நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம். கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். - (ஏசாயா 53:5-6).
ஜோ என்பவர், கவர்னரின் தனிப்பட்ட ஆலோசகராக இருந்தார். கவர்னர் தன்னுடைய எல்லா காரியத்திலும் அவருடைய ஆலோசனையை கேட்காமல் ஒன்றையும் செய்ய மாட்டார். கவர்னரின் சிறந்த நண்பராக ஜோ இருந்தார். ஒரு நாள் திடீரென்று ஜோ தன் நித்திரையில் மரித்து போனார்.
அவர் மரித்த செய்தியை கேட்டவுடனே, அநேகர் கவர்னரிடம் வந்து, தங்களுக்கு அந்த பதவியை தரும்படி வேண்டிக்கொண்டனர். ஆனால் யாருக்கும் அந்த பதவியை கவர்னர் தரவில்லை. அவர் சொன்னார், 'இந்த மனிதர்களால் அந்த மனிதரின் உடலை அடக்கம் பண்ணுகிற வரைக்கூட காத்திருக்க முடியவில்லை. அதற்குள் தங்களுக்கு அந்த பதவி வேண்டும் என்று கேட்கிறார்களே' என்று வேதனைப்பட்டார்.
கல்லறையில் அவரை அடக்கம் பண்ணிவிட்டு, வரும் வழியில் ஒரு மனிதர் அவரிடம் ஓடி வந்து, 'ஐயா, ஜோ இருந்த இடத்திற்கு நான் வருவதற்கு ஏதாவது வழி உண்டா?' என்று கேட்டார். உடனே கவர்னர், 'ஓ இருக்கிறதே, சீக்கிரம் போங்கள், அந்த கல்லறை வெட்டியான், அந்த குழியை சீக்கிரம் மூடப் போகிறான்' என்று கூறினார்.
.
நம்மை சுற்றி இருக்கிற மக்கள் அநேகர், 'அவள் அல்லது அவன் இருக்கிற இடத்தில் நான் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்' என்று எத்தனையோ முறை சொல்வதை கேட்டிருக்கிறோம். ஆனால் மரிக்கும் ஒருவரின் அல்லது மரித்த ஒருவரின் இடத்தில் நாம் இருப்பதை விரும்பமாட்டோம். இங்குதான் தேவனின் அன்பு நம்மிடத்தில் வெளிப்படுகிறது. நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிதுளூ நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார் (ரோமர் 5:7-8).
பாவத்தில் மரித்த நம்மை, நம் பாவத்தினிமித்தம் நாம் படவேண்டிய பாடுகளை கிறிஸ்து நமக்காக பட்டு, நாம் இருக்கவேண்டிய இடத்தில் அவர் நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். அல்லேலூயா!
நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.
மட்டுமல்ல, இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம். (குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது (கொலோசெயர்1:13-14).
நரகாக்கினையிலிருந்து நம்மை மீட்டு, நாம் அனுபவிக்க வேண்டிய பாடுகளை தாம் சுமந்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை இரட்சித்து மீட்ட அன்பின் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவுக்கு கோடி ஸ்தோத்திரம் உண்டாவதாக. நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். அந்த பரிசுத்தமுள்ள தேவனுக்கு நன்றியாக நாம் என்றென்றும் ஜீவிப்போமா?
ஆமென்...அல்லேலூயா..
நன்றி- அனுதின மன்னா

No comments:
Post a Comment