'நீ போய், எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக்குக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்..இந்த நகரத்தின்மேல் நன்மையாக அல்ல, தீமையாகவே வரப்பண்ணுவேன்.. ஆனால் அந்நாளிலே உன்னைத் தப்புவிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நீ பயப்படுகிற மனுஷரின் கையிலே ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை. உன்னை நிச்சயமாக விடுவிப்பேன், நீ பட்டயத்துக்கு இரையாவதில்லை; நீ என்னை நம்பினபடியினால் உன் பிராணன் உனக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப்போல இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்'. - (எரேமியா 39:16:18).
இந்த வார்த்தைகள் எரேமியா தீர்க்கதரிசிக்கு அவர் காவற்சாலையிலிருந்த தண்ணீர் இல்லாத உளையாயிருந்த துரவிலே தூக்கி போடப்பட்டு, பின் எபெத்மெலேக்கின் மூலமாக விடுவிக்கப்பட்டு, காவற்சாலையின் முற்றத்தில் வைக்கப்பட்டிருந்தபோது கர்த்தர் அவர் மூலமாக எபெத்மெலேக்குக்கு வாக்குதத்தம் பண்ணின வார்த்தைகளாகும். எபெத்மெலேக்கு புறஜாதியை சேர்ந்தவன், அவன் ராஜாவின் அரண்மனையில் வேலையில் இருந்தவன், எத்தியோப்பியாவை சேர்ந்தவன். இருப்பினும் அவனுக்கு தேவன் அந்த வாக்குதத்தத்தை கொடுத்தார். ஏன் கொடுத்தார்? ஏன் என்றால், எரேமியாவின் சொந்த ஜனங்களே அவரை தண்ணீர் இல்லாத உளையாயிருந்த துரவிலே போட்டபோது, இந்த எபெத்மெலேக்கு தானே ராஜாவிடம் சென்று, எரேமியாவிற்காக பரிந்து பேசினான். மட்டுமல்ல, தானும் தன்னோடு முப்பதுபேரும் சேர்ந்து, எரேமியாவை அந்த உளையான துரவிலிருந்து மீட்டார்கள். 'அவர்கள் எரேமியாவைத் துரவிலே போட்டதை ராஜாவின் அரமனையில் இருந்த எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக் என்னும் ஒரு பிரதானி கேள்விப்பட்டான்; ராஜாவோ பென்யமீன் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அப்பொழுது எபெத்மெலேக் ராஜாவின் அரமனையிலிருந்து புறப்பட்டுப்போய், ராஜாவை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவனே, இந்தப் புருஷர் எரேமியா தீர்க்கதரிசியைத் துரவிலே போட்டுச் செய்தது எல்லாம் தகாத செய்கையாயிருக்கிறது; அவன் இருக்கிற இடத்திலே பட்டினியினால் சாவானே, இனி நகரத்திலே அப்பமில்லை என்றான்.
அப்பொழுது ராஜா எபெத்மெலேக் என்னும் எத்தியோப்பியனை நோக்கி: நீ இவ்விடத்திலிருந்து முப்பது மனுஷரை உன்னுடனே கூட்டிக்கொண்டுபோய், எரேமியா தீர்க்கதரிசி சாகாததற்குமுன்னே அவனைத் துரவிலிருந்து தூக்கிவிடு என்று கட்டளையிட்டான். அப்பொழுது எபெத்மெலேக் அந்த மனுஷரைத் தன்னுடனே கூட்டிக்கொண்டு, ராஜாவின் அரமனைப் பொக்கிஷசாலையின் கீழிருந்த அறைக்குள் புகுந்து, கிழிந்துபோன பழம்புடவைகளையும் கந்தைத்துணிகளையும் எடுத்துக்கொண்டுபோய், அவைகளைக் கயிறுகளினால் எரேமியாவண்டைக்குத் துரவிலே இறக்கிவிட்டு, எபெத்மெலேக் என்னும் எத்தியோப்பியன் எரேமியாவுடனே: கிழிந்துபோன இந்தப் பழம்புடவைகளையும் கந்தைகளையும் உம்முடைய அக்குள்களில் கயிறுகளுக்குள் அடங்கவைத்துப் போட்டுக்கொள்ளும் என்றான்; எரேமியா அப்படியே செய்தான். அப்பொழுது எரேமியாவைக் கயிறுகளால் தூக்கி, அவனைத் துரவிலிருந்து எடுத்துவிட்டார்கள்; எரேமியா காவற்சாலையின் முற்றத்தில் இருந்தான்'. - (எரேமியா 38:7-13).
எபெத்மெலேக் ஏன் அதை செய்தான்? அவன் புறஜாதியானவனாய் இருந்தாலும், அவன் கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்திருந்தான் என்று வேதம் சொல்லுகிறது. அந்த நம்பிக்கை, அவனை தேவனுடைய தீர்க்கதரிசியாகிய நெகேமியாவை காப்பாற்ற வைத்தது. அந்த நேரத்தில் அரண்மனையில் பெரிய வேலையில் இருந்தவர்களும், பெரிய ஆட்களும் இராஜாவின் இருதயத்தை நெகேமியாவிற்கு எதிராக திருப்பி கொண்டிருந்தாலும், துணிந்து போய், நெகேமியாவிற்காக பரிந்து பேசி, அவரை சாவிலிருந்து தப்புவித்த எபெத்மெலேக்கின் செய்கையை மனிதர்கள் யாரும் பாராட்டவில்லை. ஆனால், தேவன் அதை பார்த்தார்;. அவனை பாராட்டினார், வாக்குதத்தங்களை கொடுத்தார்.
எரேமியாவிடம் ஆண்டவர் சொல்கிறார், 'நீ போய், எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக்குக்குச் சொல்லவேண்டியது' என்று வாக்குதத்தங்களை சொல்லி, விசேஷித்த கிருபைகளை தேவன் அவனுக்கு கொடுக்கிறார்.
தேவன் தமது ஊழியருக்கு நீங்கள் செய்யும் காரியங்களை கவனிக்கிறார். நீங்கள் அவர் மேல் வைக்கும் நம்பிக்கையை அவர் அறிந்திருக்கிறார். '..இந்த நகரத்தின்மேல் நன்மையாக அல்ல, தீமையாகவே வரப்பண்ணுவேன்.. ஆனால் அந்நாளிலே உன்னைத் தப்புவிப்பேன்' என்று சொல்லி அதன்படியே எபெத்மெலேக்கை தப்புவித்த தேவன், இன்றும் நாம் செய்யும் காரியங்களையும், நாம் அவர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையையும் கவனித்து, தீங்கு நாளில் நம்மையும் காப்பாற்றுவார். நமக்கு தீங்கு வரும் நாளில் நெருக்கடி நேரத்தில் நம்மை காப்பாற்ற தேவன் வல்லமையுள்ளவராகவே இருக்கிறார். நாம் தேவன் மேல் வைக்கும் நம்பிக்கையை விட்டுவிடாமலும், அவருக்காக செய்யும் எந்த செயலையும் யாரும் கவனிக்கவில்லையே என்று சோர்ந்து போகாமலும், தொடர்ந்து செய்வோம். யார் கவனிக்காவிட்டாலும், தேவன் நம்மை காண்கிறார். நம்முடைய செயல்களுக்கு அவர் பதிலளிப்பார்.
ஆமென் அல்லேலூயா!
நன்றி :அனுதின மன்னா

No comments:
Post a Comment