தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. - (எபிரேயர் 4:12).
வேதாகமம் தன்னை பல பொருட்களோடு ஒப்புமைப்படுத்தியுளளது. அவைகள் நம்முடைய அன்றாட வாழ்க்கை மற்றும் உலக நடப்புகளில் காணப்படுபவைகள். இப்படி வேதாகமம் கூறும் ஒப்பீடுகளை சிந்தித்து நம் கையிலுள்ள வேதத்தின் மகத்துவங்களை இன்னும் நன்றாக புரிந்து கொள்வோம்.
தீபம்: (சங்கீதம் 119: 105)
தேவனுடைய வார்த்தையான வேத புததகம் நாம் போகும் வாழ்க்கை என்னும் பாதைக்கு வழிகாட்டும் தீபத்திற்கு ஒப்பிடப்பட்டுள்ளது. ஆம், வேதம் நம் அன்றாட வாழ்விற்கு வழி காட்டுகிறது. தீபம் என்பது, பெரிய விளக்கு அல்ல, ஒரு சிறிய விளக்கே ஆகும். இதன் அர்த்தம் என்ன? இருளான ஒரு பாதையில் நடக்க ஒரு சில அடிகள் மட்டும் வெளிச்சம் தெரிந்தாலே போதும், அதை கொண்டு நாம் முன்னேறி, நமது இலக்கை அடைந்து விடலாம். அது போல வேதமும் படிப்படியாக நம்மை நடத்தும் என்பதே அதன் அர்த்தம்.
பால்: (1 பேதுரு 2:3)
அப்போஸ்தலனாகிய பேதுரு இங்கு ஞானப்பால் என்று குறிப்பிடுவது வேதாகமத்தையே ஆகும். பாலின் முக்கிய பயன் என்ன? அது வளர்ச்சிக்கு உதவும். பாலில் ஆரோக்கியமாக வளரத் தேவையான சமச்சீரான சத்துக்கள் அனைத்தும் உள்ளடங்கியுள்ளன. எலும்புகளும், தசைகளும், சீராய் வளர இது மிகவும் முக்கியம். அதுப்போல ஆவிக்குரிய முதிர்ச்சியை நோக்கி வளர வேதாகமம் ஒன்றே வழி. பால் என்று சொல்வதினால் நாம் எப்போதும் ஒரு ஆவிக்குரிய குழந்தையை போலவே இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. ஆனால் குழந்தையை போல ஒரு தாகம் எப்போதும் நமக்கு வசனத்தின் மீது இருக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.
வாள் அல்லது பட்டயம்: (எபேசியர் 6:17)
வாள் என்பது போருக்கு பயன்படும் ஒரு கருவி. வாளின்றி ஒரு போர்வீரன் போருக்கு செல்வது முட்டாள்தனம். நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கை சமாதானம் நிறைந்ததாக இருந்தாலும் அதற்கு ஒரு மற்றொரு பக்கமும் உண்டு. அது யுத்தம். என்ன யுத்தம் அது? தேவனுக்கு விரோதியான சாத்தான் அவரை விட்டு நம்மை பிரிப்பதிலே தீவிர முயற்சி எடுத்துக் கொண்டே இருப்பான். ஆகவே அவனிடம் போராடும் ஒரு யுத்தம், வாழ்க்கை முழுக்க உண்டு. பிசாசானவன் நம்மை வீழ்த்தவும், சோதிக்கவும் பயன்படுத்தும் தந்திரங்கள் அனைத்தும் வேதத்திலே குறிப்பிடப்பட்டுள்தால், நாம் வசனத்தை தியானிக்க, தியானிக்க இன்னும் விழிப்புள்ளவர்களாக மாறுவோம். மேலும் வேதத்திலுள்ள வாக்குதத்தங்களையும், வசனங்களையும் வைத்து அவனை ஜெயிக்க முடியும். குறிப்பாக வசனங்களை மனப்பாடம் செய்து நம் இருதயத்தில் வைத்திருப்போமானால் அது பிசாசிற்கு விரோதமான ஒரு ஆயுத கிடங்காக மாறும்.
விதை: (லூக்கா 8:11)
விதையின் மகத்துவம் என்ன? அதில் ஜீவன் உண்டு. ஒரு விதை பார்ப்பதற்கு பிரமிப்பூட்டுவதாய் இராது. ஆனால் இரகசியம் உள்ளே உள்ளது. வேதாகமத்தையும் மேற்பக்கமாக பார்க்கும்போது அது பரவசத்தை தூண்டாத ஒரு பழைய கறுப்பு புத்தகம் போல பலருக்கு தோன்றும். ஆனால் நாம் அதை புரிந்து தியானிக்கும்போது விதைக்குள்ளிருந்து பெரிய மரம் வளருவதை போல வேதமும் நமக்கும், நம்மை சுற்றியுள்ள சமுதாயத்திற்கும் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வரும். வசனமாகிய விதை நமக்குள் விதைக்கப்பட்டு வளர்ந்து கனி கொடுக்கும்போது நமது வாழ்க்கை முறைகள் மாறும். புதிய சுபாவங்கள் நம்மை மூடும்.
வேதத்தின் இந்த ஒப்பீடுகள் என்றும் உஙகள் இருதயத்திலே இருக்கட்டும். வேத வசனங்கள் நம்மை மகிமையான நித்திய இராஜ்யம் வரை நம்மை காக்கும்.
ஆமென் அல்லேலூயா!
நன்றி- அனுதின மன்னா

No comments:
Post a Comment