Monday, 29 September 2014

சுகமளிக்கும் ஆண்டவர்


பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன். - (3 யோவான் 1:2).

அது ஒரு கன்வென்ஷன் கூட்டம். ஸ்மித் விகிள்ஸ்வொர்த்த என்ற ஊழியர் செய்தியை பகிர்ந்து கொண்டார். கூட்டம் முடிந்தது. மக்கள் தங்கள் விடுகளை நோக்கி நடக்கலாயினர். சுமார் 15 பேர் தங்களுக்கு சுகம் பெற வேண்டி ஸ்மித்திடம்; ஜெபிக்க முன்வந்தனர். அதில் ஒருவர் இரு கைகளிலும் ஊன்று கோலுடன் வந்து நின்றார். அவர் மேல் கைகளை வைத்து ஸ்மித் ஜெபிக்க ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம்? ஊனமுற்றவர் தன் ஊன்று கோல்களை எறிந்து விட்டு துள்ளி குதித்தார். ஸ்மித்தால் நம்பவே முடியவில்லை. ஸ்மித்தை தேவன் பயன்படுத்த ஆரம்பித்தார். ஏராளம் ஏராளமான அற்புதங்கள் நடைபெற்றன. உயிருக்கு போராடி கொண்டிருந்தவாக்ள மீண்டும் புத்துயிர்; பெற்றனர். பிணியாளிகளின் கைகளில் எண்ணெய் பூசி ஜெபித்தவுடன் சுகம் பெற்றனர். ஆதி அப்போஸ்தலர் காலத்தில் நடந்தது போலவே அற்புதங்கள் அவர் மூலம் நடைபெற்றன.

ஆம் அன்று இயேசு வாழ்ந்தபோது மட்டுமல்ல, இன்னும் அவர் அதே வல்லமையோடு செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறார். அன்று அவரிடம் வந்தவர்கள், அவரது வஸ்திர தொங்கலை தொட்டவர்கள், அவர் கைப்பட்டவர்கள் என அனைவரும் சுகம் பெற்று சென்றனர். அன்றுள்ள அவரது வல்லமை  இன்றும் குறைந்து போகவில்லை. அவரது மகிமையும் மாறவில்லை. ஆனால் தன்னை நாடி வந்தவர்களிடம் அவர் ஒரு காரியத்தை எதிர்பபார்த்தார். ஆம் அவர்களிடம் விசுவாசத்தை எதிர்ப்பார்த்தார். விசுவாசித்த அனைவரும் வியாதியிலிருந்து  விடுதலையாகினர். சரீரத்தில் மாத்திரமல்ல, ஆத்துமாவிலும் விடுதலை பெற்றனர். சுகம் பெற்றவுடன் மீண்டும் தங்கள் பழைய வாழ்விற்கு திரும்பாமல், இயேசுவின் அடிச்சுவடிகளை பின்பற்றினர். அவரோடு ஊழியம் செய்ய தங்களை அர்ப்பணித்தனர். புது வாழ்க்கையையே அவர்களுக்கு கொடுத்தார்.

இன்றும் சரீரத்தில் வியாதியோடு, தாங்கொண்ணா துயரோடு, என்று எனக்கு விடியால் வரும் என்று கலங்கி தவிக்கிறீர்களோ? இரவெல்லாம் தூக்கமின்றி புரண்டு புரண்டு படுத்து, எப்போது விடியும் என்று காத்து கொண்டிருக்கிறீர்களோ? வியாதியின் கொடுமை உங்களை சலிப்படைய செய்து விட்டதோ? கலங்காதீர்கள், இயேசு உங்களை சுகப்படுத்துவார். உங்களை அற்புத சாட்சியாக நிறுத்த போகிறார். அதற்கு முன் ஒரு விசை உஙக்ளை ஆராய்ந்து பாருங்கள். எனது வியாதிக்கு என் பாவ வாழ்வு காரணமோ, எச்சரிப்பின் சத்தத்தை கேட்டும் மனக்கடினமாய் வாழ்ந்ததினிமித்தம் வந்தததோ, என உங்களை நிதானித்து பாருங்கள். தேவன் உங்கள் உளளத்தில் உணர்த்துவாரென்றால் தேவ சமுகத்தில் உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள். புகை, புகையிலை, மதுபானத்தால் உங்கள் சரீரத்தின் சுகம் கெட்டிருக்குமென்றால், அவற்றை விட்டுவிட தீhமானியுங்கள். பின் முழு மனதோடு சுகத்திற்காக மன்றாடுங்கள். தேவன் உங்களை சுகப்படுத்துவார், நீங்கள்  அவருக்கு ஊழியம் செய்வீர்கள்.

பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன் என்ற வசனத்தின்படி உங்கள் ஆத்துமாவாகிய உள்ளான மனிதன் பாவமில்லாமல் பரிசுத்தமாய் வாழும்போது, உங்கள சரீரமும் சுகமாய் வாழும். ஆகவே முதலாவது உங்கள் ஆத்துமா ஆரோக்கியமுள்ளதா என்று பாருங்கள். சரீரத்தைபார்க்கிலும் ஜீவன் விசேஷித்ததல்லவா? இந்த ஆயத்தத்தோடு சுகத்தை எதிர்பாருங்கள். தேவ வல்லமை உஙகளில் வெளிப்படும். நீங்கள் உயிருள்ள சாட்சியாய் வாழ்வீர்கள்.


ஆமென் அல்லேலூயா!
நன்றி - அனுதிம மன்னா

No comments:

Post a Comment