Tuesday, 31 December 2013

புத்தாண்டு வாழ்த்துக்கள்



நேற்று இருந்தவர்கள் இன்று இல்லை. இன்று இருப்பவர்கள் நாளை இருப்பார்கள் என்பதில் நிச்சயமில்லை.
அந்தவகையில், இன்று 2013ம் ஆண்டை நிறைவு செய்து  நாளை புதிய வருடத்தில் காலடி எடுத்து வைக்க போகும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, தேவன் நமக்கு கொடுத்த ஆசீர்வாதத்திற்கும் கிருபைகளுக்காகவும் அவரை துதிப்போம்.

"ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல,  துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல,  துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்"

 (1 கொரிந்தியர் 5:8)

என்ற வார்த்தையின்படி எல்லா துர்க்குணங்களையும் நாம் களைந்துவிட்டு புதிதாக புது வருடத்திற்குள் அடியெடுத்து வைப்போம்.

"இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச் சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின."

 (2 கொரிந்தியர் 5:17)  

என எல்லாவற்றையும் புதிதாக்கினவர்களாக நாம் புதிய வருடத்தில் பிரவேசிக்க தேவன் தாமே நம் ஒவ்வொருவர் கூட இருப்பாராக. அவரது கிருபைக்காக அவரைத் துதிப்பபோம்.

அதுபோல புது வருடத்தில் நாம் எடுக்கப்போகும் புதிய தீர்மானங்கள் என்றும் நிலைத்திருக்க வேண்டுமென தீர்மானம் செய்வோம். புது வருடத்தில் கர்த்தருக்குள் வாழ முடிவெடுப்போம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை சீக்கிரமாய் உள்ளதால், பிசாசின் கட்டுக்களில் உள்ள அநேக ஜனங்கள் இரட்சிக்கப்படவும் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவேண்டுமெனவும் ஜெபிப்போம்.
கடந்து போகும் வருடத்திலும் நம்மை துன்பத்தில் ஆழ்த்திய காரியங்கள் பல இருந்தாலும் அவற்றை விடுத்து, புதிய வருடத்தில் புதிதாக நுழைவோம். 

நம்மை அழைத்த தேவன் ஒருபோதும் கைவிடவே மாட்டார். புது வருடத்தில் நமக்கு முன்பாக வரப்போகிற காரியங்களை செய்யும் முன் கர்ததராகிய  இயேசுவின் கரத்தினைப் பற்றிக் கொள்வோம்.
புது வருடம் நம் ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதமான வருடமாக இருக்கும் என விசுவாசிப்போம்.
நாம் புது வருடத்திற்குள் பிரவேசிக்க தேவன் ஆசீர்வதிப்பாராக!
ஆமென்…அல்லேலூயா!


இன்றைய வேத வசனம்

இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம் பண்ணுவான்.
மல்கியா 3.1

Monday, 30 December 2013

இன்றைய வேத வசனம்


கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.
சங்கீதம் 128:5

Saturday, 28 December 2013

இன்றைய வேத வசனம்

உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார்.
சங்கீதம் 121.3

Friday, 27 December 2013

இன்றைய வேத வசனம்

கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; வெளிப்படுத்தின விஷேசம் 14.13

Tuesday, 24 December 2013

அனைவருக்கும் எமது கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்


இன்றைய வேத வசனம்

சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான்.
வெளிப்படுத்தின விஷேசம் 7.17

Monday, 23 December 2013

இன்றைய வேத வசனம்

உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு.
நீதிமொழிகள் 23.17

Sunday, 22 December 2013

இன்றைய வேத வசனம்

உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.
சங்கீதம் 18:35

Saturday, 21 December 2013

இன்றைய வேத வசனம்

உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.
யாக்கோபு 1:3

Thursday, 19 December 2013

இன்றைய வேத வசனம்

 பிதாவாகிய தேவனாலும் பிதாவின் குமாரனாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும், சத்தியத்தோடும் அன்போடுங்கூட உங்களோடிருப்பதாக.
II யோவான் 1:3.

Wednesday, 18 December 2013

இன்றைய வேத வசனம்

நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.
I யோவான் 5:15

Tuesday, 17 December 2013

இன்றைய வேத வசனம்

அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்; நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்.
மீகா 7:19

Monday, 16 December 2013

இன்றைய வேத வசனம்

நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்.
 ஆதியாகமம் 50:20

Sunday, 15 December 2013

இன்றைய வேத வசனம்

 இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.
II கொரிந்தியர் 5.17

Saturday, 14 December 2013

இன்றைய வேத வசனம்

    ஆண்டவராகிய கர்த்தர் என்பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்.
ஆபகூக் 3:19

Friday, 13 December 2013

இன்றைய வேத வசனம்

கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது.
1பேதுரு 3:12

Thursday, 12 December 2013

இன்றைய வேத வசனம்

நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள்; அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்;
ஏசாயா 30:15

Monday, 9 December 2013

இன்றைய வேத வசனம்

நீர் உம்முடைய இருதயத்தை ஆயத்தப்படுத்தி, உம்முடைய கைகளை அவருக்கு நேராக விரித்தால் நலமாயிருக்கும்.
யோபு 11.13

Saturday, 7 December 2013

இன்றைய வேத வசனம்

உன்னுடைய கை உன் விரோதிகளின்மேல் உயரும்; உன் சத்துருக்களெல்லாரும் சங்கரிக்கப்படுவார்கள்.
மீகா 5.9

Wednesday, 4 December 2013

இன்றைய வேத வசனம்

அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்.
 யாத்திராகமம் 33:14

Monday, 2 December 2013

இன்றைய வேத வசனம்

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.
சங்கீதம் 31.24