நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும் கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு. வாசிக்கிறதிலும் புத்தி சொல்லுகிறதிலும்,உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு.உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைப் பற்றி அசதியாயிராதே. நீ பேசுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக் கொண்டு, இவைகளிலேயே நிலைத்திரு. (1தீமோ.4:12-15)
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே!
இந்த உலகத்திலே நாம் பெறக் கூடிய முக்கியமான உறவு ஆண்டவரோடு உள்ள உறவாகும்.அந்தவகையில், தேவன் நமக்காக அருளிய வாக்குத்தத்தங்களை அறிந்து அதனைக் கைக்கொண்டு, நடத்தாலே நன்மை பயக்கும்..
தேவன் அருளிய பத்துக் கற்பனைகள்
1. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்
2.ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்.
3. உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக..
4. ஓய்வு நாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக
5.உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக.
6.கொலை செய்யாதிருப்பாயாக.
7.விபச்சாரம் செய்யாதிருப்பாயாக
8.களவு செய்யாதிருப்பாயாக.
9.பிறனுக்கு வரோதமாகப் பொய்ச் சாட்சி சொல்லாதிருப்பாயாக..
10. பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக
No comments:
Post a Comment