அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும். ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள். - (மத்தேயு 7:17-20).
நாம் எல்லாரும் மரங்களை கண்டிருக்கிறோம். மரங்கள் நமக்கு மழைக்காக தேவை. மரங்களை வெட்டாதீர்கள் என்று அரசாங்கம் நமக்கு எச்சரித்து கொண்டே இருக்கிறது. சில நாடுகளில் மரத்தை வெட்டினாலோ, மரத்தை எந்த விதத்திலும் பாதித்தாலோ அதற்கு கடுமையான அபராதம் உண்டு. இப்படிப்பட்ட மரங்களில் நல்ல கனி கொடுக்கும் மரம் என்றும் உண்டு. கெட்ட கனிகொடுக்கும் மரங்கள் என்றும் உண்டு. காட்டு பகுதிகளில் விளையும் சில மரங்ளின் கனிகள் விஷம் நிறைந்தவை. சாப்பிடுவதற்கு அருகதை அற்றவை.
நாம் இப்போது ஒரு வாழைமரத்தை நட விரும்பினால், எலுமிச்சை விதைகளை கொண்டு வந்து நடுவோமோ? இல்லை. அதுப்போல வாழை மரத்தை எலுமிச்சை செடியின் அருகில் வைத்தாலும், அது எலுமிச்சை பழத்தை கொடுப்பதில்லை. அது வாழைப்பழத்தையே கொடுக்கும்.
நம்முடைய வாழ்க்கையும் சில வேளைகளில் எலுமிச்சையை போல புளிப்பாக இருந்தாலும், நாம் கர்த்தரால் நடப்பட்டிருந்தால், நாம் வாழைபழத்தை போல இனிமையான பழத்தையே கொடுப்போம். நம்மிடமிருந்து புளிப்பான மற்றவர்களை புண்படுத்தும் பழங்கள் வராது. துன்ப நேரத்திலும், இன்ப நேரத்திலும் ஒரே விதமான இனிமையான கனிகளையே கொடுக்க முடியும்.
நமக்கு நேரிடும் எந்த சூழ்நிலையிலும் நாம் நல்ல கனிகளை கொடுக்கவே எதிர்ப்பார்க்கப் படுகிறோம். நமக்கு துன்பம் வரும்போது வேறுவிதமான கனிகளையும், இன்ப நேரத்தில் மட்டும் தேவன் விரும்பும் கனிகளை கொடுப்போமானால், நம்மை நட்ட எஜமானாராகிய தேவனுக்கு பிரயோஜனமற்றவர்களாகவே காணப்படுவோம். எந்த நிபந்தனையுமின்றி கனிகொடுக்கவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
'உங்களுக்கு தெரியாது, நான் எந்த நிலைமையில் இருக்கிறேன் என்று, என்னாலே எந்த விதத்திலும் கட்டுபடுத்த முடியாத சூழ்நிலையில் நான் இருக்கிறேன், என்னால் எப்படி நல்ல கனிகளை கொடுக்க முடியும் என்று நீங்கள் சொல்லாம், இயேசுகிறிஸ்து எந்த நிபந்தனையுமின்றி தம்; ஜீவனை நமக்காக கொடுத்து, நம்மை நட்டு வைத்திருக்கிறாரே, அவருக்கு தெரியும் நீங்கள் எந்த சூழ்நிலையில் இருக்கிறீர்களென்று! நீங்கள் கொடுக்க முடியாதபோது அவருடைய பாதத்தில் அமர்ந்திருந்து, அவரிடத்திலிருந்து சாரத்தை பெற்றுகொண்டு மீண்டும் கனிகொடுக்கிறவர்களாக மாற வேண்டும்.
'அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்' என்ற வசனம் சொல்கிறது. இதில் மரம் நல்லதாயிருந்தால் அது நல்ல கனிகளை கொடுக்கும் என்றும் மரம் கெட்டதாயிருந்தால் அது கெட்டகனிகளை கொடுக்கும் என்று அறிகிறோம். கனிகள் நல்லதாக இருக்க வேண்டுமெனறால், அதன் மரம் நல்ல மரமாக, நன்கு ஊட்ட சத்து நிறைந்ததாக, அதை நன்கு பராமரிக்கிற தோட்டக்காரர் இருந்து கவனித்தாலொழிய அது நன்கு கனிகளை கொடுக்க முடியாது. அதுப்போல நாம் நல்ல கனிகளை நம் வாழ்வில் தர வேண்டுமென்றதால், தோட்டக்காரராகிய இயேசுகிறிஸ்து நம் வாழ்வில் நம்மை எரு இட்டு, களை பிடுங்கி, தேவையில்லாத கிளைகளை, இலைகளை தரித்து, நன்கு பராமரிக்க நம்மை அவரிடம் ஒப்பு கொடுக்க வேண்டும். அவரில்லாதபடி நாம் நல்ல கனிகளை கொடுக்க முடியாது. அவரில் நிலைத்திருந்து நல்ல கனிகளை கொடுக்கிறவர்களாக தேவன் தாமே நம் ஒவ்வொருவரையும் மாற்றுவாராக!
ஆமென்..அல்லூயா
நன்றி: அனுதின மன்னா

No comments:
Post a Comment