'என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக் கொண்டார்கள்' - (எரேமியா 2:13).
இந்த இடத்தில் தேவன் தம் ஜனங்கள் தமக்கு விரோதமாக இரண்டு தீமைகளை செய்தார்கள் என்று முறையிடுகிறார். நன்மையான காரியத்தை விட்டு தீமையை தெரிந்தெடுப்பேதே மனிதனுடைய இயல்பாக இருக்கிறது. தேவனோடு மனிதன் கொண்டுள்ள உறவிலே தான் இப்படிப்பட்ட காரியங்கள் அதிகமாக காண்ப்படுகிறது. ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய தேவனை விட்டுவிட்டு, தண்ணீரே நிற்காத வெடிப்புள்ள தொட்டிகளை தெரிந்து கொள்வதே மனிதனின் இயல்பாக இருக்கிறது. கர்த்தர் தரும் இலவசமான ஜீவத்தண்ணீரின் ஊற்றிலே மொண்டு ஆனந்தமாக குடித்து மகிழ்வதை விட்டுவிட்டு, தண்ணீரே இல்லாத வெடிப்புள்ள தொட்டிகளை தங்களுக்கு வெட்டி கொண்டவர்கள் வேறு யாருமில்லை, தேவனுடைய ஜனங்களே ஆவார்கள்.
'பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்' (யோவான் 7:37-38). இயேசுகிறிஸ்து அருளும் இலவசமான ஜீவத்தண்ணீரை அருந்த மனமில்லாதபடி இன்றைய நாட்களில் அவருடைய ஜனங்கள் அவரை விட்டுவிட்டார்கள். அவரிடத்தில் விசுவாசிக்கிறவனுடைய உள்ளத்திலிருந்து ஓடும் ஜீவத்தண்ணீருள்ள நதிகளை அவர்கள் தெரிந்து கொள்ளாமல், தண்ணீரே நிற்காத வெடிப்புள்ள தொட்டிகளை தெரிந்து கொண்ட அவருடைய ஜனம், அதனால் ஒரு வெறுமையை தங்கள் இருதயங்களில் பெற்றவர்களாயிருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் என்று பெயர் கொண்டிருந்தாலும், இருதயத்தில் மகிழ்ச்சி இல்லாதவர்களாக, ஏதோ வாழ்கிறோம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உள்ளத்தில் உள்ள வெறுமையை இயேசுகிறிஸ்துவினால் மட்டுமே நிரப்ப முடியும்!
தேவன் இல்லாத வெறுமையை மாற்ற அவருடைய ஜனம் என்று சொல்லி கொள்ளுகிறவர்கள், தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக் கொண்டார்களாம். நம்மை திருப்தி செய்து கொள்ள நாமே எடுத்து கொள்கிற முயற்சி இது. இது நம்முடைய பெருமையையே வெளிப்படுத்துகிறது. நாம் எடுத்து கொள்கிற முயற்சிகள் எல்லாம், தண்ணீர் நிற்காத வெடிப்புள்ள தொட்டியை போன்றதாகும். எத்தனை முயற்சிகள் எடுத்தாலும், அந்த தொட்டி வெடிப்புள்ளதாக இருப்பதால், அங்கு தண்ணீர் ஒருக்காலும் நிற்காது. தேவன இல்லாதபடி நாம் எடுக்கிற எந்த முயற்சிகளும் வீணாணதே! எத்தனை முறை அதில் நிரப்பினாலும், அது நிறைவடையவே முடியாது. உலகத்தின் காரியங்களில் நாம் நம்மை திருப்தி படுத்தி கொள்ள நினைத்தால் அது ஒரு போதும் நம்மை திருப்தி படுத்தவே முடியாது. ஆரம்பத்தில் இனிமையாக மனமும் இருதயமும் நிரம்பினதை போல தோற்றமளிக்கும். ஆனால் அது சிறிது நேரமே, ஓட்டையான தொட்டியில் ஊற்றின தண்ணீரை போல அது சீக்கிரமே வடிந்து போய் விடும். பின் இருதயத்தில் இருப்பது வெறுமையும், குற்ற உணர்ச்சியுமே! உலக சிற்றின்பங்கள் எல்லாம் சந்தோஷத்தை கொடுப்பது, சில மணி நேரங்களுக்கு மாத்திரமே! எதுவும் நிரந்தரமானது அல்லவே அல்ல!
இதற்கு ஒரே ஒரு பதில், நாமாக முயற்சி எடுத்துகொண்டிராமல், , உடைந்து போன தொட்டியில் ஊற்றின தண்ணீரை போல தற்காலிக திருப்திப்பட்டு கொள்ளாமல், ஜீவ தண்ணீரின் ஊற்றான கிறிஸ்துவை பற்றி கொள்வோம். அந்த ஜீவத்தண்ணீர், நிரந்தரமானது, தொடர்ந்து ஊறிக்கொண்டே இருப்பது மட்டுமல்ல, அதுவே நம்முடைய ஆத்துமாவையும் ஆவியையும் திருப்திபடுத்த வல்லது. மற்றவை எல்லாம் ஓட்டையான தொட்டியில் ஊற்றப்பட்ட தண்ணீரே! வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் (இயேசுகிறிஸ்துவினிடத்தில்) விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்.
ஆமென் அல்லேலூயா!
நன்றி - அனுதின மன்னா

No comments:
Post a Comment