைக்கிறான்.
மனிதனுடைய ஆன்மா தவறாய் நடக்கும் தவறாய் சிந்திக்கக் கூடும். ஆவியானவர் மனிதனுடைய ஆவியை ஆட்கொண்டு அவனை வழி நடத்தும் விரும்புகிறார்.
ஆவிக்குரிய மனிதனுடைய வாழ்க்கை தான் சிறப்பானதாக இருக்கவேண்டுமெனின், ஆவியில் தேவனோடு இடைப்பட்டு, பரிசுத்தமாய் வாழ்வது. அப்படி இருக்கும் போது தான் அவனுடைய அப்படி இருக்கும்போது தான் அவனுடைய ஆத்மாவும் செழிப்பாக இருக்கும் சரீரமும் செழிப்பாக இருக்கும்.
ஆவியால் நடத்தப்படுகின்ற மேன்மையான வாழ்க்கையில் ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைகளும் இருக்க வேண்டும். ஆனால் அனேகரிடத்தில் ஆவிக்குரிய வாழ்க்கை வெறுமையாக உள்ளது.
ஆவியானவர் என்ன செய்கிறார் முதலாவது மனிதனை ஆட்கொண்டு ஆவியின் மூலமாக ஆத்மாவையும் சரீரத்தையும் வழி நடத்த விரும்புகிறார்.
அப்படி வழி நடத்தப்படும் போதுதான் உண்மையுள்ள கிறிஸ்தவனாக வாழ முடியும்.
ஆவியானவர் தான் நம்மை வழி நடத்துவார். அவர் தான் நித்திய ஜீவனுக்குள் நம்மை அழைத்துச் செல்வார்.
ஆவியால் நடத்தப்படுகிற வாழ்க்கையே கிறிஸ்தவ வாழ்க்கையில் முக்கியானது.
ஒரு ரெபேக்காளை மணமகளா அழைத்துச் சென்றது.....இஸ்ரவேலரை கானானுக்கு வழிநடத்தியது ஆவியானவரே.. மேகமாய் அவர்களை வழிநடத்தினார்.
நம்மை நிச்சயமாய் பரலோகம் வரை வழி நடத்தக் கூடிய ஒருவர் ஆவியானவரே. எந்தவொரு மனிதனும் பரிசுத்த ஆவியால் வழி நடத்தப்படுகிறானோ அவன் தான் வெற்றியடைய முடியும். அவன் தான் பரிசுத்தமாய் வாழ முடியும்.
ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனுடைய ஆவி ஆத்மா சரீரத்தை பரிசுத்தப்படுத்துவது தான் ஆண்டவருடைய முக்கியமான காரியம்.
ஏனெனில் சாத்தான் ஒரு மனுசனை பாவத்திற்குள் தள்ளுவதற்கு என்னென்ன வழிகளுண்டோ அவ்வளவு வழிகளையும் பயன்படுத்துவான்.
இன்றைய காலகட்டத்தில் சாத்தான் அதிகமாக இணையத்தளங்களை மிக அதிக மாக பயன்படுத்தி பாவத்திற்குள் தள்ளி விடுகிறான்.
மனிதனுடைய ஆவி ஆத்மா சரீரத்தை பரிசுத்தப்படுத்துவதற்காக 5 காரியங்களை கர்த்தர் செய்கிறார்.ஆவி ஆத்ம சரீரம் எல்லாம் பரிசுத்தமாய் இருக்கவேண்டும். சாத்தானிலிருந்து விலகி, அசுத்தங்களிலிருந்து விலகி, பரிசுத்தமாய் இருந்தால் தான் ஆவியானவர் நித்தியத்திற்குள் நம்மை அழைத்துச் செல்வார்.
பரிசுத்த வேதாகமத்தில் எபிரேயர் 12.14 இல், பரிசுத்தமில்லாமல் ஒருவனும் பிதாவைத் தரிசிக்க முடியதது. என்று சொல்லப்படுகிறது.
அதேபோல், யோசுவா 3:5 இல், பரிசுத்தம் இல்லையென்றால் அற்புதத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது என்று கூறப்படுகிறது.
உங்களைப் பரிசுத்தப் படுத்திக் கொள்ளுங்கள் கர்த்தர் அற்புதம் செய்வார்.
பரிசுத்தமில்லாமல் ஆண்டவரிடத்தில் ஜெபிக்க முடியாது. நம்முடைய பாவங்கள் முன்பாகவே நிற்கும். பரிசுத்தமில்லாமல் மகிமையின் ராஜ்யத்தில் பிரவேசிக்கவே முடியாது.
அதனால் தான் நாம் நாம் முக்கியமாக தெரிந்து கொள்ளவேண்டியது, ஆவிக்குரிய வாழ்க்கையில் மிக முக்கியமானது பரிசுத்தமாக வாழ்தல்.
ஆகவே அன்பானவர்களே, நாம் ஆவிக்குரிய வாழ்க்கையில் பரிசுத்தமாய் வாழ ஆண்டவருக்குள் ஒப்புக் கொடுத்து ஜெபம் பண்ண வேண்டும். பரிசுத்த ஆவியானவரிடம் வழி நடத்துமாறு ஆத்ம தாகத்தோடு வேண்டிக்கொள்ள வேண்டும். கர்த்தர் நிச்சயம் அற்புதம் செய்வார்...ஆமென்!

No comments:
Post a Comment