வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார். அது தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப் போலிருந்து, பராக்கிரமசாலியைப்போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது. சங்கீதம் 19:1-5.
“ஆகாயவிரிவு” அல்லது வளிமண்டலம் வழியாக மின்னுகின்ற நட்சத்திரங்களும் கிரகங்களும் மகிமையான கடவுள் இருப்பதற்கு மறுக்க முடியாத அத்தாட்சி அளித்ததாக தாவீது உணர்ந்தார். மேலும் “அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார். அது தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப் போலிருந்து, பராக்கிரமசாலியைப்போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது. அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, அவைகளின் மறு முனைவரைக்கும் சுற்றியோடுகிறது; அதின் காந்திக்கு மறைவானது ஒன்றுமில்லை.”
மற்ற நட்சத்திரங்களோடு ஒப்பிட சூரியன் நடுத்தரமான அளவுடையது தான். ஆனாலும் இது குறிப்பிடத்தக்க ஒரு நட்சத்திரம் ஆகும்; அதனைச் சுற்றி வலம் வரும் கிரகங்கள் அதற்குப் பக்கத்தில் மிகச் சிறியவையாக தெரிகின்றன. “2-க்கு பக்கத்தில் 27 பூஜ்யங்கள் சேர்த்தால் எத்தனையோ அத்தனை டன் நிறையுடையது அது”. நம் முழு சூரிய மண்டலத்தின் மொத்த நிறையில் அது 99.9 சதவீதம்! அதன் ஈர்ப்பு சக்தியினால் பூமி அதைவிட்டு தூர விலகாமலும் அதன் கிட்டேநெருங்காமலும் 15 கோடி கிலோமீட்டர் தூரத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது. சூரியனில் வெளிப்படும் ஒளியானது பூமியை வந்தடைய 8 நிமிடம் 20 வினாடிகள் எடுக்கின்றது. சூரிய ஆற்றலில் சுமார் 200 கோடியில் ஒரு பங்கு தான் நம் கிரகத்தை எட்டுகிறது; ஆனால் உயிரைக்காக்க அதுவே போதுமானது. இந்த அளவு அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ பூமியின் சீதோஷண நிலை மாறி எல்லாம் பூமியே அழிந்துவிடும்.
அப்படிப்பட்ட சூரியனை, சங்கீதக்காரர் தாவீது அடையாள மொழியில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்;பகலில் ஒரு அடிவானத்திலிருந்து மறு அடிவானம் வரை ஓடி, இரவிலோ கூடாரத்தில் தங்கும் பராக்கிரமசாலியாக அதை அவர் சித்தரிக்கிறார். அந்த வல்லமை மிக்க நட்சத்திரம் அடிவானத்திற்கு கீழே இறங்கும்போது, பூமியிலிருந்து பார்க்கையில், அது இளைப்பாறுவதற்காக ஒரு ‘கூடாரத்திற்குள்’ போவதுபோல் தெரிகிறது. காலையில் ‘அது தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போல்’ பிரகாசமாக திடீரென வெளியே வருகிறது. தாவீது மேய்ப்பனாக இருந்ததால் இரவின் கடுங்குளிரை நன்கு அறிந்திருந்தார். சூரியக்கதிர்கள் வேகமாக தன்னையும் தன்னைச்சூழ்ந்த நிலப்பரப்பையும் எவ்வாறு வெதுவெதுப்பாக்கும் என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.
நாமோ, நமது தேவன், மகிமையின் தேவன் என்பதை அநேக வேளைகளில் நாம் மறந்து விடுகின்றோம். நம்முடைய வாழ்வின் ஆசீர்வாததிற்க்கும் விடுதலைக்கும் மட்டுமே தேவனை தேடுகின்றோம். இது போன்ற தேவைகளுக்காக தேவனை நாடி செல்வதாலேயே, நம்மால் தேவனுடைய மகிமையை அறிந்து கொள்ள முடிவதில்லை. நம்மை போல மனிதனாக வாழ்ந்த தாவீது அரசர், பாடுகளுக்கும் வேதனைகளுக்கும் மத்தியில் தேவனின் மகிமையை எண்ணி துதிக்கின்றார். வார்த்தையால் அகிலத்தையும் படைத்த சர்வல்லவரின் பிள்ளைகள் நாம் என்று தேவனை துதிக்கும் பொழுது, நமது வாழ்வின் தடைகள் மாறி, மகிமையான தேவனின் நாமம் நம் வாழ்வின் மூலமாகவும் மகிமைப்படும்.
ஆமென்..அல்லேலூயா
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக...
நன்றி- விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

No comments:
Post a Comment