அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக. - (சங்கீதம் 107:8).
இரண்டு நண்பர்கள் ஒருவரையொருவர் நெடு நாட்களுக்கு பிறகு சந்தித்தனர். ஒருவர் கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது. மற்றவர் அவரை பார்த்து, 'ஏன் என்ன ஆயிற்று' என்று கேட்டார். அப்போது மற்றவர், 'உனக்கு தெரியுமா, மூன்று வாரத்திற்கு முன் என்னுடைய மாமா இறந்தார். அவர் எனக்கு 4,00,000 இலட்சம் என் பேரில் எழுதிவிட்டு போனார்' என்று கூறினார். அப்போது மற்றவர், 'சந்தோஷமான செய்திதானே' என்றபோது, அவர், 'இன்னும் கேள், இரண்டு வாரத்திற்கு முன், எனக்கே தெரியாத ஒரு உறவினர் என்பேரில் 8,00,000 எழுதிவிட்டு இறந்து போயிருக்கிறார்' என்றதும், 'அடேயப்பா, இன்னும் ஏன் சோகமாய் இருக்கிறாய்' என்றதற்கு, அவர் 'இந்த வாரம் யாரும் மரித்து என்பேரில் எதையும் எழுதி வைக்கவில்லையே' என்று கூறினார்.
தொடர்ந்து ஒருவருக்கு இலவசமாக ஏதாவது கிடைத்து வந்து, அது ஒரு முறை கிடைக்கவில்லை என்றால் இந்த மாதிரிதான் நடக்கும். ஓரு நண்பர் சொன்னார், 'ஒரு மனிதனின் குணத்தை அறிய வேண்டுமென்றால் அவனுக்கு மாதாமாதம் குறிப்பிட்ட பணத்தை கொடுத்து, பின் நிறுத்தி பார்' என்று கூறினார். ஆம், அவர் சொன்னது சரிதான், ஒரு முறை நிறுத்தியவுடன், எத்தனை கோபம், எத்தனை முக வேறுபாடுகள்! என்னவோ நாம் கொடுக்கும் அந்த பணம் அவர்களுக்கு நாம் கொடுக்கவேண்டிய பாக்கி என்பது போல நடந்து கொள்ள தொடங்கினார்கள்.
அதைப்போலத்தான், கர்த்தர் நமக்கு கொடுக்கிற எல்லா ஆசீர்வாதங்களும், அதை பெற்று கொள்ளுகிற நாம் அவருக்கு நன்றியாக ஜீவிக்க வேண்டும். நாம் தங்கியிருக்கிற நல்ல வீடு, தினமும் குளிக்கும் நல்ல சுடத்தண்ணீர், குடிக்கிற நல்ல தண்ணீர், சுவாசிக்கிற சுத்தமான காற்று இவைகளை எல்லாம் அனுபவிக்கிற நாம் அதை கொடுக்கிற தேவனுக்கு நன்றி செலுத்துகிறோமா? தேவன் நமக்கு கிருபையாய் தருகிற இவை எல்லாவற்றையும் அனுபவிக்கிற நாம் அவருக்கு நன்றியாய் இருக்கிறோமா? ஒரு நாள் தண்ணீர் வரவில்லை என்றால் எத்தனை கஷ்டங்கள், எத்தனை முறுமுறுப்புகள்! மின்சாரம் கொஞ்சநேரம் தடைபடும்போது நமக்கு எத்தனை புழுக்கம், எத்தனை அசௌகரியங்கள்! இவையெல்லாம் நமக்கு கண்டிப்பாக கிடைக்க வே;ணடிய காரியங்கள் என்று நாம் எடுத்து கொள்கிறோம். ஆனால் அதையெல்லாம் நமக்கு கொடுக்கிற நம் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோமா?
'..நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும், நீ நிரப்பாத சகல நல்ல வஸ்துக்களாலும் நிரம்பிய வீடுகளையும், நீ வெட்டாமல் வெட்டப்பட்டிருக்கிற துரவுகளையும், நீ நடாத திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும், அவர் உனக்குக் கொடுப்பதினால், நீ சாப்பிட்டுத் திர்ப்தியாகும்போதும், நீ அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படப்பண்ணின கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு' (உபாகமம் 6:10-12) என்று தேவன் நம்மை எச்சரிக்கிறார். நாம் வசிக்கிற பட்டணங்கள் எத்தனை வசதியானவை, கிராமங்களில் மருத்துவ வசதி மிகவும் குறைவு, மின்சார வசதி மிகவும் குறைவு, நாம் பழங்களை நட்டு, உற்பத்தி செய்து சாப்பிடுவதில்லை, ஆனாலும் நாம் அருமையான பழ வகைகளை உண்கிறோம். வெளிநாட்டில் இருப்பவர்கள், விதவிதமான நாடுகளிலிருந்து வரும் பழவகைகளை உண்ணும் பாக்கியம்! திருப்தியாய் சாப்பிடுகிறோமே அது தேவனுடைய கிருபையல்லவா! பட்டினியாய் மடிகிற மக்கள் எத்தனைப்பேர்!
அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக என்று சங்கீதக்காரன் நமக்கு கூறுகிறார். அவர் தினமும் நமக்கு கொடுக்கும் அருமையான கிருபைளை நினைத்து அவரை துதிப்போமா! அவர் செய்கிற அதிசயங்களினிமித்தம் அவரை துதிப்போமா? இந்த நாளில் இந்த காரியங்கள் நமக்கு தான் சொந்தம் என்று நினைப்பதைவிட தேவன் நமக்கு கிருபையாய் கொடுக்கிற காரியங்கள் என்று நினைத்து அவரை முழு இருதயத்தோடு துதிப்போமா?
ஆமென்....அல்லேலூயா!
நன்றி- அனுதின மன்னா

No comments:
Post a Comment