Thursday, 31 July 2014

அன்புகூரும் கணவன்

புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள். -  (எபேசியர் 5:25)

கல்யாணம் ஆன புதிதில் கணவன் தன் மனைவியின் மேல் வைக்கும் அன்பு மிகவும் அற்புதமானது. மனைவி தனக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் என்பது போல தங்க தட்டில் ஏந்தி நடப்பது போல மனைவியை தாங்கி நடப்பது வழக்கம். கொஞ்சம் தூரம் நடந்து விட்டால், ஐயோ உனக்கு கால் வலிக்கிறதா? காலை அமுத்திவிடட்டுமா? என்று காலை அமுக்கி விட்டு, என்னனென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்து விடுவது வழக்கம்! மனைவியின் பெயரை என்னன்ன விதமாக கூற முடியுமோ அந்தபடி யெல்லாம் கூப்பிட்டு அழைப்பது இதற்கு விதிவிலக்கல்லாத கணவன்மார் யாரும் இல்லை என கூறலாம். ஆனால் கால  போக்கில்  ஒவ்வொரு வருடமும் அந்த அன்பு குறைந்து என்ன நடக்கிறது என்பதை கீழ்கண்டவாறு காணலாம்:

கணவன் மனைவியிடம் முதல் வருடம்:


என் பிரியமே, என் இனிமையே, நான் உன்னை குறித்து மிகவும் கவலைப்படுகிறென். நீ அன்று மழையில் கொஞ்சம் நனைந்தபோதே நான் நினைத்தேன், ஐயோ என் உயிரான உனக்கு ஏதோ ஆகிவிடுமோ என்று, என் அன்பே, இன்று நான் வேலையில் இருந்து வந்தவுடன், ஆஸ்பத்திரிக்கு போவோம், நீ தும்மினால் உன் உடம்புக்கு ஆகாது, காய்ச்சல் வந்தால் உன்னால் தாங்க முடியாது! நீ டாக்டர் கொடுக்கும் மருந்தை சாப்பிட்டு நன்கு ஓய்வெடுக்க வேண்டும். சரியா? நீ ஒன்றும் சமைக்க வேண்டாம், நான் கடையில் இருந்து வாங்கி வந்து விடுகிறேன். நீ நன்கு ஓய்வெடு.

இரண்டாம் வருடம்: என் அன்பே, எனக்கு இந்த இருமல் சத்தமெல்லாம் பிடிக்காது, நான் டாக்டரை போகும் வழியில் வர சொல்லியிருக்கிறேன், அவர் வருவார். மாத்திரை சாப்பிட்டு விட்டு ஓய்வெடு. எனக்கு வேலைக்கு நேரமாகி விட்டது.

மூன்றாம் வருடம்: கொஞ்ச நேரம் நீ படுத்து எழுந்திருந்தால், இந்த சளியெல்லாம் கொஞ்சம் அடங்கும் என்று நான் நினைக்கிறென். நேரம் கிடைக்கும்போது கொஞ்சம் ஓய்வெடு.

நான்காம் வருடம்: பார், நீ வீட்டில் எல்லா வேலையும் முடித்த பின்பு கொஞ்சம் ஓய்வெடு, இப்படி இருமி கொண்டு இருக்காதே.

ஐந்தாம் வருடம்: நான் அன்று வாங்கி வந்த இருமல் சிரப்பை கொஞ்சம் குடியேன், எப்பப்பார் இருமிக் கொண்டு இருக்கிறாய்.

ஆறாம் வருடம்: உப்பு தண்ணீர் எடுத்து வாயை கொப்பளி, சும்மா கடல் சீல் மாதிரி இருமிக்கொண்டு இருக்காதே.

ஏழாம் வருடம்:
வாயில் கையை வைத்து இருமு, எனக்கு இருமலை கொடுத்து விடுவாய் போலிருக்கிறது!

அந்த மனைவிக்கு ஏழு வருடமாய் இருமல் இல்லை. ஓவ்வொரு வருடத்திலும், அவள் ஏதாவது நோய் வந்தால், கணவனின் பதில் இதுவாகாத்தான் இருக்கும்.

நான் ஒவ்வொரு கணவனும் இப்படித்தான் என்று கூறவில்லை. ஆனால் நாளாக நாளாக கணவனின் அன்பு குறைய துவங்குகிறது. ஆரம்பத்தில் இருந்த ஈடுபாடு குறைய ஆரம்பிக்கிறது. காலையில் எழுந்தோம், வேலைக்கு சென்றோம், மாலை வீடு திரும்பினோம், சாப்பிட்டோம், படுத்தோம், எழுந்தோம், திரும்ப அதே மாதிரியான அடுத்த நாள் வேலைகள்!! இப்படித்தான் அநேகருடைய வாழ்நாட்கள் போய் கொண்டிருக்கிறது. ஒரு குருவி தன் கூட்டை விட்டு தன் குஞ்சுகளுக்கு இரையை தேடி, கூட்டிற்கு திரும்ப வந்து,காலையில் திரும்ப இரை தேட போவது போல வாழ்க்கையை நாம் அமைத்து கொண்டிருக்கிறோம்.

சில கணவன்மாருக்கு 50 வயதானாலும், 60 வயதானாலும்,  தங்கள் மனைவி இன்னும் மிகவும் இளமையானவள் என்ற எண்ணம் எப்போதும் மனதில் உண்டு, அவர்களுக்கு அந்த வயதிலும் ஆசையும் நேசமும் உண்டு. மனைவியோ அப்படியல்ல, அவளுடைய பிள்ளைகள் பெரியவர்களான பின்பு அவர்களை பற்றிய எண்ணங்களுக்குத்தான் அவள் முதலிடம் கொடுப்பாளே தவிர, மற்ற எண்ணங்களுக்கு அவள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதை அறியாதிருக்கிற கணவன்மார், என் மனைவி என்னுடன் ஒத்துழைப்பதில்லை என்று குறை சொல்வார்கள். அநேக வீடுகளில் பிரச்சனை வருவதற்கு   காரணமே அதுதான். புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள். உண்மையாய் அன்புகூருகிற கணவன் தன் மனைவியை எந்த நிலையிலும் நேசிப்பான். தனக்க தேவையான நேரத்தில் அன்புகூர்ந்து விட்டு, பின் அவளை அடிமையை போல நடத்துகிற எவனும் அவளிடத்தில் உண்மையாய் அன்பு கூருகிறவனல்ல!

'நான் என் மனைவிக்கு எல்லாம் வாங்கி தருகிறேன். அவளுடைய தேவைகளை எல்லாம் சந்திக்கிறேன் வேறு என்ன அவளுக்கு வேண்டும்' என்று நீங்க்ள கேட்கலாம். நீங்கள் எல்லாம் வாங்கி கொடுத்து, அவளிடம் சற்று அமர்ந்து பேசாவிட்டால், நீங்கள் அவளுக்கு எதை செய்தாலும் பயனில்லை! ஒரு நாள் நீங்கள் கடைக்கு போய் அவளுக்கென்று ஒரு புடவை எடுத்து கொண்டு வந்து, 'பார், உன் கலருக்கு இந்த புடவை எடுப்பாய் இருக்கும்' என்று வாங்கி கொடுத்து பாருங்கள், ஊரில் உள்ள எல்லாருக்கும் அவள் சொல்வாள், 'பாருங்கள், என் கணவர் எனக்கு வாங்கி கொடுத்த புடவை' என்று.

இரண்டு பேரும் வேலைக்கு போகிற தம்பதியர் என்றால், கணவர் மனைவியின் வேலையில் பங்கு கொண்டு செய்வது மிகவும் அவசியம். நான் ஒரு சில வீடுகளில் பார்த்திருக்கிறேன், மனைவி காலையிலிருந்து, மாடு மாதிரி வேலை செய்து, உணவு செய்து, கணவனுக்கு எல்லாம் டேபிளில் வைத்து தயாராக வைத்திருக்க வேண்டும். கணவன் காலையில் எழுந்து, பேப்பர் படித்து, கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருப்பார், மனைவி கிடந்து, அவசர அவசரமாக எல்லாவற்றையும் செய்து, பிள்ளைகளையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, தானும் தயாராகி வேலைக்கு ஓட வேண்டும். அந்த மாதிரி கணவன் எப்படிப்படடவன்? மனைவியை அடிமை மாதிரி நடத்தும் காரியங்கள், தேவனுக்கு அருவருப்பானவை! ஏவாளை தேவன் காலின் எலும்பிலிருந்து படைக்கவில்லை, அவளை காலின் கீழ் போட்டு மிதிப்பதற்கு, தலையின் எலும்பிலிருந்து எடுக்கவில்லை, தலையின் மேல் அமர்ந்து அதிகாரம் செய்வதற்கு! அவர் விலா எலும்பிலிருந்து எடுத்தார், இருவரும் சமம் என்பதற்காக, ஆனால் தேவன் கணவரை குடும்பத்தின் தலையாக வைத்திருப்பதை மனைவிகளும் உணர்ந்து, கணவனுக்குரிய மதிப்பை தர வேண்டும். இப்படி ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து, ஒருவரையொருவர் மதித்து வாழும் குடும்பங்களில் தேவன் வந்து வாசம் பண்ணுகிறார். அதை ஆசீர்வதிக்கிறார். அப்படிப்பட்ட குடும்பங்களாக நம் குடும்பங்கள் திகழ தேவன் தாமே கிருபை செய்வாராக!

ஆமென்..அல்லேலூயா
நன்றி- அனுதின மன்னா

Wednesday, 30 July 2014

நீ என்னை நம்பினபடியினால்

'நீ போய், எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக்குக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்..இந்த நகரத்தின்மேல் நன்மையாக அல்ல, தீமையாகவே வரப்பண்ணுவேன்.. ஆனால் அந்நாளிலே உன்னைத் தப்புவிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நீ பயப்படுகிற மனுஷரின் கையிலே ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை.  உன்னை நிச்சயமாக விடுவிப்பேன், நீ பட்டயத்துக்கு இரையாவதில்லை; நீ என்னை நம்பினபடியினால் உன் பிராணன் உனக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப்போல இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்'. - (எரேமியா 39:16:18).

இந்த வார்த்தைகள் எரேமியா தீர்க்கதரிசிக்கு அவர் காவற்சாலையிலிருந்த தண்ணீர் இல்லாத உளையாயிருந்த துரவிலே தூக்கி போடப்பட்டு, பின் எபெத்மெலேக்கின்  மூலமாக விடுவிக்கப்பட்டு, காவற்சாலையின் முற்றத்தில் வைக்கப்பட்டிருந்தபோது கர்த்தர் அவர் மூலமாக எபெத்மெலேக்குக்கு வாக்குதத்தம் பண்ணின வார்த்தைகளாகும். எபெத்மெலேக்கு புறஜாதியை சேர்ந்தவன், அவன் ராஜாவின் அரண்மனையில் வேலையில் இருந்தவன், எத்தியோப்பியாவை சேர்ந்தவன். இருப்பினும் அவனுக்கு தேவன் அந்த வாக்குதத்தத்தை கொடுத்தார். ஏன் கொடுத்தார்? ஏன் என்றால், எரேமியாவின் சொந்த ஜனங்களே அவரை தண்ணீர் இல்லாத உளையாயிருந்த துரவிலே போட்டபோது, இந்த எபெத்மெலேக்கு தானே ராஜாவிடம் சென்று, எரேமியாவிற்காக பரிந்து பேசினான். மட்டுமல்ல, தானும் தன்னோடு முப்பதுபேரும் சேர்ந்து, எரேமியாவை அந்த உளையான துரவிலிருந்து மீட்டார்கள். 'அவர்கள் எரேமியாவைத் துரவிலே போட்டதை ராஜாவின் அரமனையில் இருந்த எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக் என்னும் ஒரு பிரதானி கேள்விப்பட்டான்; ராஜாவோ பென்யமீன் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அப்பொழுது எபெத்மெலேக் ராஜாவின் அரமனையிலிருந்து புறப்பட்டுப்போய், ராஜாவை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவனே, இந்தப் புருஷர் எரேமியா தீர்க்கதரிசியைத் துரவிலே போட்டுச் செய்தது எல்லாம் தகாத செய்கையாயிருக்கிறது; அவன் இருக்கிற இடத்திலே பட்டினியினால் சாவானே, இனி நகரத்திலே அப்பமில்லை என்றான்.

அப்பொழுது ராஜா எபெத்மெலேக் என்னும் எத்தியோப்பியனை நோக்கி: நீ இவ்விடத்திலிருந்து முப்பது மனுஷரை உன்னுடனே கூட்டிக்கொண்டுபோய், எரேமியா தீர்க்கதரிசி சாகாததற்குமுன்னே அவனைத் துரவிலிருந்து தூக்கிவிடு என்று கட்டளையிட்டான். அப்பொழுது எபெத்மெலேக் அந்த மனுஷரைத் தன்னுடனே கூட்டிக்கொண்டு, ராஜாவின் அரமனைப் பொக்கிஷசாலையின் கீழிருந்த அறைக்குள் புகுந்து, கிழிந்துபோன பழம்புடவைகளையும் கந்தைத்துணிகளையும் எடுத்துக்கொண்டுபோய், அவைகளைக் கயிறுகளினால் எரேமியாவண்டைக்குத் துரவிலே இறக்கிவிட்டு, எபெத்மெலேக் என்னும் எத்தியோப்பியன் எரேமியாவுடனே: கிழிந்துபோன இந்தப் பழம்புடவைகளையும் கந்தைகளையும் உம்முடைய அக்குள்களில் கயிறுகளுக்குள் அடங்கவைத்துப் போட்டுக்கொள்ளும் என்றான்; எரேமியா அப்படியே செய்தான். அப்பொழுது எரேமியாவைக் கயிறுகளால் தூக்கி, அவனைத் துரவிலிருந்து எடுத்துவிட்டார்கள்; எரேமியா காவற்சாலையின் முற்றத்தில் இருந்தான்'. - (எரேமியா 38:7-13).

எபெத்மெலேக் ஏன் அதை செய்தான்? அவன் புறஜாதியானவனாய் இருந்தாலும், அவன் கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்திருந்தான் என்று வேதம் சொல்லுகிறது. அந்த நம்பிக்கை, அவனை தேவனுடைய தீர்க்கதரிசியாகிய நெகேமியாவை காப்பாற்ற வைத்தது. அந்த நேரத்தில் அரண்மனையில் பெரிய வேலையில் இருந்தவர்களும், பெரிய ஆட்களும் இராஜாவின் இருதயத்தை நெகேமியாவிற்கு எதிராக திருப்பி கொண்டிருந்தாலும், துணிந்து போய், நெகேமியாவிற்காக பரிந்து பேசி, அவரை சாவிலிருந்து தப்புவித்த எபெத்மெலேக்கின் செய்கையை மனிதர்கள் யாரும் பாராட்டவில்லை. ஆனால், தேவன் அதை பார்த்தார்;. அவனை பாராட்டினார், வாக்குதத்தங்களை கொடுத்தார்.

எரேமியாவிடம் ஆண்டவர் சொல்கிறார்,  'நீ போய், எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக்குக்குச் சொல்லவேண்டியது' என்று வாக்குதத்தங்களை சொல்லி, விசேஷித்த கிருபைகளை தேவன் அவனுக்கு கொடுக்கிறார்.

தேவன் தமது ஊழியருக்கு நீங்கள் செய்யும் காரியங்களை கவனிக்கிறார். நீங்கள் அவர் மேல் வைக்கும் நம்பிக்கையை அவர் அறிந்திருக்கிறார். '..இந்த நகரத்தின்மேல் நன்மையாக அல்ல, தீமையாகவே வரப்பண்ணுவேன்.. ஆனால் அந்நாளிலே உன்னைத் தப்புவிப்பேன்' என்று சொல்லி அதன்படியே எபெத்மெலேக்கை தப்புவித்த தேவன், இன்றும் நாம் செய்யும் காரியங்களையும், நாம் அவர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையையும் கவனித்து, தீங்கு நாளில் நம்மையும் காப்பாற்றுவார். நமக்கு தீங்கு வரும் நாளில் நெருக்கடி நேரத்தில் நம்மை காப்பாற்ற தேவன் வல்லமையுள்ளவராகவே இருக்கிறார்.  நாம் தேவன் மேல் வைக்கும் நம்பிக்கையை விட்டுவிடாமலும், அவருக்காக செய்யும் எந்த செயலையும் யாரும் கவனிக்கவில்லையே என்று சோர்ந்து போகாமலும், தொடர்ந்து செய்வோம். யார் கவனிக்காவிட்டாலும், தேவன் நம்மை காண்கிறார். நம்முடைய செயல்களுக்கு அவர் பதிலளிப்பார். 


ஆமென் அல்லேலூயா!

நன்றி :அனுதின மன்னா

Tuesday, 29 July 2014

பொக்கிஷங்களைய உனக்குக் கொடுப்பேன்

வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்; நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு நாமம் தரித்தேன். ஏசாயா 45:4

நேற்றைய தினம் ஒரு சகோதரன் வீட்டிற்கு ஜெபிக்க சென்றிருந்தேன். மிகவும் பொருளாதார நெருக்கடியில் வாழும் அந்த குடும்பத்தினர் மிகவும் மனம் தளர்ந்து காணப்பட்டனர். அப்பொழுது அவர்களுக்காக ஜெபிக்கையில், ஏசாயா 45:4-ம் வசனத்தில் சொல்லப்பட்டபடி “வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும்,ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்” என்ற வார்த்தையின் மூலம் அவர்களை தேற்றினார். மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் அக்குடும்பத்தினர் விண்ணுலகில் தேவன் அவர்களுக்காய் வைத்திருக்கும் பொக்கிஷங்களை நினைத்து கவலை மறந்து தேவனை துதித்தனர்.

வேதத்தின் பழைய ஏற்ப்பாட்டில் ரூத் என்ற தரித்திர நிலையில் வாழ்ந்த பெண்ணைக் குறித்து வாசிக்கின்றோம். செல்வந்தராகிய போவாஸ் அந்த பெண்ணுக்கு மறுவாழ்வு கொடுத்து தனது மனைவியாக மாற்றிக்கொள்கிறார். புதிய ஏற்ப்பாட்டு காலத்தில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து போவாசுக்கு ஒப்பனையாக உள்ளார். தரித்திர நிலையில் வாழ்ந்த ரூத், மறுவாழ்வு கொடுக்கபடுகிற சபைக்கு ஒப்பனையாக உள்ளார். போவாஸ் ரூத்தை தனது மனைவியாக்கிக் கொண்டவுடன்,அவளுடைய தரித்திர நிலைமை மாறி, போவாசுக்க்ககுறிய எல்லா சொத்தும் அவளுக்கும் உரியதாக மாறியது. அதேபோல நாமும் கர்த்தருடைய ரகசிய வருகையில் சபையாக, அவருடைய மனடவாட்டியாக மீட்டுக்கொள்ளப்படுவோம். அப்பொழுது அவருடைய எல்லா சுதந்திரத்திற்கும் உரியவர்களாக நாம் காணப்படுவோம்.

“அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை,அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின” என்ற வெளிப்படுத்துதல் 21:4–ம் வசனத்தின் படி இயேசு நம் கண்ணீரைத் துடைத்து, துக்கமில்லாத, மரணமில்லாத மகிமையான வாழ்வை நமக்கு தந்தருள்வார். ஆகவே, “இவ்வுலக பாடு என்னை என்ன செய்திடும்? அவ்வுலக வாழ்வைக் காண காத்து நிற்கின்றேன்.” என்று உறுதியுடன் சொல்லத்தக்கதாயும் எதிர்நோக்குகின்ற எல்லாத் துன்பங்களும்,துயரங்களும், பாடுகளும், பயங்கரங்களும், கண்ணீரும், கவலையும் இனிவரும் மகிமைக்கு ஈடாகாது என்று உணர்ந்தவர்களாய், எதைக் குறித்தும் கலங்காமல் வாழ்க்கைஓட்டத்தை தொடர்ந்து ஓடுவோம்.

ஆமென்..அல்லேலூயா

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக
நன்றி- விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

Sunday, 27 July 2014

என் கரத்தினால் உன்னை மூடுவேன்

“இதோ, என்னண்டையில் ஒரு இடம் உண்டு; நீ அங்கே கன்மலையில் நில்லு. என் மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகுமட்டும் என் கரத்தினால் உன்னை மூடுவேன்” (யாத். 33:21,22)


மோசேக்கு, கர்த்தர் தன்னுடைய மகிமையைக் காண்பித்தபோது, தமது திரித்துவத்தை வெளிப்படுத்தினார். இங்கே முதலாவது, கன்மலையாகிய தேவனைப் பார்க்கிறோம். இரண்டாவது,கரத்தினால் மூடும் தேவனைப் பார்க்கிறோம். மூன்றாவது, மகிமையோடு கடந்துபோகும் தேவனைப் பார்க்கிறோம். இதன் மூலம் மோசேக்கு கர்த்தர் ஒரு மகிமையின் வெளிப்பாட்டை கொடுக்கச் சித்தமானார். கர்த்தர் எப்போதும் உங்களிடம், “என் மகனே, மகளே, என்னண்டை ஒரு இடம் உண்டு. நீ அங்கே கன்மலையில் நில்லு” என்று அன்போடு அழைக்கிறார்.

பிரச்சனைகள், போராட்டங்களின் மத்தியிலும், கர்த்தரண்டை உங்களுக்கு நிச்சயமாகவே ஒரு இடம் உண்டு. உங்களுக்கு அடைக்கலம் கொடுக்கும், அந்த கன்மலையிலே வெடிப்பு உண்டு. “அந்தக் கன்மலை கிறிஸ்துவே” என்று 1 கொரி.10:4-ல் நாம் வாசிக்கிறோம். அந்தக் கன்மலை ஜீவத்தண்ணீரைப் புறப்படப்பண்ணின ஞானக் கன்மலை. கன்மலையின் வெடிப்பு என்பது கிறிஸ்துவினுடைய காயங் களாகும்.

உங்களை தமக்குள் மறைத்துக் கொள்வதற்காகவே, இயேசு பிளவுண்ட கன்மலையானார். நீங்கள் அவருடைய காயங்களுக்குள் இருந்தால்தான், அவருடைய இரத்தத்தின் புண்ணியத்தின் மூலமாக,தேவனுடைய மகா மகிமையைக் கிட்டிச்சேர முடியும். அவர் உங்களை மிகுந்த அன்போடு, “கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே!” என்று அழைக்கிறார் (உன். 2:14). கிறிஸ்துவுக்குள் மறைந்திருக்கிற தேவபிள்ளைகளை, பிதாவாகிய தேவன் தம்முடைய அன்பின் கரத்தினாலே மூடுகிறார். மோசேக்கு முன்பாக மகிமையோடு கடந்துப் போகிறவர், மகிமையின் ஆவியானவர் (1பேது. 4:14). ஆகவே, மகிமையை காண வாஞ்சிக்கிற தேவபிள்ளைகளுக்கு, பிதாவாகிய தேவனும், குமாரனாகிய தேவனும், பரிசுத்த ஆவியானவரும் இணைந்து, தங்களுடைய மகிமையை விளங்கச் செய்கிறார்கள்.

நான் சிறுவனாய் இருந்த காலத்தில், சூரிய கிரகணத்தின்போது, விளக்கு சிம்னியிலுள்ள கண்ணாடியிலே புகைப்பிடித்து அதன் வழியாக சூரிய கிரகணத்தின் காட்சியை நோக்குவதுண்டு. இப்பொழுதெல்லாம் கூலிங் கிளாஸ் மூலமாக சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும். அதுபோலவே,கர்த்தருடைய மகிமையை வெறும் கண்களால் காண முடியாது. கன்மலையின் வெடிப்பிலே உள்ள இயேசுவின் இரத்தத் தின் மூலமாகதான், தேவனுடைய மகிமையின் சாயலைக் காண முடியும். போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; அவருடைய விலா பிளக்கப்பட்டு, உடனே தண்ணீரும் இரத்தமும் புறப்பட்டு வந்தது. ஆம், தேவமகிமையை காண அங்கே உங்களுக்கு ஒரு இடம் உண்டு. நீங்கள் கிறிஸ்துவினுடைய காயங்களை தியானித்து, கல்வாரி அன்புக்குள் புகுந்துக் கொள்ளும்போது, அவர் உங்களுக்கு தம்முடைய மகிமையைக் காண்பிப்பார்.

ஆமென்..அல்லேலூயா
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக

நன்றி - அன்றன்றுள்ள அப்பம், விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

Friday, 25 July 2014

எழும்பிப் பிரகாசி

“எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது” (ஏசா. 60:1).

நீங்கள் மகிமையைக் கண்டால் மட்டும் போதாது, பிரதிபலித்தாலும் போதாது, நீங்கள் எப்பொழுதும் மகிமையின் அபிஷேகத்தால் நிரப்பப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் எழும்பிப் பிரகாசித்து, இருளில் வாழும் ஜனங்களை தேவனிடத் திற்குக் கொண்டு வரவேண்டும். நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமா இருக்கிறீர்கள் அல்லவா? நீங்கள் எழும்பிப் பிரகாசிக்கும்போது நிச்சயமாகவே புறஜாதி மக்களும், ஜனங்களும் உங்களிடத்திற்கு வருவார்கள். கர்த்தர் வாக்குப்பண்ணி சோல்லுகிறார், “உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள்” (ஏசா. 60:3).

வெளிச்சத்தைத் தேடி ஈசல்கள் பறந்து வருவதைப் போல, நிச்சயமாகவே பிரச்சனை உள்ளவர்கள் ஜெபத்திற்காக உங்களைத் தேடி வருவார்கள். “இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்” (ஏசா.60:2). நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு உங்களுடைய நேரங்களையும், வரங்களையும்,கிருபைகளையும், தாலந்துகளையும் கர்த்தருடைய ஊழியத்திற்கு செலவழிப்பீர்களோ,அவ்வளவுக்கவ்வளவு தேவ மகிமை உங்களை நிரப்பிக் கொண்டே இருக்கும். இறைக்கிற கிணறு ஊறிக்கொண்டே இருக்கும் அல்லவா? மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்க மாட்டாது.

ஆகவே, கர்த்தருக்காக எழும்பிப் பிரகாசியுங்கள். உபவாசித்து, ஜெபித்து, எப்பொழுதும் தேவ ஆவியினாலும், மகிமையினாலும் நிரப்பப்படுங்கள். “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப் போலச் சேட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப் படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்” (ஏசா. 40:31). கர்த்தர் உங்களை எழும்பிப் பிரகாசிக்கச் சேயும்போது, எப்பொழுதும் கர்த்தரை உயர்த்திக்கொண்டே இருங்கள். கனத்தையும், மகிமையையும் அவருக்குச் சேலுத்துங்கள். “அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்” (யோவான் 3:30) என்று சொன்ன யோவான் ஸ்நானகனைப் போல, எப்பொழுதும் அவருடைய நாமத்தை உயர்த்துங்கள். அப்பொழுது மகிமையின்மேல் மகிமையடைவீர்கள்.

நாம் அணைந்து, குளிர்ந்து கிடக்கிற விளக்கைப் போல அல்ல. தண்டின் மேல் வைக்கப்பட்டு வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும் விளக்காக காணப்படவேண்டும். ஒரு விளக்கு எரிய வேண்டுமென்றால், அதின் திரி எப்பொழுதும் எண்ணெக்குள் மூழ்கி இருக்க வேண்டுமல்லவா?பரிசுத்த ஆவியானவராகிய எண்ணெக்குள் நம்முடைய உள்ளத்தின் ஆழம் எப்பொழுதும் மூழ்கி இருக்கும்போது, அபிஷேகத்தை உறிஞ்சி மேலே எழும்பிப் பிரகாசிப்பீர்கள். எண்ணெ குறைந்துவிட்டாலோ, அல்லது நின்று விட்டாலோ, விளக்கு அணைந்து விடும். ஆகவே பரிசுத்த ஆவியானவருடைய நிறைவு எப்பொழுதும் நம்முடைய ஆவியில் இருக்கட்டும்
ஆமென் .. அல்லேலூயா !
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக

நன்றி - அன்றன்றுள்ள அப்பம், விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

Wednesday, 23 July 2014

பயப்படாதே, உன்னை மீட்டுக்கொண்டேன்

“… இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது; பயப்படாதே, உன்னை மீட்டுக்கொண்டேன்…” (ஏசா. 43:1).

உங்களை சிருஷ்டித்தவர்தான், உங்களை உருவாக்கும் பொறுப்பையும் எடுத்துக் கொண்டார். இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு விசுவாசியையும், கர்த்தர் நீதிமானாக, பரிசுத்தவானாக உருவாக்குகிறார். நீங்கள் கிறிஸ்துவின் பூரணத்தை அடைய அழைக்கப்பட்டவர்கள். உங்களை கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவர்களாக நிலைநிறுத்தும்படி, எல்லா ஊழியர்களும் உங்களுக்காக பாடுபடுகிறார்கள்.

உதாரணமாக, உங்களுடைய மகனை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கிறீர்கள். அவன் ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள் அங்கே படிக்கவேண்டும். அதன்பிறகு, அனுபவமுள்ள டாக்டர்களின் கீழ், ஓராண்டு உதவியாளராக இருந்து, டாக்டர் தொழிலை கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் மகனை பல பேராசிரியர்கள், பல புத்தகங்கள், பல அனுபவங்கள், பல செய்முறை பயிற்சிகள், டாக்டராக உருவாக்கி விடுகின்றன. பிற்காலத்தில் அவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
அதுபோல, ஆவிக்குரிய ஜீவியத்தில் உங்களை உருவாக்குவதற்காக, சபையில் ஐந்து வகை ஊழியர்களைக் கர்த்தர் வைத்திருக்கிறார். அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள்,மேய்ப்பர்கள், போதகர்கள் இணைந்து உங்களை உருவாக்கு கிறார்கள். வேத புத்தகம் உங்களை உருவாக்குகிறது. பரிசுத்த ஆவியானவரும், நீங்கள் பரிசுத்தமுள்ள பாத்திரங்களாக விளங்கும்படி,உங்களை உருவாக்குகிறார்.

நீங்கள் கர்த்தருடைய கரத்திலே, களிமண்ணைப்போல இருக்கிறீர்கள். இந்த களிமண்ணை எந்தப் பாத்திரமாக உருவாக்கலாம் என்பதைக் குறித்து கர்த்தருக்கு திட்டமான ஒரு நோக்கம் உண்டு,சித்தமுண்டு, ஒரு வலுவான செங்கல்லை உருவாக்க வேண்டுமானால், அது அக்கினி சூளையின் வழியாக கடந்து வரவேண்டியது அவசியமாய் இருக்கிறது. அதுபோலவே கர்த்தர் உங்களை அக்கினி அபிஷேகத்தால் நிரப்புகிறார். அப்படியே கர்த்தர், யாக்கோபை, இஸ்ரவேலாய் உருவாக்கினார்.

யார் இந்த யாக்கோபு? யார் இந்த இஸ்ரவேல்? அது நாம் தான். வேதம் சொல்லுகிறது: “உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம் (ரோம. 2:29). பழைய ஏற்பாட்டு இஸ்ரவேலர், கர்த்தரோடு விருத்த சேதனத்தின் மூலம் உடன்படிக்கை செய்தார்கள். நாமோ கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் உடன்படிக்கை செய்திருக்கின்றோம். “யாக்கோபே, உன் கூடாரங்களும், இஸ்ரவேலே, உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்!” (எண். 24:5). “கர்த்தர் யாக்கோபைத் தமக்காகவும்,இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார்” (சங். 135:4). நாம் கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட அவருடைய சொந்த ஜனமாய் இருப்பதால் எதைக் குறித்தும் கலங்க வேண்டாம். கர்த்தர் நமக்காய் யூத்தம் செய்வார்.
ஆமென்.. அல்லேலூயா
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக

நன்றி - அன்றன்றுள்ள அப்பம்,

Monday, 21 July 2014

குணசாலியான ஸ்திரீ

குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது. - (நீதிமொழிகள் 31:10).

குணசாலியான ஸ்திரீ, இவள்தான் ஒவ்வொரு இள வாலிபனின் கனவு. எந்த ஒரு திட்டமும் தீட்டி அவன் அப்படிப்பட்ட பெண்ணை பெற முடியாது. ஆனால் அவன், தன் தேவனிடம் தன் கனவுகளையும், தன் எதிர்ப்பார்ப்புகளையும் ஒப்புக்கொடுத்து, அவருடைய நேரத்திற்காக காத்திருப்பானானால், நிச்சயமாக தேவன் அப்படிப்பட்ட பெண்ணை அவனுக்கு கொடுக்க வல்லமையுள்ளவராகவே இருக்கிறார். ஏவாளை ஏற்ற துணையாக ஆதாமுக்கு உருவாக்கி, அவளை அவனிடத்தில் கொண்டு வந்த தேவனல்லவா அவர்!

அப்படிப்பட்ட மனைவியை பெற்ற மனிதன், முதலாவது அறிந்து கொள்ள வேண்டும், அவளுடைய விலை முத்துக்களை பார்க்கிலும் உயர்ந்தது என்று. இப்போது உலகம் மூன்று WWW உடைய பெண்ணைத்தான் தேடி கொண்டிருக்கிறது. Working, White, Wisdom உடைய  பெண்ணைத்தான் தங்கள் மகனுக்கு தேடி கொண்டிருக்கிறார்கள். பெண்ணின் அழகு, வேலை, படிப்பு, கலர், குடும்ப செல்வாக்கு, சொத்துக்கள் இவைதான் ஒரு பெண்ணை திருமணம் செய்ய உலகம் முதலாவது பார்க்கிறது. இவைகள் ஒரளவு முக்கியம் என்றாலும், தேவ பக்தியுள்ள பெண்ணோ இவைகள் எல்லாவற்றிலும் மேலானவள். அப்படிப்பட்ட பெண்ணை வாஞ்சிக்கும்போது நிச்சயமாக தேவ கிருபையும் ஆசீர்வாதமும் அங்கு இருக்கும். அவை உலகத்தின் எல்லா சம்பத்துக்களைவிட மிகவும் உயர்ந்தது. குணசாலியான பெண்ணின் விலை இந்த உலகத்தின் எல்லா செல்வத்திற்கும் மேலானது.

ஒரு மனிதன் தனக்கு அழகான பெண் வேண்டும் என்று தேடினால் நிச்சயமாக அவனுக்கு கிடைக்கும். ஆனால் அந்த அழகு என்றும் நிலைக்காது. சிலர் தங்களுக்கு ஒரு சில நடிகைகள் போன்ற அழகுள்ள மனைவி வேண்டும் என்று கனவு காண்பதுண்டு. அந்த அழகு வீண், மாiயானது என்று நினைப்பதில்லை. 'சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்' (நீதிமொழிகள் 31:30) என்று வேதம் சொல்கிறது. அழகு நாளாக ஆக குறைய ஆரம்பிக்கும். ஆரம்பத்தில் இருந்த அழகு கடைசிவரை நிலைப்பதில்லை. ஆனால் கர்த்தருக்கு பயப்படுகிற ஸ்திரீயின் அழகு நாளாக நாளாக கர்த்தரின் அழகு அவளில் தெரிய, அவள் அழகாக விளங்க ஆரம்பிப்பாள்.

வேதத்தில் அப்படிப்பட்ட குணசாலியான ஸ்திரீ ஒருவள் இருந்தாள். அவள்தான் ரூத். 'இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாம் அறிவார்கள்' (ரூத் 3:11) அவள் குணசாலியானவள் என்று ஊராரெல்லாம் அறிந்திருந்தார்கள். அது எப்படிப்பட்ட ஆசீர்வாதம்! ஆகையால் அவள் புறஜாதியான மோவாபிய ஸ்திரீயாயிருந்தாலும் கிறிஸ்து அவளுடைய சந்ததியில் பிறந்தார்.

குணசாலியான ஸ்திரீ என்றால் என்ன? அவளுடைய எட்டு வகையான குணநலன்களை நீதிமொழிகள் 31ம் அதிகாரதிதிலிருந்து பார்ப்போம். அந்த எட்டு குணநலன்களையும் ரூத் கொண்டிருந்தார்கள்.

1. குணசாலியான ஸ்திரீ தன் குடும்பத்தின் நன்மைக்காக பாடுபடுவாள். தன் கணவனின் காரியங்களிலும், வீட்டின் காரியங்களிலும் கருத்துள்ளவளாயிருப்பாள். 'அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்; அவன் சம்பத்துக் குறையாது.அவள் உயிரோடிக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையையல்ல, நன்மையையே செய்கிறாள்' -  (நீதிமொழிகள் 31:11-12).

2. குணசாலியான ஸ்திரீ தான் செய்யும் வேலையை சந்தோஷமாய் உற்சாகத்தோடே செய்வாள். (13ம் வசனம்).

3. குணசாலியான ஸ்திரீ தன் வேலையில் கவனமாய் ஞானமாய் செய்வாள் (நீதிமொழிகள் 14-24).

4. குணசாலியான ஸ்திரீ தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது. (26ம் வசனம்). வீடு வீடாக ஏறி ஊர்க்கதைகளை பேசி கொண்டிருக்காமல், ஞானமாய் தன் வாயை திறந்து போதிக்கிறாள்.

5. குணசாலியான ஸ்திரீ கர்த்தருக்கு பயப்படுகிறவளாக,     அவர் மேல் தன் நம்பிக்கையை வைக்கிறவளாக இருக்கிறாள் (வசனம் 30).

6. குணசாலியான ஸ்திரீ தன் உடையில் மிகவும் கவனமாயிருக்கிறாள். மற்றவர் குறை கூறாவண்ணம், சரியான முறையில் உடுத்தி, அலங்காலம் செய்கிறாள். (வசனம் 22,25).

7. குணசாலியான ஸ்திரீ தன் கணவனை தவிர மற்ற ஆண்களிடம் மிக கவனமாக பழகுவாள். அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்; அவன் சம்பத்துக் குறையாது. அவள்; புருஷன் தேசத்து மூப்பர்களோடே நியாயஸ்தலங்களில் உட்கார்ந்திருக்கையில் பேர்பெற்றவனாயிருக்கிறான். (வசனம் 11:23) மோசமான நடத்தை உள்ள பெண்ணின் கணவன் நியாயஸ்தலங்களில் உட்கார முடியாது.

8. குணசாலியான ஸ்திரீ தன் குடும்பத்திற்கும், தன் பின்வரும் சந்ததிக்கும் எப்போதும் ஆசீர்வாதமாக இருப்பாள் (வசனம் 28-29).

ரூத்திற்கு இத்தனை குணநலன்களும் இருந்தபடியால்தான் அவள் குணசாலி என்ற பெயர் பெற்றாள். இந்த குணநலன்கள் இருந்தபடியால் அதை கவனித்த போவாஸ் அவளை மணந்து கொண்டார். இந்த காலத்து வாலிப பெண் பிள்ளைகள் இந்த குணங்களை கொண்டவர்களாக இருக்க முயற்சிக்க வேண்டும். நமது குடும்பத்தில் உள்ள பெண் பிள்ளைகள் இந்த குண நலன்களை உடையவர்களாக இருக்கும்படியாக நாம் ஜெபிக்க வேண்டும். கணவனும், பிள்ளைகளும் உற்றார் உறவினரும், ஊராரும் பாராட்டும் குணசாலியான பெண்ணாக ஒவ்வொரு கிறிஸ்தவ பெண்ணும் இருக்க பிரயாசப்படவேண்டும்.

ஆமென் ...அல்லேலூயா
நன்றி: அனுதின மன்னா

Friday, 18 July 2014

கனிகொடாத அத்திமரம்

ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது'. - (யோவான் 15:4-5).

ஒரு மனுஷன் தன் திராட்சை தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டான். அவன் வந்து அதில் கனியை தேடின போது ஒன்றும் காணவில்லை. மூன்று வருடமாய் கனிகொடாமல், நிலத்தையும் கெடுத்து கொண்டிருக்கும் அம்மரத்தை வெட்டி எறியும்படி தோட்டக்காரனிடம் கட்டளையிடுகிறான். தோட்டக்காரனோ அம்மரத்திற்காக பரிந்து பேசுகிறான். இந்த வருஷம் இருக்கட்டும். அதை சுற்றி கொத்தி, எரு போடுகிறேன். கனி கொடுத்தால் பார்ப்போம் இல்லாவிட்டால் வெட்டி விடலாம்' என்றான். (லூக்கா 13:6-9). இது இயேசுகிறிஸ்து சொன்ன ஒரு உவமையாகும். இந்த வசனத்தை வைத்து அநேகர் அநேகவிதமாக பிரசங்கித்து இருக்கலாம். நாம் அதை வேறு விதமாக பார்க்க போகிறோம்.

முதலில் அத்திமரத்தின் குணநலன்களை பார்ப்போம்:

1. இனிய பழங்களை கொடுக்கும் - (லூக்கா 13:7).

2. புற்று நோய்க்கு மருந்தாக பயன்படும் - (2 இராஜாக்கள் 20:7).

3. நல்ல நிழல் கொடுக்கும் - (மீகா 4:4).

பொதுவாக திராட்சை தோட்டத்தில் அத்தி மரத்தை நட அவசியமே இல்லை. ஏனென்றால் அதற்கு வெயில் தான் வேண்டுமேயன்றி நிழல் தேவையில்லை. பின் ஏன் ஒரு அத்திமரத்தை அங்கு நாட்டினார்? ஒருவேளை தோட்டத்தில் வேலை செய்பவர்கள் அதன் நிழலில் ஓய்வெடுப்பதற்காக நட்டியிருக்கலாம். பணியாளர்களும் அங்கு உணவருந்திவிட்டு களைப்பை போக்கியிருக்கலாம். இருப்பினும் எஜமான் மூன்று வருடமாக அதன் கனியற்ற தன்மையை கவனித்து வருகிறார். அது அவருக்கு மனவருத்தத்தை தந்தது. அவ்வத்திமரம் ஐம்பது சதவிகிதம் வேலையை மிக சரியாக செய்தது. அதாவது நிழலை கொடுத்து, தான் இருந்த இடத்தில்   தன் பணியை செய்து கொண்டிருந்தது, இளைப்பாற வந்த அனைவருக்கும் அது ஆதரவளித்தது. ஆனால் அது தனது மீதி 50 சதவிகித வேலையான கனி கொடுப்பதை செய்யவில்லை. எஜமான் அதின் கனியை எதிர்ப்பார்த்தது சாப்பிட மட்டுமல்ல, எசேக்கியா போன்ற புற்று நோயாளிகளுக்கு மருந்தாக போட தேடியிருக்கலாம். எஜமானின் விருப்பம் அது, மற்றவர்கள்pன் காயத்தையும் கட்டவும் பயன்பட வேண்டும் என்பதே. ஆனால் அவ்வத்திமரமோ எஜமானின் விருப்பத்தை நிறைவேற்றவில்லை, கனியை கொடுக்கவில்லை.

இன்றைக்கு நம்மில் அநேகரும் கூட நாமுண்டு, நம் வேலையுண்டு என்றும், நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்வதில்லை என்ற சுய திருப்தியோடு ஐம்பது சதவிகிதம் வேலையை மாத்திரமே நிறைவேற்றினவர்களாக காணப்படுகிறோம். ஆனால் அந்நிலை தொடருமானால் எஜமானாகிய கர்த்தர் நம்மை வெட்டிப்போடு என்பார். அப்படியென்றால் மீதி 50 சதவிகிதம் நாம் என்ன செய்ய வேண்டும்? கனி கொடுக்க வேண்டும். நாம் கொடுக்கும் கனி பிறரது ஆத்துமாவையும் சரீரத்தையும் உயிர்ப்பிக்க வேண்டும். நமது உதடுகளின் கனி மன பாரத்தோடிருப்பவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் மருந்தாக அமைய வேண்டும். நம்மை சுற்றியுள்ள ஜனங்களுக்கு நாம் கர்த்தரை பற்றி சொல்ல வேண்டும். தேவன் நமது 50 சதவிகித செயலில் திருப்தி அடைகிறவரல்ல. அவர் எதிர்ப்பார்ப்பது நூறு சதவிகிதத்தையே!

கிறிஸ்துவில் நாம் நிலைத்திருக்காவிட்டால், கனி நம்மிடம் இருக்காது. அந்த அத்திமரத்தை போல கனியற்ற வாழ்க்கையைதான் நாம் வாழ்வோம். எஜமான் விரும்பும் கனி நம்மில் காணப்படாவிட்டால் எத்தனை பரிதாபம்? அது வெட்டி போடப்படுமே! அப்படி இல்லாதபடி கனியுள்ள ஜீவியத்தை செய்ய தேவன்தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக!

ஆமென் அல்லேலூயா!

நன்றி - அனுதின மன்னா

Wednesday, 16 July 2014

சிலுவையில் ஊற்றெடுக்கும் உன்னத ஆசீர்வாதம்!

1 கொரிந்தியர் 1:17-ம் வசனத்தில், “கிறிஸ்துவின் சிலுவை வீணாய் (அல்லது வல்லமையற்றுப்) போகாதபடிக்கு...”என்றும் 18-ம் வசனத்தில்“சிலுவையைப் பற்றிய உபதேசம்.... நமக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது” என்றும் வாசிக்கிறோம்.

சிலுவையின் உபதேசத்தில் அல்லது சிலுவையில் அப்படியென்ன வல்லமையிருக்கிறது என்று கேட்கிறீர்களா? கேளுங்கள், அது பழைய மனிதனுக்கும் அவன் கிரியைகளுக்கும் சாவு மணி அடிக்கிறது! அவ்வல்லமை பாவத்திலிருந்து தொடர்ச்சியான விடுதலை அளிக்கிறது! மாம்சத்தின் கிரியைகளை ஒழிக்கிறது!

ஆம், நாம் பாவம் என்று அறிந்துகொண்ட யாவற்றிலிருந்தும் விடுதலை அளிக்கிறது மட்டுமல்ல! நாட்கள் செல்லச் செல்ல, இனி நாம் பாவம் என அறிந்து கொள்ளப்போகும் எல்லாப் பாவத்திலிருந்தும் விடுதலை! விடுதலை!!

முழு விசுவாசத்துடன் ஆக்ரோஷமாய் சிலுவையில் அறைகிறோமே, அதுவே இச்சிலுவையின் வல்லமையான கிரியைகள். ஆம், அந்த ஆணிகள் சிலுவையிலறைப்பட்டவனை, அவன் விரும்பும் இடத்திற்கு போக முடியாமல் வலிமையாய் சிலுவையின் மேல் இருத்தி வைக்கிறது.... பின்பு .... கொஞ்சம் கொஞ்சமாய் சீக்கிரத்தில் ‘அவன்’ செத்துப் போகிறான். இவ்வாறு மாம்சத்தின்படியான என்னை சாகடிக்கிறதே அதுதான் இச்சிலுவையின் வல்லமையான கிரியைகள்!

 “தன் சிலுவையைச் சுமந்து கொண்டு எனக்குப் பின் செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்” (லூக் 14:27) என இயேசு கூறினார். “அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு பிலாத்து அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக் கொண்டு போனார்கள்.

அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்து கொண்டு.... கொல்கொதா என்ற இடத்திற்குப் புறப்பட்டுப் போனார்” (யோ 19:16-17).... தன் சிலுவையை சுமக்க வேண்டும் என்பதற்கு இதை விட வேறு என்ன விளக்கம் வேண்டும்? அதாவது, நாம் சிலுவையிலறையப்படுவதற்கு எதிர்பில்லாமல் வாய்ப்பு அளிக்கிறோமே, அதுதான் அதன் சரியான பொருள்! சிலுவையில் அறையப்படுவதன் அவசியத்தை உணர்ந்து கொண்டவர்கள் எவர்களோ, அவர்களே அதை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவார்கள்!

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக..!

ஆமென்...அல்லேலூயா....!
நன்றி- விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

Tuesday, 15 July 2014

கீழ்ப்படிந்தால் அற்புதம் நடக்கும்

“அவர் (இயேசு) உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ அதின்படி செய்யுங்கள்.” யோவான் 2:5

இயேசு தம்முடைய சீஷர்களை தெரிந்தெடுத்து சிலநாட்களே ஆகியிருந்தன. இப்போது இவர்கள் எல்லாரும் கலிலேயாவில் உள்ள  கானா ஊரில் நடைபெறும் கலியாண விருந்துக்கு செல்கின்றனர். இயேசுவின் தாயாகிய மரியாளும் அங்கிருக்கிறார். விருந்தில் திராட்ச ரசத்திற்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. தன் மகனிடம் சொன்னால் ஏதாவது செய்வார் என நினைத்து மரியாள் அவரிடம்: ‘திராட்சை ரசம் தீர்ந்துவிட்டது’ என்று சொல்கிறார். ஆனால் இயேசு, “ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை” என்று பதிலளிக்கிறார்.— யோவான் 1:35-51; 2:1-4,  ஒரு கருத்துக்கு அல்லது ஆலோசனைக்கு மறுப்பு தெரிவிக்க அந்த நாட்களில் பொதுவாக கேட்கப்பட்ட கேள்வியாகும்.  மரியாளுக்கு இயேசு, பிதாவின் சித்தத்தைச் செய்வதில்  காட்டிய உறுதியை வெளிப்படுத்தியது! நாமும் கடவுளுக்குச் செய்ய வேண்டிய கடமையை முழுமையாய் செய்ய இயேசுவைப்போல உறுதி கொண்டிருப்போமாக. —பிரசங்கி 12:13

தன் மகன் சொன்ன வார்த்தையின் அர்த்தத்தை புரிந்துகொண்டு, மரியாள் உடனடியாக விலகிச் சென்று,வேலைக்காரர்களிடம் “அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ அதின்படி செய்யுங்கள்.” என்றார். இயேசு, வேலைக்காரர்களை நோக்கி கற்சாடிகளில் தண்ணீர் நிரப்ப சொல்கிறார். பாலஸ்தீன நாட்டிலே தண்ணீர் குறைவான அளவே கிடைக்கும். அந்த தண்ணீரும் சற்று உவர்ப்பாகவே இருக்கும். ஆகவே இஸ்ரயேல் மக்கள் சாப்பிடும் பொழுதும், படிக்கை நாட்களிலும் தண்ணீருக்கு பதில் திராட்சை ரசம் அருந்துவர். இஸ்ரயேல் மக்கள் வீட்டிற்குள் வரும் பொழுது கால்களை கழுவி உள்ளே நுழையும் பழக்கம் கொண்டவர்கள். அந்த கல்யாண வீட்டில் கால்களை கழுவ வைக்கபட்டிருந்த தண்ணீரை எடுத்து திராட்சை ரசத்தை சேமிக்கும் கற்சாடிகளில் ஊற்றச் சொன்னார். வேலைக்காரர்கள் இயேசுவின் சொல்லுக்கு மறுப்பு பேசாமல் கீழ்ப்படிந்து கால்களைக் கழுவ வைத்திருந்த தண்ணீரை எடுத்து நிரப்பினார்கள். பின்னர் அவர்களை நோக்கி, அதை மொண்டு பந்தியில் இருப்பவர்களிடத்தில் கொடுக்க சொன்னார். தண்ணீரை நாம் தானே ஊற்றினோம். இந்த தண்ணீரை கொண்டுபொய் பந்தியில் திராட்சை ரசத்துக்காய் காத்திருப்பவர்களிடம் கொடுத்தால், அவர்கள் நம்மை என்ன செய்வார்கள் என்றெல்லாம் சிந்திக்காமல் இயேசுவின் சொல்லுக்கு கீழ்ப்படிந்து பந்திக்கு எடுத்து சென்றார்கள். அந்தத் தண்ணீர் மிகவும் சுவையான திராட்ச ரசமாக மாறுகிறது.

இயேசுவின் இந்த முதல் அற்புதம் நிறைவேற மரியாளுடைய கீழ்படிதலும், வேலைக்காரர்களின் கீழ்படிதலும் முக்கிய காரணமாக இருந்க்கின்றதை நம்மால் அறியமுடிகின்றது. அநேக நேரங்களில் நாம் கர்த்தருக்கு கீழ்படியாமல் சூழ்நிலைகளை பார்த்து விசுவாசத்தை இழப்பதாலேயே நமது வாழ்வில் இயேசுவால் அற்புதம் செய்ய முடிவதில்லை. அன்றைக்கு அந்த வேலைக்காரர்கள் இயேசுவின் வார்த்தைக்கு கீல்படியாது இருந்திருந்தால் அவ்வளவு பெரிய அற்ப்புதம் நடந்திருக்குமா? இதை வாசிக்கின்ற நீங்கள் சூழ்நிலைகளைப் பார்க்காமல்  இயேசுவுக்கு கீழ்ப்படிந்தால் உங்களுடைய வாழ்விலும் அற்புதங்கள் நடக்கும்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக......!
ஆமென்..அல்லேலூயா...!

நன்றி -விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

Sunday, 13 July 2014

தேவனிடமிருந்து பதில் பெறும் ஜெபமே நமது தேவை!

நாம் சத்தத்தை உயர்த்தி ஜெபிப்பதைச் சுற்றியுள்ள ஜனங்கள் கேட்டாலும், நாமோ ஜனங்களை நம் மனதிலிருந்து அனுப்பிவிட்டு தேவனுக்கு முன்பாக மாத்திரமே ஜெபிப்பவர்களாய் நின்றுவிட முடியும்.


இன்று நமக்குத் தேவையாய் இருப்பதெல்லாம் அதிகமான ஜெபங்களல்ல. பதில் கிடைக்கும் ஜெபமே இன்றைய நம்முடைய தேவையாகும்! இந்த இரண்டு ஜெபத்திற்குமிடையில் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன.


இன்று அநேக ஜெபங்கள் தேவனுடைய இராஜ்யத்தில் வலிமையற்றதாகவே இருக்கிறது. ஓர் சுத்த இருதயத்திலிருந்து அந்தரங்கமாய் அவருடைய சமூகத்தில் ஏறெடுக்கப்படும் ஜெபங்களை மாத்திரமே தேவன் ஏற்றுக் கொண்டு, அந்த ஜெபங்களுக்குப் பதிலும் தருகிறார்!!

நாம் எவ்வாறு ஜெபிக்கக்கூடாது என்பதைத் தொடர்ந்து இயேசு வலியுறுத்தியபோது, “அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்” என எச்சரித்தார். அஞ்ஞானிகள் தங்கள் பிரார்த்தனையில் அநேக வார்த்தைகளைச் சொல்லி ஜெபித்துவிட்டால் அதை கடவுள் கேட்டு விடுவார் என எண்ணுகிறார்கள். இதுவும் ஒரு கொடிய வஞ்சகமாகும். இவர்களைப்போலவே இன்றைய கிறிஸ்தவர்களின் நிலையும் பரிதாபமாகவே இருக்கிறது. தொடர்ந்து மூன்று மணிநேரங்கள் ஜெபித்தால் தேவன் உடனடியாகக் கேட்பார் என்றும், ஒருநிமிடம் மாத்திரமே ஜெபிக்கும் ஜெபத்தை அவர் கேட்க மாட்டார் என்றும் இவர்கள் எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால், இயேசு இவ்விஷயத்தைக் குறித்து என்ன எண்ணுகிறார் என்பதைக் கவனியுங்கள்.

நீங்கள் நீண்ட நேரம் ஜெபிக்கிறீர்களா என்பதைவிட உங்கள் ஜெபத்தில் விசுவாசம் இருந்தால், “எல்லாம் உங்களால் கூடும்” என்றே கூறுகிறார். மேலும், விடாமுயற்சியான உறுதியும் ஜெபத்திற்குத் தேவையானதாகும்.

ஆம், 1) சுத்த இருதயம் 2) விசுவாசம் 3) விடாமுயற்சி ஆகிய இவைகளே தேவனுடைய மகிமைக்காக ஜெபிக்கும் ஜெபத்திற்குத் தேவையானதாகும். மாறாக, அநேக வசனிப்புகளான வார்த்தைகள் அல்ல!

அதேசமயம் நாம் ஒரு காரியத்தினிமித்தம் இரண்டு அல்லது மூன்று தடவை தேவனிடம் ஜெபிக்கக்கூடாது என்பதும் பொருளாகாது! ஏனென்றால், கெத்செமனே தோட்டத்தில் ஒரே காரியத்திற்காக இயேசு மூன்று முறை ஜெபித்தார் என மத்தேயு 26-ம் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம். 39-ம் வசனத்தில் முதல் தடவை ஜெபித்தார். 42-ம் வசனத்தில் இரண்டாம் தடவை ஜெபித்தார். 44-ம் வசனத்தில் மூன்றாம் தடவை ஜெபித்தார் என்றும், “அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம் பண்ணினார்” என்றும் வாசிக்கிறோம்.

எனவே ஒரு விஷயத்திற்காக நாம் தேவனிடம் பதில் பெறும்வரை மறுபடியும் மறுபடியும் ஜெபிப்பதில் தவறில்லை. ஆனால், நாமோ வீணான அல்லது அர்த்த மற்ற வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப உபயோகிப்பதையே வேண்டாமென இயேசு கூறினார்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக
நன்றி- விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

Friday, 11 July 2014

சிலுவையின் பாதையல்லாமல், ஜீவன் பெற வேறு வழியில்லை!

இயேசு காண்பிக்கும் புதிய சகாப்தம் “நாளுக்கு நாள் புதிதாகும், இயேசுவின் ஜீவியமே ஆகும்.” இன்றைய கிறிஸ்தவ உலகில் உபதேசங்களுக்குப் பஞ்சம் இல்லை! இவர்களுக்கு அன்னியமாய் போய் விட்டதெல்லாம், இயேசுவின் ஜீவன் அல்லது அவரது ஜீவியம்! அந்த ஜீவனுக்குப் போகிறவழி இடுக்கமானது என விளம்பிய ஜீவநாதரை இவர்கள் புறக்கணித்து விட்டார்கள்.

இவ்வாறு புறக்கணித்தவர்கள், இயேசுவோடு ஒட்டிக் கொண்ட பேதுருவிடம் சென்று “பேதுருவே, உன் குருவானவர் கூறும் இடுக்கமான வழி உனக்கு விளங்கிவிட்டதா? இவர் கூறும், ‘என் மாம்சத்தையும் என் இரத்தத்தையும் புசியுங்கள்’ எனக் கூறிய தாற்பரியம் உனக்குப் புரிந்து விட்டதா?” என கேட்டிருந்தால், அதற்கு பேதுரு கூறிய பதில் “எனக்கு தெரியாது, எனக்குப் புரியவில்லை!” என்பதாகவே இருந்திருக்கும். “பின்பு ஏன் நீ அவரை பின்பற்றுகிறாய்?” என அவர்கள் கேட்டிருந்தால், அதற்கு பேதுரு “இயேசு கூறும் மாம்சம், இரத்தம் ஆகிய உபதேசம் எனக்குப் புரியவில்லை! ஆனால் இயேசுவை அறிவேன்! அவரது ஜீவியமும் அறிவேன்! அவரது ஜீவியத்தின் உத்தமத்தை அறிவேன்!” என்றே ஆணித்தரமாக பதில் கூறியிருப்பான். இன்று, நம் யாவரையும் அண்டிவரும் கேள்வி இதுதான்.... “உங்களுக்கு உபதேசம் வேண்டுமா அல்லது ஜீவியம் வேண்டுமா?” உபதேசத்தோடு அல்ல உத்தம ஜீவியத்தோடு கரம் கோர்த்திடவே தீவிரம் கொள்ளுங்கள்!

ஜீவனுக்குள் நடத்தும் இடுக்கமான வழி அல்லது பாதை, சிலுவையின் பாதையேஆகும்! நம் போன்ற சரீரத்தில் வந்த இயேசு, இந்த சிலுவையின் வழியாகவே “தன் சொந்த ஜீவனுக்கு மரித்து பிதாவின் நித்திய ஜீவியத்தை” நிறைவாய் பெற்று கொண்டார்.

இயேசுவிடம் தென்பட்டது, வெறும் உபதேசம் அல்ல! அவரிடமிருந்த தெய்வீக தாழ்மை, அவரிடமிருந்த கற்பு நிறைந்த தூய வாழ்க்கை, பதட்டமில்லாத விசுவாச வாழ்க்கை, சாந்தம்,பொறுமை.... போன்ற தெய்வீகத்தின் முழுமையான வெளிச்சமும் அவரிடம் காணப் பட்டது. இன்றைய கிறிஸ்தவர்களில் பெரும்பலோர்,வரங்களில் பிரியப்படுகிறார்களே அல்லாமல், கனி கொடுக்கும் ஜீவியத்திற்குரிய தங்கள் நாட்டத்தை இழந்தே காணப்படுகிறார்கள். “அன்னிய பாஷையை” பேசுவதில் பிரியப்படுகிற இவர்கள், தங்கள் சொந்த தாய் பாஷையில் தாறுமாறு கொண்டு வாழ்கிறார்கள்! அன்னிய பாஷையை பேசும் இவர்களிடம், தாய் பாஷையில் கிருபை பொருந்திய வார்த்தைகளோ அல்லது நாவடக்கமோ காணப்படுவது இல்லை.

இன்று நமக்குத் தேவை,நல்ல பிரசங்கியோ அல்லது நல்ல சபை கட்டிடமோ அல்ல! மாறாக “அவரோடு மரித்து, அவரோடு பிழைத்திருக்கும்” ஜீவிய வெளிச்சத்தை பெற்ற மக்களும், அவர்கள் கூடி வரும் சபையே நமக்குத் தேவை!

இவ்வாறு இயேசுவின் வெளிப்பாட்டையும், அவரது உறவையும் பெற்றவர்களே, இயேசு விரும்பும் “கற்பாறையாய்” இருக்கிறார்கள். இவர்களைக் கொண்டே இயேசு தன் சபையை கட்டுகிறார் (மத்.16:18). அவரோடு மரித்து அவருக்குள் பிழைத்திருக்கும் (2தீமோ .2:11)இயேசுவின் ஜீவியம்,இடுக்கமான சிலுவையின் பாதையில் நடப்போருக்கே கிட்டும்! இந்த சிலுவையின் பாடுகளே இல்லாமல், உலக ராஜ்ஜியத்தை சுதந்தரிக்கலாம் எனக் கூறிய சாத்தானையும், சிலுவையின் பாதையை தவிர்க்கும்படி கூறிய அவரது அன்பான சீஷனையும்.... இயேசு ஒரே விதமாய் கண்டு “அப்பாலே போ சாத்தானே” எனக் கூறினார். இன்றும், சிலுவையின் பாதையை புறக்கணிக்கிறவர்களுக்கு, ஜீவனை அல்லது இயேசுவின் மகிமையான ஜீவியத்தை தேவன் ஒருபோதும் அவர்களுக்குத் தருவதில்லை.

அவரோடு சேர்ந்து, தன் சொந்த ஜீவனுக்கு மரிப்பதும், கிறிஸ்துவின் ஜீவனுக்குள் பிழைத்திருப்பதுமாகிய இந்த சுவிசேஷத்தைக் கேட்கிற ஜனங்களில்.... யார் இதை விசுவாசிப்பார்கள்? என்றே ஏசாயா தீர்க்கதரிசி 53:1 வசனத்தில் கூறினார்.இன்றும், இந்த மகிமையான ஜீவனுக்குள் பிரவேசிக்கும், சுவிசேஷத்தைக் கேட்கும் நீங்கள், இதை ஏற்று விசுவாசித்திட நெஞ்சத்தில் தைரியம் உண்டோ? இந்த விசுவாசமே, இயேசு கொண்டு வந்த ஜீவனுக்குள்.... பரிபூரண ஜீவனுக்குள் உங்களை நடத்தும்!

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக!

ஆமென் ..அல்லேலூயா.......!
நன்றி- விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

Wednesday, 9 July 2014

பிந்தி விட்டதே!

இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள். -  (2கொரிந்தியர் 6:2).

ஒருமுறை சில வாலிபர்களுக்கு டி.எல். மூடி பிரசங்கியார் வேதபாட வகுப்பு நடத்தினார். அதில் ஒருவனைத்தவிர மற்றவர்களனைவரும் இயேசுவை ஏற்று கொண்டனர். அந்த வாலிபனிடம் ஒருநாள் மனந்திரும்புதலை குறித்து மிக உருக்கமாக பேசினார். அவனோ, 'நான் வெளியூருக்கு சென்று பணம் சம்பாதித்து திரும்பி வந்தபின் இயேசுவை ஏற்றுக்கொள்வேன்' என்றான். மூடி துக்கப்பட்டார். சில வாரங்களுக்குப் பின் அவன் நோய்வாய்ப்பட்டவனாக மருத்துவமனையிலிருந்தான். மூடி அவனை சந்தித்து 'இனியும் தாமதியாதே, உன் இரட்சிப்பைக் குறித்து முடிவு செய்' என வேண்டினார். அவன் மறுத்து, 'நான் சாகமாட்டேன், முன்பு சொன்னபடி பணம் சேர்த்தபின் ஆண்டவரை ஏற்றுக் கொள்கிறேன்' என்றான். பின்பு ஒரு நாள் குதூகலத்துடன் அவர் வீட்டிற்கு வந்து, 'நான் பயணமாக செல்லும் முன்பு உங்களிடம் விடைபெற்று கொள்ள விரும்புகிறேன்' என்றான். மீண்டும் மூடி அவன் தோளின் மேல் தம் கையை வைத்து பரிவுடன் ஆத்ம இரட்சிப்பைக் குறித்து பேசினார். அவன் மீண்டும் மறுத்து விட்டான்.

நடு ராத்திரி அவர் வீட்டுக்கதவை யாரோ பலமாக தட்டினார்கள். வெளியே ஒரு பெண்மணி,'என் கணவர் சாகுந்தருவாயிலிருக்கிறார்,  உடனே வாருங்கள்' என்று அழைத்தாள்; அந்த வாலிபனின்; மனைவி என அறிந்து அவர், 'இனி நான் அவனுடன் பேசி பயனில்லை. தனக்கருளப்பட்ட தருணங்களையெல்லாம் தள்ளிவிட்டானே' என்றார்;. எனினும் அவளுடைய கெஞ்சலுக்காக அவனைப் பார்க்க சென்றார். அவனோ மதியிழந்தவனாக மேலே பார்த்து கொண்டு 'பிந்தி விட்டதே, பிந்தி விட்டதே என்று புலம்பி கொண்டேயிருந்தான். அவனுடன் அவர் ஒன்றும் பேச முடியவில்லை; 'பிந்தி விட்டதே' என்று அவன் கதறிக்கொண்டே உயிரை இழந்தான். அந்தோ பரிதாபம்! தேவனின் தயவை அவன் புறக்கணித்து விட்டானே!

'கிறிஸ்துவை ஏற்று கொள்ள எனக்கு ஆசைதான். ஆனாலும் உலக இன்பங்களை முதலில் அனுபவிக்க ஆசைப்படுகிறேன்' என்று ஒருவன் தன் கிறிஸ்தவ நண்பனிடம் சொன்னான். 'உன் மனம்போல் செய்' என்று அவன் பதிலுரைத்தபோது, 'அப்படியானால் நான் எப்போது இரட்சிக்கப்பட வேண்டுமென்று' மீண்டும் கேட்டான். அதற்கு நண்பன், 'நீ சாவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பு' என்றான். 'ஐயோ, நான் சாகும் நேரத்தை அறியேனே!' என்று அவன் அங்கலாய்த்தபோது, 'அப்படியானால் இப்போதே நீ கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்று நண்பன் வற்புறுத்தினான்.

நண்பனே, நாளைய தினத்தை குறித்து பெருமை பாராட்டாதே;   ஒரு நாள் பிறப்பதை அறியாயே. - (நீதிமொழிகள் 27:1) இறுதியாக கிடைக்கும் வாய்ப்பை ஒருவேளை நீங்கள் இழந்து விடலாம். அப்படி நேரிடுமானால் உங்கள் நிலைமை என்ன? நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று ஆண்டவரின் கிருபையை அலட்சியம் பண்ணாதபடி இன்றே அவரை ஏற்றுக்கொள்வீர்களாக. தேவன் திரும்ப வரும் வேளையை எவரும் அறியார். ஆகவே எப்போதும் ஆயத்தமாயிருப்போம். இன்றிரவு அவர் வந்தால் மிகுந்த மகிழ்ச்சியுடன் நீங்கள் அவரை வரவேற்பீர்களா? அல்லது, மலைகளையும், பாறைகளையும் பார்த்து என்மேல் விழுந்து அவர் முகத்துக்கு என்னை மறைத்து விடுங்கள் என்று கூப்பிடுவீர்களா? சடுதியாக திருடனைப்போல அவர் வரப்போவதால் இதுவே உங்கள் கடைசி தருணமாயிருக்கலாம், பயன்படுத்தி கொள்ளுங்கள். இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்.

ஆமென் அல்லேலூயா!

நன்றி - அனுதின மன்னா

Monday, 7 July 2014

கசப்பான விரோதம்

உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமை பாராட்டாதிருங்கள். - (யாக்கோபு 3:14).

இஸ்ரவேலின் முதல் இராஜாவாகிய சவுலை கர்த்தர் எல்லாவிதத்திலும் ஆசீர்வதித்திருந்தார். அவருக்கு ஆலோசனை சொல்ல சாமுவேல் தீர்க்கதரிசி, தங்களுக்கு ஒரு இராஜா வேண்டும் என்று கேட்டுப் பெற்றுக் கொண்ட மக்கள், அருமையான குடும்பம், பிள்ளைகள், ஆட்சி, சமாதானமான நிலைமை எல்லாம் இருந்தும், சவுல் மனதில் கசப்புள்ளவராகவே மரித்தார். அவருடைய சரித்திரத்தை பார்த்தால், எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதவரைப் போல மரித்தார். அவருடைய வாழ்வு நமக்கு படிப்பினையானது.

தாவீது கோலியாத்தை தன் கவணில் உள்ள கல்லினால் கொன்று போட்டபோது, 'அந்த ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில்: சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறைமுறையாகப் பாடினார்கள். அந்த வார்த்தை சவுலுக்கு விசனமாயிருந்ததுளூ அவன் மிகுந்த எரிச்சலடைந்து, தாவீதுக்குப் பதினாயிரம், எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள்ளூ இன்னும் ராஜாங்க மாத்திரம் அவனுக்குக் குறைவாயிருக்கிறது என்று சொல்லி, அந்நாள்முதற்கொண்டு சவுல் தாவீதைக் காய்மகாரமாய்ப் பார்த்தான். மறுநாளிலே தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலின்மேல் இறங்கிற்று' (1 சாமுவேல் 18:7-10) என்று வேதம் கூறுகிறது. என்று கசப்பும் பொறாமையும் சவுலின் உள்ளத்தில் வந்ததோ, அப்போதே ஒரு அசுத்த ஆவியும் அவர் மேல் வந்திறங்கிற்று என்று பார்க்கிறோம்.

பிரியமானவர்களே, நாமும் நம் குடும்பத்தாரிடமோ, கூட வேலை செய்கிறவர்கள் மேலோ, நம்முடைய சபையில் உள்ள யார் மீதோ இருந்த கோபம் தீர்க்கப்படாததினால் கசப்புக் கொண்டு உள்ளோமா? உடனே அதை சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அசுத்த ஆவி நம்மில் குடி கொண்டு, நம்முடைய சமாதானத்தை கெடுக்கும் பயங்கரமான நிலைக்கு கொண்டு நம்மை கொண்டு சென்று விடும்.

அந்த பெண்கள் அப்படி பாடினதில் இருந்து சவுலின் நல்ல மனநிலை மாற ஆரம்பித்தது. தாவீது எதை செய்தாலும், எதை சொன்னாலும் அதை சந்தேகக் கண்ணோடு பார்க்க ஆரம்பித்தார். தாவீது இத்தனைக்கும் சவுலின் சேனைகளோடு சென்று பெலிஸ்தியரோடு போராடி வெற்றியைக் கொண்டு வந்தாலும், எல்லாவற்றையும் சந்தேகக்கண்ணோடு பார்க்க ஆரம்பித்தார். தன்னை தள்ளிவிட்டு இந்த தாவீது ஆட்சியை பிடித்துக் கொள்வானோ என்ற பயம் சவுலை ஆட்டிப்படைத்தது.


தன் சொந்த மகளையே தாவீதுக்கு கட்டிக் கொடுத்திருந்தாலும், அவரை கொல்லவே திட்டமிட்டுக் கொண்டிருந்தார் சவுல். எங்குச் சென்றாலும் அவரை துரத்தி, துரத்தி பிடிக்க ஆட்களை அனுப்பினார். சில வேளைகளில் எதிரிகளிடம் கூட சென்று அடைக்கலம் தேடினார் தாவீது.

சவுலின் கடைசி காலம் வரைக்கும் அந்த கசப்பு மாறவே இல்லை. தாவீது நன்மைகள் செய்தாலும், அவரை எதிரியாகவே அவர் பார்த்து, தன் வாழ்நாளை முடித்தார். கசப்பு இருந்தபடியால் இரவும் பகலும் தூங்காமல் எப்படி தாவீதை பிடிக்கலாம் என்று திட்டம் போட்டு, போட்டு, தன் வாழ்நாளை வீணாளாக கழித்தார். எத்தனை பரிதாபம்! அவரால் தாவீதை அசைக்க முடிந்ததா? இல்லவே இல்லை. ஏனெனில் கர்த்தர் தாவீதோடே இருந்தார்.

பிரியமானவர்களே, நமக்கும் கூட யார்மீதாவது கசப்பு, வைராக்கியம் இருந்தால் அதை உடனடியாக கர்த்தரிடம் கொண்டு செல்வோம். உடனே அதை களைந்து போடுவோம். அதை வளருவதற்கு நாம் இடம் கொடுத்தால், அது நம் இருதயத்தை விஷமாக்கி, எதையெடுத்தாலும் சந்தேகக்கண்ணோடு நோக்கி, நம்முடைய சமாதானத்தையே குலைத்துப் போடும். பின் யார் என்ன சொன்னாலும் கேட்கக்கூடாத கடின மனதாகி விடும்.

'உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமை பாராட்டாதிருங்கள்' கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு அந்த கசப்பும் வைராக்கியமும் வேண்டாம். எந்த விரோதமும் வேண்டாம். எது நடந்தாலும் கர்த்தரிடம் சொல்லி விட்டு, நாம் அமைதலாய் செல்வோம். கர்த்தர் அதை பொறுப்பெடுத்துக் கொள்வார்.

ஆமென் அல்லேலூயா!

நன்றி - அனுதின மன்னா

Saturday, 5 July 2014

இன்றைய வேத வசனம்

அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 30:17

Friday, 4 July 2014

சத்திய வேதம் பக்தரின் கீதம்

தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. - (எபிரேயர் 4:12).

வேதாகமம் தன்னை பல பொருட்களோடு ஒப்புமைப்படுத்தியுளளது.  அவைகள் நம்முடைய அன்றாட வாழ்க்கை மற்றும் உலக நடப்புகளில் காணப்படுபவைகள். இப்படி வேதாகமம் கூறும் ஒப்பீடுகளை சிந்தித்து நம் கையிலுள்ள வேதத்தின் மகத்துவங்களை இன்னும் நன்றாக புரிந்து கொள்வோம்.

தீபம்: (சங்கீதம் 119: 105)

தேவனுடைய வார்த்தையான வேத புததகம் நாம் போகும் வாழ்க்கை என்னும் பாதைக்கு வழிகாட்டும் தீபத்திற்கு ஒப்பிடப்பட்டுள்ளது. ஆம், வேதம் நம் அன்றாட வாழ்விற்கு வழி காட்டுகிறது. தீபம் என்பது, பெரிய விளக்கு அல்ல, ஒரு சிறிய விளக்கே ஆகும். இதன் அர்த்தம் என்ன? இருளான ஒரு பாதையில் நடக்க ஒரு சில அடிகள் மட்டும் வெளிச்சம் தெரிந்தாலே போதும், அதை கொண்டு நாம் முன்னேறி,  நமது இலக்கை அடைந்து விடலாம். அது போல வேதமும் படிப்படியாக நம்மை நடத்தும் என்பதே அதன் அர்த்தம்.


பால்:  (1 பேதுரு 2:3)

அப்போஸ்தலனாகிய பேதுரு இங்கு ஞானப்பால் என்று குறிப்பிடுவது வேதாகமத்தையே ஆகும். பாலின் முக்கிய பயன் என்ன? அது வளர்ச்சிக்கு உதவும். பாலில் ஆரோக்கியமாக  வளரத் தேவையான சமச்சீரான சத்துக்கள் அனைத்தும் உள்ளடங்கியுள்ளன. எலும்புகளும், தசைகளும், சீராய் வளர இது மிகவும் முக்கியம். அதுப்போல ஆவிக்குரிய முதிர்ச்சியை நோக்கி வளர வேதாகமம் ஒன்றே வழி. பால் என்று சொல்வதினால் நாம் எப்போதும் ஒரு ஆவிக்குரிய குழந்தையை போலவே இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. ஆனால் குழந்தையை போல ஒரு தாகம்  எப்போதும் நமக்கு வசனத்தின் மீது இருக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.

வாள் அல்லது பட்டயம்: (எபேசியர் 6:17)


வாள் என்பது போருக்கு பயன்படும் ஒரு கருவி. வாளின்றி ஒரு போர்வீரன் போருக்கு செல்வது முட்டாள்தனம். நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கை சமாதானம் நிறைந்ததாக இருந்தாலும் அதற்கு ஒரு மற்றொரு பக்கமும் உண்டு. அது யுத்தம். என்ன யுத்தம் அது? தேவனுக்கு விரோதியான சாத்தான் அவரை விட்டு நம்மை பிரிப்பதிலே தீவிர முயற்சி எடுத்துக் கொண்டே இருப்பான். ஆகவே அவனிடம் போராடும் ஒரு யுத்தம், வாழ்க்கை முழுக்க உண்டு. பிசாசானவன் நம்மை வீழ்த்தவும், சோதிக்கவும் பயன்படுத்தும் தந்திரங்கள் அனைத்தும் வேதத்திலே குறிப்பிடப்பட்டுள்தால், நாம் வசனத்தை தியானிக்க, தியானிக்க இன்னும் விழிப்புள்ளவர்களாக மாறுவோம்.  மேலும் வேதத்திலுள்ள வாக்குதத்தங்களையும், வசனங்களையும் வைத்து அவனை ஜெயிக்க முடியும். குறிப்பாக வசனங்களை மனப்பாடம் செய்து நம் இருதயத்தில் வைத்திருப்போமானால் அது பிசாசிற்கு விரோதமான ஒரு ஆயுத கிடங்காக மாறும்.


விதை: (லூக்கா 8:11)

விதையின் மகத்துவம் என்ன? அதில் ஜீவன் உண்டு. ஒரு விதை பார்ப்பதற்கு பிரமிப்பூட்டுவதாய் இராது. ஆனால் இரகசியம் உள்ளே உள்ளது. வேதாகமத்தையும் மேற்பக்கமாக பார்க்கும்போது அது பரவசத்தை தூண்டாத ஒரு பழைய கறுப்பு புத்தகம் போல பலருக்கு தோன்றும். ஆனால் நாம் அதை புரிந்து தியானிக்கும்போது விதைக்குள்ளிருந்து பெரிய மரம் வளருவதை போல வேதமும் நமக்கும், நம்மை சுற்றியுள்ள சமுதாயத்திற்கும் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வரும். வசனமாகிய விதை நமக்குள் விதைக்கப்பட்டு வளர்ந்து கனி கொடுக்கும்போது நமது வாழ்க்கை முறைகள் மாறும். புதிய சுபாவங்கள் நம்மை மூடும்.

வேதத்தின் இந்த ஒப்பீடுகள் என்றும் உஙகள் இருதயத்திலே இருக்கட்டும்.  வேத வசனங்கள் நம்மை மகிமையான நித்திய இராஜ்யம் வரை நம்மை காக்கும்.

ஆமென் அல்லேலூயா!

நன்றி- அனுதின மன்னா

Wednesday, 2 July 2014

பாவியை மன்னித்தார்

இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார். யோவான் 8:11

ஒரு நாள் இயேசு கிறிஸ்து தேவாலயத்திலே உபதேசம் பண்ணிக் கொண்டிருக்கையில், விபசாரத்திலே கையும் மெய்யுமாய் பிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை அவரிடம் கொண்டு வந்தார்கள். வேதபாரகரும், பரிசேயரும். மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி அவளை கல்லெறிந்து கொல்ல வேண்டும், நீர் என்ன சொல்லுகிறீர் போதகரே என்று கேட்டார்கள். குற்றப்படுத்துவதற்கு இரண்டு அல்லது 3 சாட்சிகள் தேவை. ஆனால், இங்கே ஒரு கூட்டம் சாட்சி சொல்ல இருக்கிறார்கள். குற்றம் சாட்டுகிறவர்கள் கல்லெறிய வேண்டியது தானே, ஏன் இயேசுவிடம்கொண்டு வருகிறார்கள். 6ம் வசனம் சொல்லுகிறது: இதன் மூலமாக இயேசுவைக் குற்றப்படுத்த வேண்டும் என்று தான் அவர்கள் அப்படிச் செய்தார்கள். இயேசு அவளை மன்னிப்பார் என்று அவர்களுக்கு தெரியும். ஆகவே மோசேயின் நியாயபிரமாணத்தை மீறி விட்டார் என்று அவர்மேல் குற்றம் சாட்டும்படியாகத் தான் அவரிடம் அவர்கள் கொண்டு வந்தார்கள்.

ஆனால் இயேசு மோசேயின் நியாய பிரமாணத்தை மீறவில்லை. கல் எறியுங்கள் என்று சொன்னார், ஆனால் பாவம் செய்யாதவன் முதலாவது கல்லெறி என்றார். ஏனென்றால் பாவத்தின் சம்பளம் மரணம். நீ பாவம் செய்தவன் என்று உன்மனச்சாட்சி உன்னைக் குற்றப்படுத்துமானால் நீயும் மரணத்திற்கு பாத்திரவான் தான். உன்னையும் கொல்ல வேண்டும் என்பதை உணர்த்தவே இயேசு அப்படிச்சொன்னார். கல்லெறிய வந்தவர்கள் ஒவ்வொருவராக கலைந்து செல்ல ஆரம்பித்தார்கள். அந்த கூட்டத்திலேயே அந்த பெண்ணை தண்டிக்க, அந்த முதல் கல்லை எறிய தகுதியானவர் இயேசு தான். ஆனால் அவர் அவளை மன்னித்தார். கிருபையினாலும்,சத்தியத்தினாலும் நிறைந்தவர் மன்னித்தார். அவளோடு பேசினார்: ஒருவரும் உன் மேல் கல் எறியவில்லையா? என்றார். நானும் உன்னை மன்னிக்கிறேன் என்றார். மன்னித்து, அவளது பாவ வாழ்க்கையிலிருந்தும், மரணத்திலிருந்தும் அவளை மீட்டெடுத்தார்.

கிருபை நிறைந்த இயேசு அவளை மன்னித்தார். சத்தியம் நிறைந்த இயேசு சத்தியத்தை சத்தியமாக அவளுக்கு சொல்லி, வாழ்வின் வழியை கற்றுக் கொடுத்தார். 11ம் வசனம் சொல்லுகிறது: போ, இனி பாவம் செய்யாதே என்று இயேசு சொன்னார் (Go now and leave your life of sin). அவளை மன்னித்தது மட்டுமல்ல, பரிசுத்த வாழ்வின் வழியையும் கற்றுக் கொடுத்தார். அந்த விபசார ஸ்திரியின் வாழ்க்கை அன்றோடு மாறியது.அன்று மட்டும் அவள் இயேசு சந்திக்காமல் இருந்திருந்தால், அவள் மரணத்தை சந்தித்திருப்பாள். ஆனால் இயேசு அவள் வாழ்க்கையை மாற்றினார். அவளது பாவ வாழ்க்கை முற்றிலும் மாறினது. பரிசுத்தவாட்டியானாள். இந்த இயேசு உங்கள் பாவங்களையும் மன்னித்து, உங்கள் அக்கிரமங்களை நீக்கி, உங்களை சுத்திகரிப்பதற்கு உண்மையுள்ளவராயிருக்கிறார். இன்று நீங்கள் அவரை கூப்பிட்டால், உங்கள் வாழ்க்கை மாறும்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக!

நன்றி- விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

Tuesday, 1 July 2014

மனதுருகும் கர்த்தர்

நீர் உம்முடைய மிகுந்த மன உருக்கத்தின்படியே, அவர்களை வனாந்தரத்திலே கைவிடவில்லை;அவர்களை வழிநடத்தப் பகலிலே மேகஸ்தம்பமும், அவர்களுக்கு வெளிச்சத்தையும் அவர்கள் நடக்கவேண்டிய வழியையும் காட்ட இரவிலே அக்கினி ஸ்தம்பமும், அவர்களை விட்டு விலகவில்லை. நெகேமியா 9: 19.

ஆறு மாதங்களில் இந்த புதிய மாதத்தில் நம்மை கண்ணின் மணி போல காத்துவந்த இயேசுவுக்கு கோடி ஸ்தோத்திரம். இஸ்ரயேல் மக்களை வனாந்திரத்தில் கைவிடாது பாதுகாத்த கர்த்தர், புதிய மாதமாகிய இந்த ஜூலை மாதத்தில் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்து நடத்துவாராக.

இயேசு உலகில் வாழ்ந்த போது மக்கள் மீது மிகுந்த மனதுருக்கம் அடைந்தார். இதினிமித்தம் குருடர் பார்வையடைந்தனர், ஊமையர் பேசினார், குஷ்டரோகிகள் குணமடைந்தனர், பசியுற்றோர் போஷிக்கப்பட்டனர், ஊனமுடையோர் நடந்தனர். அவரது மிகுந்த இரக்கத்தினாலே நமக்காக அவரை சிலுவை வரை கொண்டு சென்றது.

தேவன் ஒருபோதும் நம்மை விட்டு பிரிவதில்லை. மாறாக நமது பாவங்கள் மீறுதல்கள் நம்மைத் தேவனிடமிருந்து பிரிக்கின்றது. இதனால் நமக்கு வேதனையும் துன்பமும் ஏற்படுகிறது. ஆனாலும் எந்த நிலைமையிலிருந்தும் மனம் திரும்பி வரும் போது நம்மை மன்னித்து தன் சொந்தப்பிள்ளையாக ஏற்றுக்கொள்வார். அவர் மன்னிக்கத் தயையுள்ளவர்.

கர்த்தர் இரக்கமும் மனஉருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர் (சங் 145:8).மற்றவர்களுக்கு தேவ இரக்கத்தை பெற்ற அவரது பிள்ளைகளாகிய நாமும் அவரைப்போல மனஉருக்கத்தை பரிதபிக்கும் மக்கள் மீதும் நாம் காட்ட வேண்டும். பகலிலும் இரவிலும் இஸ்ரயேல் மக்களை பாதுகாத்த கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நிச்சயமாய்  பாதுகத்திடுவார்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக!

நன்றி- விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்