Tuesday, 31 December 2013

புத்தாண்டு வாழ்த்துக்கள்



நேற்று இருந்தவர்கள் இன்று இல்லை. இன்று இருப்பவர்கள் நாளை இருப்பார்கள் என்பதில் நிச்சயமில்லை.
அந்தவகையில், இன்று 2013ம் ஆண்டை நிறைவு செய்து  நாளை புதிய வருடத்தில் காலடி எடுத்து வைக்க போகும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, தேவன் நமக்கு கொடுத்த ஆசீர்வாதத்திற்கும் கிருபைகளுக்காகவும் அவரை துதிப்போம்.

"ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல,  துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல,  துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்"

 (1 கொரிந்தியர் 5:8)

என்ற வார்த்தையின்படி எல்லா துர்க்குணங்களையும் நாம் களைந்துவிட்டு புதிதாக புது வருடத்திற்குள் அடியெடுத்து வைப்போம்.

"இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச் சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின."

 (2 கொரிந்தியர் 5:17)  

என எல்லாவற்றையும் புதிதாக்கினவர்களாக நாம் புதிய வருடத்தில் பிரவேசிக்க தேவன் தாமே நம் ஒவ்வொருவர் கூட இருப்பாராக. அவரது கிருபைக்காக அவரைத் துதிப்பபோம்.

அதுபோல புது வருடத்தில் நாம் எடுக்கப்போகும் புதிய தீர்மானங்கள் என்றும் நிலைத்திருக்க வேண்டுமென தீர்மானம் செய்வோம். புது வருடத்தில் கர்த்தருக்குள் வாழ முடிவெடுப்போம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை சீக்கிரமாய் உள்ளதால், பிசாசின் கட்டுக்களில் உள்ள அநேக ஜனங்கள் இரட்சிக்கப்படவும் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவேண்டுமெனவும் ஜெபிப்போம்.
கடந்து போகும் வருடத்திலும் நம்மை துன்பத்தில் ஆழ்த்திய காரியங்கள் பல இருந்தாலும் அவற்றை விடுத்து, புதிய வருடத்தில் புதிதாக நுழைவோம். 

நம்மை அழைத்த தேவன் ஒருபோதும் கைவிடவே மாட்டார். புது வருடத்தில் நமக்கு முன்பாக வரப்போகிற காரியங்களை செய்யும் முன் கர்ததராகிய  இயேசுவின் கரத்தினைப் பற்றிக் கொள்வோம்.
புது வருடம் நம் ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதமான வருடமாக இருக்கும் என விசுவாசிப்போம்.
நாம் புது வருடத்திற்குள் பிரவேசிக்க தேவன் ஆசீர்வதிப்பாராக!
ஆமென்…அல்லேலூயா!


No comments:

Post a Comment