ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. -(கலாத்தியர் 5:22-23)
ஆறாம் சுளை .....நற்குணம்:
நாம் அனைவரும் ஆலயத்திலும், வீட்டிலும் பாடும் பாடல்கள் கர்த்தர் நல்லவர் என்று சொல்லும், அர்த்தம் கொள்ளும் பாடல்களையே! நம் கர்த்தர் அத்தனை நல்லவர்! அவரை ஆயிரம் முறை அப்பா நீர் நல்லவர், நல்லவர் என்று சொல்லிக் கொண்டே இருந்தாலும் திகட்டாது. அவர் அத்தனை நல்லவர்!
நற்குணம் கொண்ட ஒரு மனிதனையோ, மனுஷியையோ அனைவரும் நேசிப்பார்கள். கேட்டால் சொல்வார்கள், 'அவரு ரொம்ப நல்லவருங்க' என்று. இயற்கையிலேயே நற்குணம் கொண்டவர்கள் இருப்பார்கள். ஆனால் ஆவியின் கனியாகிய நற்குணத்தை கொண்டவர்களோ, எல்லா நற்குணத்திற்கும் மேம்பட்டவர்களாக கிறிஸ்துவையே வெளிப்படுத்திக் காட்டுகிறவர்களாக இருப்பார்கள்.
கர்த்தரை பின்பற்றுகிறவர்களாகிய நம்மை பார்த்து மற்றவர்கள் இவர் நல்லவர், இவர்கள் நல்லவர்கள் என்று சொல்லமுடியுமா? நம் கிரியைகள் மற்றவர்களுக்கு நன்மை தரத்தக்கதாக, மற்றவர்கள் பாராட்டும்படியாக, மற்றவர்களுக்கு பிரயோஜனமுள்ளதாக இருக்கிறதா?
'..முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்ளூ கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாதுளூ கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது' (மத்தேயு 7:16-18) என்று இயேசுகிறிஸ்து கூறினார். ஆம், நல்ல மரத்தால்தான் நல்ல கனியை கொடுக்க முடியும். கெட்ட மரங்களோ கெட்ட கனியைத்தான் கொடுக்கும்.
நம்முடைய வேலையிடங்களில், நம்மைச் சுற்றியிருக்கிற இடங்களில், நல்ல மரங்களைப் போன்றவர்களும் இருக்கலாம், கெட்ட மரங்களைப் போன்றவர்களும் இருக்கலாம். கெட்ட மரங்களைப் போன்றவர்களிடம் நாம் நல்ல கனியை எதிர்ப்பார்க்க முடியாது. ஏனெனில் அவர்களின் சுபாவமே அப்படிப்பட்டது. அவர்கள் கெட்டகனியைத்தான் தருவார்கள் என்று இயேசுகிறிஸ்து கூறியிருக்கிறாரே!
கிரகாம் ஸ்டெயின்ஸ் அவர்களும், அவர்களுடைய இரண்டு பிள்ளைகளையும் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டபோது, அவர்களின் துணைவியார் கர்த்தரோடு இருந்தபடியால், அவர்களிடத்தில் ஆவியின் கனியாகிய நற்குணம் வெளிப்பட்டது. அவர்கள் உடனே அவர்களை கொன்றவர்களை சபிக்கவில்லை, அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று போர்க்கொடி ஏற்றவில்லை, மாறாக அவர்களை மன்னித்தார்கள். நல்ல மரத்திலிருந்து நல்ல கனியே கிடைக்கும். கெட்ட கனியை எதிர்ப்பார்க்க முடியாது.
ஈராக்கிலும், சிரியாவிலும் நடக்கும் கொடுமைகளை பார்க்கும்போது, ஒரு சகோதரி கதறுகிறாள், 'என்னை 32 முறை மதிய நேரத்திற்குள் கற்பழித்திருக்கிறார்கள், தயவுசெய்து குண்டு வீசி எங்களைக் கொன்று போடுங்கள், நாங்கள் உயிரோடு இருப்பதைப் பார்க்கிலும் சாவது எங்களுக்கு மேல்' என்று கதறுகிறாள். கெட்ட மரத்திலிருந்து கெட்ட கனியே வரும், நல்ல கனியை எதிர்ப்பார்க்கவே முடியாது.
வேதத்தில் எத்தனையோப் பேர் நற்குணசாலிகளாக இருந்திருக்கிறார்கள். யோசேப்பு, மோசே, ரூத், தாவீது என்று சொல்லிக் கொண்டே போகலாம். அவர்கள் தாங்கள் தாங்கள் நாட்டப்பட்ட இடத்திலே நற்குணசாலிகளாக விளங்கினார்கள்.
'பெரோயா பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்' (அப்போஸ்தலர் 17:11) என்று வேதம் கூறுகிறது. வேதத்தை ஆராய்ந்து, 'ஓ, வசனத்தில் இப்படி இருக்கிறது, அதன்படி நான் நடக்க வேண்டும்' என்று அவர்கள் தினந்தோறும் வேதத்தையும் தங்களையும் ஆராய்ந்து பார்த்தபடியால் நற்குணசாலிகளாக விளங்கினார்கள் என்றுப் பார்க்கிறோம். தினமும் வேதத்தை வாசித்து, அதன்படி நம்மை மாற்றிக் கொள்வோமானால் நாமும் நற்குணசாலிகளாக விளங்குவோம் என்பதில் சந்தேகமேயில்லை!
நமக்கு தீமை செய்கிறவர்களுக்கு நாம் நன்மை செய்வதன் மூலம், கைமாறு கருதாமல் மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம், தீமைக்கு தீமை சரிகட்டாமல், மற்றவர்களோடு நம்முடைய நன்மைகளை பகிர்ந்து கொள்வதன் மூலம், நியாயமாக காரியங்களை செய்வதன் மூலம், மற்றவர்களுக்காக ஜெபிப்பதன் மூலம், நல்ல வார்த்தைகளையே பேசுவதன் மூலம் நம்மிடத்தில் உள்ள ஆவியின் கனியாகிய நற்குணத்தை வெளிப்படுத்த முடியும்.
'சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ள'... (கொலோசேயர் 1:10)தேவன் தாமே கிருபை செய்வாராக!
ஆமென் அல்லேலூயா!
நன்றி அனுதின மன்னா

No comments:
Post a Comment