அவர்கள் உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவன் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா 30 : 17
தம் ஜனங்களாக தேவன் நம்மை நேசிக்கும்போது தேவன் தரும் ஆசீர்வாதங்களில் ஒன்று ஆரோக்கியம்
தந்து காயங்களை ஆற்றுவது. இஸ்ரவேல் ஜனங்களை தேவன் மீட்டுக்கொண்டபின்பு மாரா என்ற இடத்திற்கு வந்தபோது கசப்பான தண்ணீர் கிடைத்ததின் நிமித்தம் முறுமுறுத்தார்கள். தேவன் அதை மதுரமாக மாற்றினார். தேவ ஜனங்களுக்கு ஒரு வாக்குத்தத்தத்தை தந்தார். நானே உன் பரியாரியான கர்த்தர் என்றார். (யாத் 15 : 26) நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன் என்று தன் ஜனங்களுக்கு தேவன் வாக்குபண்ணுகிறார். வேதம் சொல்லுகிறது. தேவன் தாமே தம் ஜனங்களின் மீது வைத்த அன்பினால் தம்முடைய ஒரே பேரான குமாரனை சிலுவையில் பலியாக தந்து அன்பு கூர்ந்தார்.
ஏசாயா 53 : 4,5 சொல்லுகிறது. “மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களை சுமந்தார். நாமோ அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது். அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்”. தேவன் நம்மை தம் ஜனங்களாக மாற்றும்போது அவர் நமக்கு தெய்வீக சுகத்தை கட்டளையிடுகிறார்.
ஆனால் அவர் ஜனங்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன? யாத் 15 : 26-ல் வாசித்து பாருங்கள் “நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை கவனமாக கேட்டு அவர் பார்வைக்கு செம்மையானவைகளை செய்து அவர் கட்டளைகளுக்கு செவிகொடுத்து அவருடைய நியமங்கள் யாவையும் கைகொள்ள வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்”. நாமும் அவருடைய சொந்த ஜனங்களாய், அவர் நம் தேவனாக இருப்பதால் அவருக்கு கீழ்படிவோம். “வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்” யாத் 23 : 25 வாக்கை சுதந்தரித்துக்கொள்வோம்.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக.
நன்றி- விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

No comments:
Post a Comment